Kamareddy: ‘தெலங்கானாவில் பாஜக விஸ்பரூபம்! முன்னாள் இந்நாள் முதல்வரை வீழ்த்தி அபாரம்!’
”Telangana Election Results 2023: தெலுங்கானாவில் உள்ள கமரெட்டி சட்டமன்றத் தொகுதியில் கே.சி.ஆர், கே.வெங்கட ரமண ரெட்டி மற்றும் ரேவந்த் ரெட்டி இடையே மும்முனை போட்டி நிலவியது”
காமரெட்டி தொகுதியில் முன்னாள் வேட்பாளரான கேசிஆர் மற்றும் வருங்கால முதலமைச்சர் என அழைக்கப்படும் காங்கிரஸ் வேட்பாளர் ரேவந்த் ரெட்டி ஆகியோரை வீழ்த்தி உள்ளார் பாஜக வேட்பாளர் கட்டபள்ளி வெங்கட ரமணரெட்டி.
119 தொகுதிகளை கொண்ட தெங்கானா மாநிலத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சிக்கும், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா (BJP) கட்சிகள் போட்டியிட்டன.
3.17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள இந்த தேர்தலில் 221 பெண் வேட்பாளர்கள், ஒரு திருநங்கை வேட்பாளர் உட்பட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் உட்பட 109 கட்சிகளை சேர்ந்த 2,290 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த 103 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த முறை போட்டியிட மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்தவர்.
முதலமைச்சர் சந்திரசேகரர் ராவ் கஜ்வெல் மற்றும் காமரெட்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். காமரெட்டி தொகுதியில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டியும், கஜ்வெல் தொகுதியில் பாஜக தலைவர் எட்டலா ராஜேந்தரும் கேசிஆருக்கு எதிராக களம் இறங்கினர்.
இந்த நிலையில், 66652 பெற்று 6741 வாக்குகள் வித்தியாசத்தில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கேசிஆரை பாஜக வேட்பாளரான வெங்கட்ட ரமண ரெட்டி வீழ்த்தி உள்ளார். இத்தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான ரேவந்த் ரெட்டியும் 54916 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளார்.
காலை முதல் காமரெட்டி தொகுதியில் முன்னிலை நிலவரம் மாறி மாறி வந்தது. தொடக்கத்தில் கேசிஆர் முன்னிலையில் இருந்த நிலையில், பிற்பகலுக்கு மேல் காங்கிரஸ் வேட்பாளர் ரேவந்த் ரெட்டி முன்னிலை வகித்தார். இந்த நிலையில் தற்போது பாஜக வேட்பாளர் வெங்கட்ட ரமண ரெட்டி முன்னிலையில் இருந்தனர்.
கேசிஆர் போட்டியிட்டுள்ள மற்றொரு தொகுதியான கஜ்வெல் தொகுதியில் 26626 பாஜக வேட்பாளரான எட்டல ராஜேந்திரை பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்று உள்ளார்.
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பி.ஆர்.எஸ் கட்சி 39 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், AIMIM கட்சி 7 இடங்களிலும், சிபிஐ கட்சி ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளது.