தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Baby Was Born During The Turkey Earthquake

Earthquake : மனதை உலுக்கும் பச்சிளம் குழந்தை புகைப்படம்.. மீளா துயரில் துருக்கி!

Divya Sekar HT Tamil
Feb 07, 2023 12:28 PM IST

Turkey Earthquake : துருக்கி நிலநடுக்கத்தின் போது பிறந்த குழந்தையின் புகைப்படம் வெளியாகி காண்போர் கண்களை குளமாக்கியது.

நிலநடுக்கத்தின் போது பிறந்த குழந்தை.
நிலநடுக்கத்தின் போது பிறந்த குழந்தை.

ட்ரெண்டிங் செய்திகள்

நிலநடுக்கத்தின்போது துருக்கியின் காசியான்டெப், கஹ்ராமன்மாராஸ், தியர்பகீர், அடானா, மாலத்யா, கிலிஸ் உள்ளிட்ட நகரங்களில் வானுயர குடியிருப்பு கட்டிடங்கள், அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சரிந்து நொடிப்பொழுதில் இடிந்து தரைமட்டமாகின.

அதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கம் தலைநகர் அங்காரா மற்றும் துருக்கியின் பிற நகரங்களிலும், பல்வேறு பகுதியிலும் உணரப்பட்டது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. மக்களும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.நிலநடுக்கத்தில் தற்போது வரை 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இதையடுத்து துருக்கி அரசு 7 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்நிலையில், மேலும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.

இதனிடையே இந்த நிலநடுக்கத்தில் சிக்கி மக்கள் அவதிபடும் நிலையில் இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி காண்போர் கண்களை குளமாக்கி வருகிறது.

இந்நிலை இப்படி வெளியான புகைப்படங்களில் பச்சிளம் குழந்தை ஒன்றின் புகைப்படம் வெளியாகி அனைவரின் மனதையும் உலுக்கியது. இந்த புகைப்படத்தை டுவிட்டரில் ரீம் களனி என்பவர் பதிவிட்டிருந்தார். அப்பதிவில். ”நிலநடுக்கத்தின் போது பிறந்த குழந்தை. குழந்தை நலமாக உள்ளது. ஆனால் அவரின் தாய் உயிரிழந்தார்”என புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்