தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Nasa: பூமி நோக்கி அசுர வேகத்தில் வரும் சிறுகோள் - அதன் வேகம் தெரியுமா?

NASA: பூமி நோக்கி அசுர வேகத்தில் வரும் சிறுகோள் - அதன் வேகம் தெரியுமா?

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 05, 2023 11:40 AM IST

பூமியை நோக்கி சிறிய கோள் ஒன்று 67 ஆயிரத்து 656 கிலோ மீட்டர் உச்சக்கட்ட வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.

சிறுகோள்
சிறுகோள்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால் வளிமண்டலத்திற்கு உள்ளே வரும் அந்த கோள்கள் சிறிது நேரத்திலேயே எரிந்து பொசுங்கிவிடும். இல்லையென்றால் உடைந்து சிதறி விடும். அதிலும் அரிதாக சில சிறிய கோள்கள் அல்லது இரு நட்சத்திரங்கள் பூமியை நோக்கி வரும்.

அதிகபட்சம் அதனால் நமக்குப் பாதிப்பு ஏற்படாவிட்டாலும், சில சமயங்களில் அதனால் பெரிய தாக்கமும் ஏற்பட்டுள்ளன. அப்படி சிறிய கோள்கள் பூமியின் மீது ஏற்படுத்திய தாக்குதல் பல உள்ளன. தற்போது வரை பூமியில் இருக்கும் மிகப்பெரிய பள்ளங்கள் அதற்குச் சாட்சியாகும்.

அந்த சிறிய கோள்கள் பாறை பணி அல்லது உலோகங்களால் உருவாக்கி இருக்கும். இது போன்ற சிறு கோள்கள் பூமியை நோக்கி வரும்போது அதனை உற்று நோக்கி அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி கழகம் கவனித்துக் கொண்டிருக்கும்.

தற்போது 67 ஆயிரத்து 656 கிலோமீட்டர் என்ற உச்சக்கட்ட அதிபயங்கர வேகத்தில் 150 ஐடி விட்டம் கொண்ட ஒரு சிறிய கோள் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. ஒரு விமானத்தின் அளவு கொண்ட பாறையினாலான இந்த சிறிய கோள் நாளை பூமியை நோக்கி நெருங்கி வரும் என நாசா விண்வெளி ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

இந்த சிறிய கோள் சுமார் 26 லட்சத்து 10 ஆயிரம் மயில் தொலைவில் பூமிக்கு அருகில் வந்து விட்டுச் செல்லும் இதனால் எந்த பாதிப்பும் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் அந்த சிறிய கோவில் சென்றாலும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் பார்வையில் பூமியில் நெருங்கி வருவது போல் தான் தோன்றும். இதனால் எந்த ஆபத்தும் கிடையாது என்பதே இதில் மகிழ்ச்சியான செய்தியாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்