’Exit Poll எல்லாம் பம்மாத்த்து!’ அனுமான் சர்வாதிகாரத்தை அழிப்பார் என சிறைக்கு செல்லும் முன் கெஜ்ரிவால் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ’Exit Poll எல்லாம் பம்மாத்த்து!’ அனுமான் சர்வாதிகாரத்தை அழிப்பார் என சிறைக்கு செல்லும் முன் கெஜ்ரிவால் பேட்டி!

’Exit Poll எல்லாம் பம்மாத்த்து!’ அனுமான் சர்வாதிகாரத்தை அழிப்பார் என சிறைக்கு செல்லும் முன் கெஜ்ரிவால் பேட்டி!

Kathiravan V HT Tamil
Jun 02, 2024 05:29 PM IST

"நான் ராஜ்காட்டில் வழிபாடு செய்தேன். சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வர காந்திஜி எங்களுக்கு உத்வேகம் அளித்தார். ஹனுமான் கோவிலுக்குச் சென்றேன். பஜ்ரங்பலியின் ஆசிர்வாதம் எனக்கு உள்ளது. ஜூன் 4 செவ்வாய்க்கிழமை. பஜ்ரங்பலி சர்வாதிகாரத்தை அழிப்பார் என்று கெஜ்ரிவால் பேசினார்.

’Exit Poll எல்லாம் பம்மாத்த்து!’ அனுமான் சர்வாதிகாரத்தை அழிப்பார் என சிறைக்கு செல்லும் முன் கெஜ்ரிவால் பேட்டி!
’Exit Poll எல்லாம் பம்மாத்த்து!’ அனுமான் சர்வாதிகாரத்தை அழிப்பார் என சிறைக்கு செல்லும் முன் கெஜ்ரிவால் பேட்டி! (PTI)

தாய் தந்தையிடம் ஆசி பெற்ற கெஜ்ரிவால் 

டெல்லி கலால் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையாக் லைது செய்யப்பட்ட நிலையில், மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனில் கெஜ்ரிவால் மே 10 ஆம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். நேற்றோடு அவருக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் காலம் நிறைவு பெற்ற நிலையில், இன்று திகார் சிறைக்கு செல்வதற்கு முன்னர் தனது வீட்டில் தாய் மற்றும் தந்தையின் காலில் விழுந்து கெஜ்ரிவால் ஆசி பெற்றார். 

மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை 

பின்னர் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய கெஜ்ரிவால், அனுமன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் சென்ற அவர், திகார் சிறையில் சரணடைவதற்கு முன்பு ஆம் ஆத்மி தொண்டர்கள் மற்றும் தலைவர்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நான் மீண்டும் சிறைக்கு செல்வது ஊழலில் ஈடுபட்டதால் அல்ல, சர்வாதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுத்ததால் தான் என கூறினார்.

கருத்து கணிப்புகள் போலியானவை 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்ட அனைத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் "போலியானவை"  என்று கூறிய அவர், "நேற்று, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளிவந்தன, அவை போலியானவை, நான் உங்களுக்கு எழுத்துப்பூர்வமாக கொடுக்க முடியும். ராஜஸ்தானில் மொத்தம் 25 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. ஆனால் ஒரு கருத்துக் கணிப்பில் 33 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. போலியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட என்ன காரணம்?" என்று பாஜகவை குறிவைத்து அவர் கேள்வி எழுப்பினார்.

பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைப்பார் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் சனிக்கிழமை கணித்துள்ளன.

அவர்கள் ஜூன் 4-ம் தேதி ஆட்சி அமைக்கப் போவதில்லை. இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் உங்களை மன அழுத்தத்திற்கு தள்ளும் மன விளையாட்டுகள்" என்று கெஜ்ரிவால் பேசினார். 

வாக்கு எண்ணும் மையத்தில் கவனமாக இருக்க வேண்டும் 

"அனைத்து இந்தியா கூட்டணி கட்சிகளையும் விழிப்புடன் இருக்கவும், அவர்களின் வாக்கு எண்ணும் போது முகவர்களை முன்கூட்டியே வெளியேற விடக்கூடாது என்றும் நான் கூறியுள்ளேன். ஈ.வி.எம் இயந்திரங்களில் வாக்குகள் மற்றும் வி.வி.பி.ஏ.டி எண்ணப்படும் போது எண்ணும் முகவர்கள் கடைசி வரை இருக்க வேண்டும். வேட்பாளர் தோற்றாலும் அவர்கள் கடைசி வரை வாக்கு எண்ணும் மையத்தில் இருக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கூறினார்.

அனுமான் சர்வாதிகாரத்தை அழிப்பார் 

"உச்ச நீதிமன்றம் எனக்கு 21 நாள் ஜாமீன் வழங்கியது முடியாதது. நான் ஒரு நிமிடம் கூட வீணாக்கவில்லை. நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று பிரச்சாரம் செய்தேன். ஆம் ஆத்மி முக்கியமல்ல, அது இரண்டாம் பட்சம்தான். நாடுதான்  முதலில் முக்கியம் என்று கெஜ்ரிவால் கூறினார். 

"நான் ராஜ்காட்டில் வழிபாடு செய்தேன். சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வர காந்திஜி எங்களுக்கு உத்வேகம் அளித்தார். ஹனுமான் கோவிலுக்குச் சென்றேன். பஜ்ரங்பலியின் ஆசிர்வாதம் எனக்கு உள்ளது. ஜூன் 4 செவ்வாய்க்கிழமை. பஜ்ரங்பலி சர்வாதிகாரத்தை அழிப்பார் என்று கெஜ்ரிவால் பேசினார். 

Whats_app_banner
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.