Amit Shah: மனைவியுடன் அமித் ஷா விசிட் செய்த ஆசிரமம்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Amit Shah: மனைவியுடன் அமித் ஷா விசிட் செய்த ஆசிரமம்!

Amit Shah: மனைவியுடன் அமித் ஷா விசிட் செய்த ஆசிரமம்!

Manigandan K T HT Tamil
Feb 05, 2023 03:54 PM IST

Union Home Minister Amit Shah: தேவ்கர் மாவட்டத்தில் ரூ.450 கோடியில் அமைக்கப்படவிருக்கும் நானோ தொழில்நுட்ப அடிப்படையிலான யூரியா தயாரிப்பு ஆலைக்கும் மத்திய அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.

தேவ்கரில் உள்ள ஆசிரமத்தில் மனைவியுடன் மத்திய அமைச்சர் அமித் ஷா
தேவ்கரில் உள்ள ஆசிரமத்தில் மனைவியுடன் மத்திய அமைச்சர் அமித் ஷா (Amit Shah Twitter)

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமித் ஷா, நேற்று பாஜக சார்பில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

தேவ்கர் மாவட்டத்தில் ரூ.450 கோடியில் அமைக்கப்படவிருக்கும் நானோ தொழில்நுட்ப அடிப்படையிலான யூரியா தயாரிப்பு ஆலைக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

தாக்குர் அனுகுல் சந்திரா என்பவர் 1888ஆம் ஆண்டு பிறந்தார். அவர்தான் இந்த ஆசிரமத்தை நிறுவினார். கிழக்கு இந்தியாவில் ஒரு முக்கிய ஆன்மீக மையமாகத் திகழ்கிறது.

ஒரு நாள் பயணமாக ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வந்த அமித் ஷா, அவரது மனைவியுடன் இந்த ஆசிரமத்துக்கு சென்றார்.

அங்குள்ள பாபா வைத்தியநாதர் கோயிலில் வழிபாடு செய்தார் அமித் ஷா.

முன்னதாக, முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு இந்தியாவில் "மிகவும் ஊழல் நிறைந்த அரசு" என பாஜக பேரணியில் பேசியபோது அமித் ஷா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "ஜம்தாரா மற்றும் தேவ்கர் சைபர் கிரைம் மையமாகிவிட்டன. ஆனால் (முதல்வர்) ஹேமந்த் சோரன், இந்திய அரசின் அனைத்து உதவிகளையும் புறக்கணித்துவிட்டார். 2024ல், 14 தொகுதிகளிலும், சட்டமன்றத் தேர்தலிலும் முழுப் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெறும்." என்றார் அமித் ஷா.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.