India: இந்தியாவில் 138 சூதாட்ட செயலிக்கு தடை - மத்திய அரசு அதிரடி உத்தரவு
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  India: இந்தியாவில் 138 சூதாட்ட செயலிக்கு தடை - மத்திய அரசு அதிரடி உத்தரவு

India: இந்தியாவில் 138 சூதாட்ட செயலிக்கு தடை - மத்திய அரசு அதிரடி உத்தரவு

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 05, 2023 03:25 PM IST

சீனாவின்138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழக்கும் செயலிகளை அவசர நிலை அடிப்படையில் தடைசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கும் பணிகளை மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் துவக்கி உள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் பலருடைய உடலின் அங்கமாகவே மாறிவிடும் அளவிற்கு 'ஸ்மார்ட் போன்'களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பலரும் 'ஆன்லைன்' விளையாட்டு செயலிகளை விரும்பி பதிவிறக்கம் செய்து விளையாடி வருகிறார்கள். 'ஆன்லைன்' விளையாட்டுகளில் இளைஞர்களின் திறமைக்கு சவால்விடும் வகையில், பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கின்றன. அதில் 'ரம்மி' போன்ற சூதாட்டம் விளையாடுகிறவர்களின் மனங்களை வசியம் செய்து மயக்குவதுடன், பண ஆசை காட்டியும் ஈர்க்கிறது. இந்த விளையாட்டுகளில் பண இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று அந்த நிறுவனங்களே எச்சரிக்கை விடுக்கின்றன. ஆனால் எப்படியாவது ஒருமுறை வெற்றி பெற்றுவிடலாம். இழந்த பணத்தை மீட்டுவிடலாம்' என்ற நம்பிக்கை வெறியோடு பலர் தொடர்ந்து பணத்தை இழந்து வருகிறார்கள். சேமித்த பணத்தை இழந்து கடனாளியானவர்கள் தற்கொலை முடிவை தேடுகிறார்கள். தமிழகத்தில் மட்டும் ஆன்லைன் சூதாட்டங்களில் இதுவரை 25க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதுபோல் நாட்டின் பல பகுதிகளிலும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்தான் சூதாட்ட செயலிகளை தடை செய்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தால் மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இதில் சீனாவின்138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழக்கும் செயலிகளை அவசர நிலை அடிப்படையில் தடைசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கும் பணிகளை மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் துவக்கி உள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு 6 மாதங்களுக்கு முன் 288 சீன செயலிகளை ஆய்வு செய்யத் தொடங்கியது. இந்த ஆய்வில் இந்திய மக்களின் தனிப்பட்ட தரவுகளை சீன செயலி எடுத்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை முடக்கவும் தடை செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.