தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime: பகை இத்தனை ஆண்டு தொடருமா? - பட்டப்பகலில் வழக்கறிஞர் கொலை

Crime: பகை இத்தனை ஆண்டு தொடருமா? - பட்டப்பகலில் வழக்கறிஞர் கொலை

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 02, 2023 07:42 PM IST

டெல்லியில் 36 ஆண்டு பகையின் காரணமாகப் பட்டப்பகலில் வழக்கறிஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

கொலை
கொலை

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த கொலையானது 36 ஆண்டு பகை காரணமாக நடந்திருப்பதாகவும், வழக்கறிஞர் வீரேந்தர் குமாருக்கும், பிரதீப்புக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்த காரணத்தினால் இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாக காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதீப் என்பவரின் மாமாவை வழக்கறிஞர் வீரேந்தர் குமாரின் தாத்தா 1987 ஆம் ஆண்டு கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அதேசமயம் பிரதீப்புக்குக் கிடைக்க வேண்டிய இழப்பீடுகளில் வழக்கறிஞர் வீரேந்தர் குமார் சில சட்ட தடங்கல்களை ஏற்படுத்தி அதைத் தடுத்ததாகக் கூறப்படுகிறது. அதற்குப் பிறகு பிரதீப் பண சிக்கல்களில் தவித்து வந்துள்ளார்.

அதன் பிறகு இருவருக்கும் இடையே விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்கறிஞர் வீரந்திரகுமாரை பிரதீப் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால் அப்பொழுது வழக்கறிஞர் வீரேந்தர் உயிர் தப்பியுள்ளார்.

அதன்பின்னர் வழக்கறிஞர் வீரேந்தர் குமாருக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் கொரோனா காலகட்டத்தில் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. தற்போது சமயம் பார்த்து நேற்று வழக்கறிஞர் வீரந்தர் குமாரை கொலை செய்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

வழக்கறிஞர் பட்டப் பகலில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சக வழக்கறிஞர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு நீதி கேட்டு நாளை டெல்லியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்த உள்ளனர்.

வழக்கறிஞர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் வடக்கு டெல்லி வழக்கறிஞர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்