உங்கள் உணவில் வாரத்தில் இருமுறை கொண்டைக்கடலை இருக்கவேண்டும்! ஏன் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உங்கள் உணவில் வாரத்தில் இருமுறை கொண்டைக்கடலை இருக்கவேண்டும்! ஏன் தெரியுமா?

உங்கள் உணவில் வாரத்தில் இருமுறை கொண்டைக்கடலை இருக்கவேண்டும்! ஏன் தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Oct 07, 2024 12:04 PM IST

உங்கள் உணவில் வாரத்தில் இருமுறை கொண்டைக்கடலை இருக்கவேண்டும். ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் உணவில் வாரத்தில் இருமுறை கொண்டைக்கடலை இருக்கவேண்டும். ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் உணவில் வாரத்தில் இருமுறை கொண்டைக்கடலை இருக்கவேண்டும். ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தாவர அடிப்படையிலான புரதம்

கொண்டைக்கடலையில் அதிகளவில் தாவரப் புரதச்சத்துக்கள் உள்ளது. இதை சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு சிறந்த புரத உணவாக அது மாற்றுகிறது. ஒரு கப் கொண்டைக்கடலையில் 15 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலில் தசைகளை சரிசெய்ய உதவுகிறது. ஆரோக்கியமான திசுக்களை வளர்த்து, ஒட்டுமொத்த உடலுக்கும் தேவையான பலத்தைக் கொடுக்கிறது.

உடல் எடை மேலாண்மை

நீங்கள் உங்கள் உடல் எடையை முறையாக பராமரிக்க விரும்பினால், கொண்டைக்கடலையை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இதில் அதிக புரதச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்களுக்கு கொண்டைக்கடலை சாப்பிடும்போது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. இதனால் நீங்கள் உணவுகளுக்கு இடையில் ஸ்னாக்ஸ் சாப்பிடும் பழக்கத்தை தடுக்கிறது. இது நீங்கள் கலோரிகள் எடுத்துக்கொள்ளும் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன்மூலம் உங்களுக்கு உடல் எடை இழப்பு மற்றும் உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.

எலும்பு ஆரோக்கியம்

கொண்டைக்கடலையில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளன. இது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை காக்க மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே உங்கள் எலும்பு அடரத்தியை அதிகரிக்க கட்டாயம் வாரத்தில் இருமுறை உங்கள் உணவில் கொண்டைக்கடலையைச் சேர்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு எலும்புப்புரை நோய்கள் ஏற்படாமல் காக்கும். உங்களுக்கு வயது அதிகரிக்கும்போது, அது உங்களின் எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கிறது. கொண்டைக்கடலையில் உள்ள மெக்னீசியச்சத்துக்கள், உங்கள் உடல் கால்சியத்தை உறிஞ்ச உதவுகிறது. உங்கள் எலும்பு ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

செரிமான ஆரோக்கியம்

கொண்டைக்கடலையில் நார்ச்சத்துக்கள் உள்ளது. அது உங்களுக்கு ஆரோக்கியமான செரிமானத்தை ஏற்படுத்துகிறது. கொண்டைக்கடலையில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உங்களின் குடல் முறையாக இயங்குவதை உறுதிசெய்கிறது. மலச்சிக்கலைத் தடுக்கிறது. கொண்டைக்கடலையை உணவில் சேர்த்துக்கொள்வதை வழக்கமாக்கிக்கொண்டால், அது உங்கள் குடல் ஆரோக்கியத்தை காக்கிறது. உங்கள் செரிமான கோளாறுகளை சரிசெய்கிறது. வயிறு உப்புசம் மற்றும் செரிமானமின்மை போன்ற பிரச்னைகளைத் தடுக்கிறது.

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைப்பதால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. கொண்டைக்கடலையில் பொட்டாசியம், மெக்னிசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உங்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உங்கள் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. உங்கள் உணவில் கொண்டடைக்கடலை அடிக்கடி சேர்த்துக்கொள்வதால் உங்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படாமல் காக்க உதவுகிறது.

ரத்த சர்க்கரை அளவைக் காக்க உதவுகிறது

கொண்டைக்கடலை லோ கிளைசமிக் இண்டன்ஸ் உணவுகளில் உள்ளது. அதற்கு அவை ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக கலக்கச் செய்யும் என்று பொருள். இது உங்கள் ரத்த சர்க்கரை அளவை முறையாகப் பராமரிக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு கொண்டைக்கடலை சிறந்த தேர்வாக உள்ளது. கொண்டைக்கடலையை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வதைக் கட்டுப்படுத்துகிறது.

முக்கிய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது

கொண்டைக்கடலையில் உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களான இரும்புச்சத்துக்கள், சிங்க் சத்துக்கள், ஃபோலேட்கள் மற்றும் பி வைட்டமின்கள் உள்ளது. இதில் உள்ள இரும்புச்சத்துக்கள் அனீமியாவைத் தடுக்க உதவுகிறது. கர்ப்பிணிகளுக்கு ஃபோலேட்கள் மிகவும் முக்கியமானவையாகும். அது கரு நன்றாக வளர உதவுகிறது. எனவே உங்கள் அன்றாட உணவில் கொண்டைக்கடலை சேர்ப்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். இது உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும். உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பாற்றல்

கொண்டைக்கடலையில் உள்ள சிங்க் சத்துக்கள் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்பட சிங்க் சத்துக்கள் தேவை. இது உங்கள் காயங்களை விரைந்து ஆற்றும் தன்மைகொண்டது. எனவே நீங்கள் தொடர்ந்து கொண்டைக்கடலை சாப்பிடுவது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவும். உங்கள் ஆரோக்கியம் மற்றும் தொற்றுக்களை எதிர்த்து போராடுவதற்கு கொண்டைக்கடலை உதவுகிறது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.