‘இதையெல்லாம் செய்யக்கூடாது‘ உங்கள் குழந்தைகளுக்கு சில நேரங்களில் ‘நோ’ சொல்லியே ஆகவேண்டும்! எதற்கு தெரியுமா?
உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சில நேரங்களில் நோ சொல்லியும் ஆகவேண்டும். அது எதற்கு என்று பாருங்கள்.
நீங்கள் சில நேரங்களில் உங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் ‘நோ’ சொல்லியே ஆக வேண்டும். அது எதற்கு என்று தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஏன் ‘நோ’ சொல்லவேண்டும்? பேரன்டிங்கில் இது முக்கியமான அங்கமாகும். இது உங்கள் குழந்தைகளுக்கு அன்றாடங்களை எவ்வாறு பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கும் என்பதால், இது மிகவும் அவசியம். அவர்கள் பொறுப்பு எடுத்துக்கொள்ளவும், எதிர்காலத்துக்கு தயாராகிக்கொள்ளவும் இது அவர்களுக்கு உதவும்.
காரணமற்ற தேவைகள்
குழந்தைகளுக்கு தேவையற்ற விஷயங்களுக்கு நீங்கள் கூடாது என்று சொல்லிவிடவேண்டும். நடக்க இயலாத காரியங்களை அவர்கள் செய்ய முயலும்போது அதை நீங்கள் தடுத்துதான் ஆகவேண்டும். அவர்கள் விரும்பி நாய் வளர்த்தால், நீங்கள் அதற்கு கூடாது என்று சொல்லித்தான் ஆகவேண்டும். ஏனென்றால், அவர்கள் அதை பாதுகாக்க மாட்டார்கள். எனவே அது அவர்களுக்கு தேவையில்லாதது. இது அவர்களுக்கு எது சரி அல்லது எது தவறு என்பதைக் கற்றுக்கொடுக்கும்.
அதிக திரை நேரம்
உங்கள் குழந்தைகள் அதிக நேரம் திரையை பார்த்தால் நீங்கள் அதை அனுமதிக்கக்கூடாது. அப்போது நோ சொல்ல நீங்கள் தயங்கக் கூடாது. அதிகம் அவர்கள் திரையில் மூழ்கிக்கிடந்தால் அவர்களால் மற்றவர்களுடன் தொடர்புகொள்ள முடியாமல் போகும். இது அவர்களை மிகவும் பாதிக்கும் என்பதால், அவர்களை அதிகம் ஃபோன் பார்க்க அனுமதிக்கக்கூடாது.
விலையுயர்ந்த விளையாட்டு சாமான்கள்
குழந்தைகளுக்கு பொம்மைகள்தான் மிகவும் பிடித்தவை. ஆனாலும் அவர்கள் அதிக விலைக்கு கேட்கும் விளையாட்டு சாமான்களையெல்லாம் வாங்கித் தரக்கூடாது. மேலும் அவர்களுக்கு பணத்தின் மதிப்பையும் கற்றுக்கொடுக்கவேணடும். எனவே விலையுயர்ந்த விளையாட்டு பொருட்களை வாங்கித் தரக்கூடாது.
மற்றவர்களை வம்பிழுத்தல்
உங்கள் குழந்தைகள் மற்றவர்களை வம்பிழுத்தால், அவர்களை காயப்படுத்தினால், அவர்களை உடனே அதை நிறுத்துமாறு கூறிவிடவேண்டும். நோ கூறுவது அவர்களுக்கு அனுதாபம் ஏற்பட காரணமாகிறது. மேலும் நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொள்ள உதவுகிறது. எனவே மற்றவர்களை எந்த வகையிலும் புண்படுத்தும்படி நடந்துகொள்ளக் கூடாது என்று உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறுங்கள்.
ஆரோக்கியமற்ற பழக்கங்கள்
உங்கள் குழந்தைகள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுக்கு பதில், ஆரோக்கியமற்ற குப்பை உணவுகளை சாப்பிட வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் அதற்கு நோ கூறவேண்டும். இது அவர்களுக்கு ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கொண்டுவரும். எனவே குப்பை உணவுகளுக்கு நீங்கள் எப்போதும் பெரிய நோ கூறலாம்.
அதிக அர்ப்பணிப்பு
குழந்தைகள் அதிகப்படியான விளையாட்டு உள்ளிட்ட கூடுதல் கரிக்குலர் வகுப்புக்களில் சேர விரும்பினால் அதற்கு நோ கூறவேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் நோ சொல்லும்போது அவர்களுக்கு வாழ்க்கையை எப்படி பேலன்ஸ் செய்து கொண்டு செல்லவேண்டும் என்பது புரியும். எப்படி முன்னுரிமை கொடுப்பது மற்றும் அவர்களின் நேரத்தை எப்படி செலவிடுவது என்பது தெரியும்.
எல்லை
மற்றவர்களின் தனிப்பட்ட விருப்பங்களில் தலையிட உங்கள் குழந்தைகள் முயலும்போது, நீங்கள் அவர்களுக்கு நீங்கள் கட்டாயம் நோ சொல்லவேண்டும். அதாவது மற்றவர்களின் டைரிகளை படிக்கக்கூடாது என்பது போன்றவை அது. அடுத்தவர்களின் தனிப்பட்ட எல்லைகளை மதிக்கவேண்டும். அவர்களின் உரிமைகளையும் மதிக்கவேண்டும் என்று நீங்கள் குழ்ந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தால், அவர்களுக்கு தனிப்பட்ட எல்லைகள் உள்ளது என்பதை உணர்ந்துகொள்ள அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் இலக்குகள் உதவும்.
தேவையற்ற படங்கள்
குழந்தைகளின் வயதுக்கு பொருந்தாத நிகழ்வுகள் உள்ள சினிமாக்கள் மற்றும் விளையாட்டுக்களை தவிர்க்கலாம். இது உங்கள் குழந்தைகளுக்கு தேவையற்ற விஷயங்களை கற்றுக்கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தும். இது அவர்களுக்கு சரியான தேர்வுகளை தேர்ந்தெடுக்க உதவும்.
மற்றவர்களின் அழுத்தம்
உங்கள் குழந்தைகளுக்கு, அவர்களின் வயதையொத்த மற்ற குழந்தைகள் செய்ய முயல்வதற்கு நீங்கள் நோ சொல்ல வேண்டும். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க உதவும். இது அவர்களை தனிப்பட்ட நபர்களாக வளர்த்து எடுக்கும். அவர்கள் பொறுப்பான தேர்வுகளை செய்வதற்கு உதவும்.
உணர்வு ரீதியிலான பழக்கங்கள்
உங்கள் குழந்தைகள் தொடர்ந்து அவர்கள் மீதே கவனம் செலுத்தவேண்டும் என்று எண்ணினாலோ அல்லது ஒவ்வொன்றுக்கும் நீங்கள் அவர்களின் அருகில் இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தாலோ அவர்களுக்கு நீங்கள் நோ சொல்ல வேண்டியது கட்டாயம். இது அவர்களை எதிர்கால சவால்களுக்கு தங்களை தயார் செய்துகொள்ள உதவும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்