பால்கனியிலே வளர்க்கலாம் பப்பாளி; வீட்டிலே இனி ஆரோக்கியம் கிடைக்கும்! எத்தனை எளிதானது பாருங்கள்!
பால்கனியிலே பப்பாளிச் செடி வளர்ப்பது எப்படி என்று பாருங்கள்.
பால்கனியே போதும் பப்பாளிப்பழத்தை வீட்டிலேயே வளர்க்க முடியும். அது எப்படி என்று பாருங்கள். மண்ணில் விதைப்பது எப்படி என்று பாருங்கள். பப்பாளி விதைகளை வெயிலில் உலர்த்தவேண்டும். பப்பாளி பழத்தில் இருந்து எடுக்கப்பட்ட விதைகளை எடுத்து நன்றாக காயவைத்து விதைக்கவேண்டும். இந்த விதைகளை விதைக்கும் மண் மிகவும் தரமானதாக இருக்கவேண்டும். மண்ணில் இருந்துதான் செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். எனவே நல்ல மண்ணை நீங்கள் நர்சரி கார்டனில் இருந்து வாங்கிக்கொள்ளுங்கள்.
சூரிய ஒளி
பப்பாளி செடிக்கு முழு சூரிய ஒளி வேண்டும். எனவே அதை நீங்கள் நன்றாக வெயில் படும் இடத்தில் வைக்கவேண்டும். எனவே ஜன்னலின் அருகே வைக்கவேண்டும். தினமும் 6 முதல் 8 மணி நேரம் கட்டாயம் பப்பாளிச் செடிக்கு நேரடி வெயில் கிடைக்கவேண்டும்.
தண்ணீர்
பப்பாளி செடிக்கு நிறைய தண்ணீர் வேண்டும். மண் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கவேண்டும். தொட்டியில் உள்ள மண்ணை வறண்டு போகவிடக்கூடாது. எனவே கவனமாக அதிகம் தண்ணீர் விடாமலும் இருக்கவேண்டும். ஏனெனில் வேர் அழுகிவிடும். தேவையான அளவு தண்ணீரை பார்த்துவிடவேண்டும்.
உரமிடுதல்
வேப்பங்கொட்டைகளை மண்ணில் தூவவேண்டும். சாணம் இடவேண்டும். அப்போதுதான் பூச்சிகள் வராது. எனவே மண்ணிற்கு தேவையான ஆர்கானிக் உரம் இடவேண்டும். குறிப்பாக பழம் பழுக்கம் காலத்தில் உரம் தேவை.
வெட்டுதல்
நீங்கள் வீட்டுக்குள் பப்பாளி தாவரத்தை வைத்து வளர்க்கும்போது, அது வேகமாக வளர்ந்து உயரமாகி, உங்கள் வீட்டின் மேற்கூரையை எட்டிவிடும். எனவே அதை நீங்கள் வெட்டுவது மிகவும் முக்கியம். இந்த தாவரத்துக்கு வெட்டிவிடுவது நல்லது. குறிப்பாக அதன் தண்டுகளை வெட்டவேண்டும்.
செடிக்கு துணை
நீங்கள் தொட்டியில் வைத்து பப்பாளிச் செடியை வைத்து வளர்க்கும்போது, அது சாய்ந்துவிட வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கு அருகில் துணையாக ஒரு குச்சியை நட்டுவைக்கவேண்டும். அப்போதுதான் அந்த பப்பாளிச் செடி வளரும்.
அறுவடை
நீங்கள் பழம் வரும் பப்பாளி மரத்தை நட்டு வைத்திருந்தீர்கள் என்றால், உங்களுக்கு 6 மாதத்தில் பழம் கிடைக்கவேண்டும். எனவே அந்த அளவுக்கு பராமரிக்கவேண்டும்.
குள்ள பப்பாளி
உங்கள் வீட்டு பால்கனியில் இடம் இல்லையென்றால், நீங்கள் குள்ள பப்பாளி செடியை தேர்ந்தெடுத்து வாங்கி வளர்க்கலாம். இதிலே எண்ணற்ற வகை பப்பாளிகள் உள்ளது.
எந்த நேரத்தில் விதைக்கவேண்டும்?
பப்பாளி ஆண்டு முழுவதும் காய் தரும் ஒரு செடியாகும். ஆனால் இதை நீங்கள் அக்டோபர் முதல் நவம்பர் காலங்களில் விதைப்பது நல்லது. ஒரு குளிரான சூழல் பப்பாளிச் செடிக்கு வேண்டும். மேலும் சூடு காரணமான அடுத்த ஆறு மாதத்தில் வரும் கோடை காலத்தில் நல்ல விளைச்சலைத் தரும்.
எத்தனை ஆண்டுகள் வாழும்
ஒரு பப்பாளி மரம் 5 ஆண்டுகள் பழம் தரும். எனவே நீங்கள் ஒரு செடியை நட்டுவிட்டு 5 ஆண்டுகள் முடிந்தால் அடுத்த விதைகளை தேர்ந்தெடுத்து விதைத்து அடுத்த செடியை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
சருமத்துக்கு பப்பாளி மிகவும் நல்லது. பப்பாளியை பழமாக மட்டுமின்றி காயாகவும் நீங்கள் பொரித்து சாப்பிடலாம். எனவே பப்பாளி வீட்டில் இருப்பது நல்லது தான். இடம் இல்லாவிட்டால்கூட தொட்டியில் வைத்தோ அல்லது பால்கனியிலோ வளர்த்துக்கொள்ளுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்