World Theatre Day 2024 : உலக அரங்க தின வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்னவென்று தெரிந்துகொள்ளலாமா?-world theatre day 2024 what is the history and significance of world theatre day - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  World Theatre Day 2024 : உலக அரங்க தின வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்னவென்று தெரிந்துகொள்ளலாமா?

World Theatre Day 2024 : உலக அரங்க தின வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்னவென்று தெரிந்துகொள்ளலாமா?

Priyadarshini R HT Tamil
Mar 27, 2024 05:30 AM IST

World Theatre Day 2024 : இதையொட்டி, அந்த நாளில் வெவ்வேறு உலக நாடுகளில் உள்ள ஐ.டி.ஐ. மையங்களில் நாடகம், நாட்டியம், இசை-நாடகம் மற்றும் அந்தந்தப் பிரதேசத்தின் கிராமிய நிகழ்கலைகள் முதலியவை விமரிசையாக நிகழ்த்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

World Theatre Day 2024 : உலக அரங்க தின வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்னவென்று தெரிந்துகொள்ளலாமா?
World Theatre Day 2024 : உலக அரங்க தின வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்னவென்று தெரிந்துகொள்ளலாமா?

இன்று நாம் திரையில் ரசித்துக்கொண்டிருக்கும் பெரும்பாலான பிரபலங்களும், அவர்களின் தடங்களை மேடை நாடகங்களில் பதித்தவர்கள்தான். மேடைகளில் சாதித்த பின்னர்தான் அவர்கள் சினிமாவுக்கே வந்தவர்கள். 5ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஏதென்ஸில் அக்ரோபோலியிஸில் உள்ள டையோனிசஸ் என்ற மேடையில் தான் நடைபெற்றது. அங்கிருந்து மேடை நாடகங்கள் பிரபலமானது. அங்கிருந்துதான் கிரீஸின் மற்ற பகுதிகளுக்கும் மேடை நாடகம் பரவியது.

உலக நாடக அரங்க தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது.

வரலாறு மற்றும் முக்கியத்துவம்

1961ம் ஆண்டு, சர்வதேச மேடை நாடக அரங்க மையம் (ஐ.டி.ஐ) ஒவ்வொரு ஆண்டும் அரங்க நாடகங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒரு நாள் இருக்க வேண்டும். அந்த நாளில் பல கொண்டாட்டங்கள் நிகழவேண்டும் என்று வலியுறுத்தியது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், சிறந்த நடாக மேடை நடிகரை நினைவுகூறும் வகையில் நடத்தப்படுகிறது. ஐ.டி.ஐக்கு உலகம் முழுவதிலும், 85 மையங்கள் உள்ளது. 1962ம் ஆண்டு வழங்கப்பட்ட முதல் செய்தியை வழங்கியவர், ஜீன் காக்டியூ. நடிப்பு மற்றும் கதை கூறுவதை நாடகமாக மக்கள் நினைத்துக்கொள்கிறார்கள்.

அதில் எழுத்தாளர், இயக்குனர், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், ஒளி அமைப்பவர்கள், மேடை அமைப்பவர்கள், நாடகத்துக்கு அழைப்பவர் என பலர் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்துதான் கடுமையாக உழைத்து நாடகங்களை சிறப்பாக்குவார்கள்.

உலக அரங்க நாடக தினத்தை நாம் கடைபிடிப்பதன் நோக்கமே, விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான். நமது வாழ்வில் நாடக அரங்கங்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறுவது, அரங்க நாடங்கள் ஒரு கலை வடிவம் மற்றும் அதில் கலந்துகொள்பவர்கள் நேரடியாக கலந்துகொள்கிறார்கள். நடிகர்கள், அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் என அனைத்துமே உண்மைதான்.

ஆனால் இன்று சினிமா திரையரங்கங்கள் வந்தவுடன், குறிப்பாக நெட்பிளிக்ஸ், அமேசான் போன்றவையும் வந்தவுடன், அரங்க நாடகங்களின் முக்கியத்துவமும் முன்புபோல் இல்லை. உலக அரங்க நாடக தினம், ஒரு இயக்கமாக துவங்கியது. பின்னர், அது ஒரு புதிய பாதையில் பயணித்தது. 

ஒருவருடைய வாழ்க்கையில் நாடகம் முக்கிய பங்கு வகிக்கிறது, இது ஒரு நபர் மற்றும் சமூகத்தின் மீது ஆரோக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, ஏனெனில் பெரும்பாலான கருப்பொருள்கள் நிஜ வாழ்க்கை நிகழ்வுகளுடன் வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளன.

உலக நாடக அரங்க தினம் அதாவது World Theatre Day. 1962ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி பாரீசில் துவங்கிய ‘தியேட்டர் ஆஃப் நேஷன்ஸ்’திருவிழாவை நினைவுகூறும் வகையில் அந்த தினத்தையே ஒவ்வொரு ஆண்டும் உலக அரங்க தினமாகக் கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதையொட்டி, அந்த நாளில் வெவ்வேறு உலக நாடுகளில் உள்ள ஐ.டி.ஐ. மையங்களில் நாடகம், நாட்டியம், இசை-நாடகம் மற்றும் அந்தந்தப் பிரதேசத்தின் கிராமிய நிகழ்கலைகள் முதலியவை விமரிசையாக நிகழ்த்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.