உலக சேலை தினம்.. கைத்தறி சேலைகள் முதல் ஆரணி பட்டு வரை.. சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
World Saree Day 2024: உலக சேலை தினத்தையொட்டி, தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கைத்தறி சேலைகள் முதல் ஆரணி பட்டு சேலைகள் வரை டாப் 5 சேலை ரகங்கள் பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.
ஆரம்பத்தில் பட்டு சேலைகள் பிரபலமாக இருந்தன. பருத்தி அணிந்தால் மரியாதை குறைவாக கருதி புறக்கணிந்தனர். வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் ஆராய்சியாளர்களின் கூற்றுப்படி, 80 வகையான சேலை ரகங்கள் நடைமுறையில் உள்ளன. அழகான சேலையை உருவாக்கும் நெசவாளர்களின் உழைப்பை கெளரவப்படுத்தும் விதமாகவும் எதிர்வரும் தலைமுறையினர் நமது கலாச்சாரங்களில் ஒன்றான சேலையின் பெருமைகளை அறிந்து கொள்ளவும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21 ஆம் தேதி அன்று சர்வதேச சேலை தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் உலக சேலை தினமான இன்று தமிழகத்தின் பாரம்பரிய சேலைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
கைத்தறி சேலைகள்
பருத்தி நூலில் நெய்யப்படும் சேலைகள் விலை குறைவாகவும் அணிவதற்கு வசதியாகவும் இருக்கும். அந்தவகையில், தமிழ்நாட்டு பெண்களின் பாரம்பரிய உடையாக கைத்தறி சேலைகள் உள்ளன. கைத்தறி சேலைகள் பருத்து மற்றும் பட்டு நூல்களால் தயாரிக்கப்படுகின்றன. பருத்தி நூலில் நெய்யப்படும் சேலைகள் விலை குறைவாகவும் அணிவதற்கு வசதியாகவும் இருக்கும்.
மதுரை சுங்குடி சேலை
மதுரையின் பாரம்பரிய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிப்பவை சுங்குடி சேலை. பருத்தி இழைகளுடன் பட்டுச் ஜரிகை இழைகளையும் சேர்த்து நெய்யப்படுவதே சுங்கடி. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 10,000 க்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாக சுங்குடி சேலை உள்ளது.
காஞ்சிபுரம் பட்டு
காஞ்சிபுரம் பட்டு புடவைகள் நுணுக்கமான வேலைப்பாடு நிறைந்தவை. இங்கு பட்டுச் சேலைகள் 'கோர்த்து வாங்கும் முறை, கோர்த்து வாங்காத சாதாரண வாட் முறை' என இரண்டு முறைகளில் நெய்யப்படுகின்றன. பட்டுச் சேலைகளில் பயன்படுத்தப்படும் ஜரிகையின் தரம்தான் சேலையின் தரம். பெரும்பாலான காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளில் இருபுறமும் ஜரிகை பார்டர் இருக்கும், ஜரிகை பார்டர் இரண்டு முதல் எட்டு அங்குலம் அகலம் கொண்டதாக இருக்கும். காஞ்சிவரம் பட்டுப்புடவைகள் முழுக்க மல்பெரி பட்டு நூலினால் செய்யப்படுகிறது. இது தென்னிந்திய பட்டுப் புடவையாகும். சேலை மற்றும் முந்தியை தனியே நெய்து சேர்ப்பது இங்குள்ள வழக்கம். காஞ்சிவரம், காஞ்சிபுரம், காஞ்சி பட்டு புடவைகள் அனைத்தும் ஒரே புடவையின் மாறுபாடுகள்.
கோயம்புத்தூர் கோராப்பட்டு
எளிய மக்களின் கெளரவ ஆடையாக கருதப்படுகிறது கோயம்புத்தூர் கோராப்பட்டு. பட்டுக்கூட்டினை வேக வைக்காமல் அப்படியே நூலாக்கி அதன்மூலம் நெய்ப்படும் பட்டும், காட்டனும் இணைந்து தயாரிக்கப்படுவது தான் கோராப்பட்டு. பெரிய பெரிய டிசைன் பட்டுச் சேலைகள் தான் கோவை கோராப்பட்டுச் சேலைகளின் சிறப்பம்சம் ஆகும். தென்னகத்தின் காலநிலைக்கு ஏற்ற விதத்தில் இருப்பதால் இது பெண்களால் மிகவும் ஆர்வத்துடன் வாங்கப்படுகிறது.
ஆரணி பட்டு
1970-கள் வரை ஆரணிப்பட்டுப் புடவைகள் என்றாலே, அது "டாபி பட்டுச்சேலை" என்ற ஒரிழை பட்டுச் சேலைகள்தான். 70-களில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி காரணமாக தமிழகத்தில் நடுத்தர வர்க்கத்தினரிடம் மேல்தட்டு மக்கள் அணிந்த பட்டுச் சேலையை உடுத்த வேண்டும் என்ற விருப்பம் வந்தது. நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்ட காஞ்சிபுரம் பட்டுச்சேலைகளின் விலை அதிகம், எடையும் கூடுதலாக இருக்கும். காஞ்சிபுரம் பட்டுச்சேலைகளில் இருக்கும் டபுள் சைட் (மேலும் கீழும்) பார்டரைப் போலவே கோர்வை எனப்படும் பட்டுச்சேலைகள் ஆரணியில் உருவாக்கப்பட்டன.
டாபிக்ஸ்