அனைத்து வயதினருக்கும் பிடித்தமான உணவு..உலகின் மிகப் பெரிய சாண்ட்விச் எடை தெரியுமா? சாண்ட்விச் தினம் பற்றிய சுவாரஸ்யங்கள்
World Sandwich Day 2024: அனைத்து வயதினருக்கும் பிடித்தமான உணவாக இருந்து வரும் சாண்ட்விச் மிக நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது. சாண்ட்விச் பற்றி சுவாரஸ்ய விஷயங்களும், உலகின் மிக பெரிய சாண்ட்விச் எடை உள்பட பல விஷயங்களை பார்க்கலாம்
தேசிய சாண்ட்விச் தினம் என்பது பலருக்கும் மிகவும் பிரியமான மற்றும் பல்வேறு வகைகளில் சமைத்து ருசிக்கூடிய சாண்ட்விச்சின் சுவையான கொண்டாட்டமாக உள்ளது. இந்த நாள் உலகம் முழுவதும் பல்வேறு சுவைகளில் அனுபவிக்கப்படும் பல வகையான சாண்ட்விச்களை அங்கீகரிக்கும் விதமாக உள்ளது. மக்கள், குறிப்பாக சாண்ட்விச் பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான சாண்ட்விச்களை ருசிக்க அல்லது புதிய சுவைகளை ஆராய ஊக்குவிக்கிறது.
தேசிய சாண்ட்விச் தினம்
தேசிய சாண்ட்விச் தினம் என்பது சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய உணவு அல்லது ஸ்நாக்ஸ் வகைகளில் ஒன்றாக இருக்கும் சாண்ட்விச் கௌரவிக்கும் நாளாக உள்ளது. இந்த நாளில் சாண்ட்விச் பிரியர்கள் தங்களுக்குப் பிடித்த கலவை சாண்ட்விச்களை அனுபவிக்கவும், உணவகங்களில் தங்கள் சாண்ட்விச் சிறப்புகளைக் காட்சிப்படுத்தவும் வாய்ப்பை வழங்குகிறது.
ஆண்டுதோறும் நவம்பர் ஆம் தேதி தேசிய சாண்ட்விச் தினம் கொண்டாடப்படுகிறது. உங்களுக்குப் பிடித்த சாண்ட்விச் கடைக்குச் சென்று அதை சுவைத்து மகிழவும் அல்லது வீட்டில் சாண்ட்விச் விருந்து தயாரிக்க இது ஒரு அருமையான நாளாக அமைகிறது.
தேசிய சாண்ட்விச் தினம் வரலாறு
தேசிய சாண்ட்விச் தினத்தின் வரலாற்றை சாண்ட்விச்சின் கண்டுபிடிப்பிலேயே காணலாம். ரொட்டித் துண்டுகளுக்கு இடையில் பொருட்களை வைத்து சாப்பிடும் பழக்கம் 18ஆம் நூற்றாண்டில் சாண்ட்விச்சை கண்டுபிடித்தவராக கருதப்படும் ஜான் மாண்டேகுவிடமிருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது. சூதாட்டத்தின் போது பாத்திரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக அவர் இறைச்சிகளை ரொட்டித் துண்டுகளுக்கு இடையில் வைத்து பரிமாறியுள்ளார். இந்த நவீன சாண்ட்விச் பெற்றெடுக்க காரணமாக அமைந்தது என சாண்ட்விச் பற்றி வரலாறு கூறப்படுகிறது.
காலப்போக்கில், சாண்ட்விச்கள் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் உணவு வகைகளின் பிரதானமாக மாறிவிட்டன. அத்துடன் உலகின் அநேக பகுதிகளில் கிடைக்கும் பொது உணவாகவே மாறியுள்ளது.
சாண்ட்விச் சுவாரஸ்ய தகவல்கள்
- உலகின் மிகப்பெரிய சாண்ட்விச்சின் எடை 5,440 பவுண்டுகள் ஆகும்.
- 607 சாண்ட்விச்கள், ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்ட அதிக சாண்ட்விச்களுக்கான சாதனையாக பார்க்கப்படுகிறது. பிரிட்டிஷ் சாண்ட்விச் சங்கம் இதை சாதித்துள்ளது
- இதுவரை விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த சாண்ட்விச்சின் விலை 28,000 அமெரிக்க டாலர் ஆகும். அது ஒரு வறுக்கப்பட்ட டோஸ்ட் சாண்ட்விச் ஆக உள்ளது
- ஒரு சாண்ட்விச்சில் குறைந்தது 35% சமைத்த இறைச்சி இருக்க வேண்டும் மற்றும் 50% ரொட்டிக்கு மேல் இருக்கக்கூடாது
தேசிய சாண்ட்விச் தினம் கொண்டாட்டம்
- தேசிய சாண்ட்விச் தினத்தை கொண்டாடுவது மகிழ்ச்சிகரமான மற்றும் சுவையான அனுபவமாக இருக்கும். இந்த உணவு விடுமுறையை அனுபவிக்க சில வழிகள்:
- சரியான சாண்ட்விச்சை தயாரித்து உண்ணுதல்: உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப சிறந்த சாண்ட்விச் கலவையை வடிவமைக்க பல்வேறு பொருட்கள், மற்றும் ரொட்டியுடன் பரிசோதனை செய்யலாம்
- உள்ளூர் சாண்ட்விச் கடைக்குச் செல்லுதல்: தனித்துவமான மற்றும் சுவையான சாண்ட்விச் விருப்பங்களை வழங்கும் சாண்ட்விச் கடைகளுக்கு தனியாகவோ, நண்பர்களுடனோ அல்லது பார்ட்னருடனோ சென்று சுவைத்து மகிழுதல்
- சாண்ட்விச் பார்ட்டியை நடத்துதல்: நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை சாண்ட்விச் தயாரிக்கும் பார்ட்டிக்கு அழைத்து, அனைவரும் ஒன்றிணைந்து தனித்துவமான சாண்ட்விச் தயார் செய்து பரிமாறி கொள்ளலாம்
- சர்வதேச சாண்ட்விச்களை முயற்சித்தல்: வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் உணவு வகைகளிலிருந்து பழக்கமான சுவைகள் மற்றும் மாதிரி சாண்ட்விச்களுக்கு அப்பால் முயற்சி செய்து அதை ருசித்து மகிழலாம்
டாபிக்ஸ்