அனைத்து வயதினரையும் கவர்ந்த உணவு..உலகளாவிய அளவில் பிணைப்பை ஏற்படுத்தும் முட்டை! உலக முட்டை தினம் வரலாறு, பின்னணி
அனைத்து வயதினரையும் கவர்ந்த உணவாக இருந்து வருகிறது முட்டை. உலகளாவிய அளவில் பிணைப்பை ஏற்படுத்தும் உணவான முட்டையில் இருக்கும் நன்மையும், அதன் தொழிலை முன்னேற்றுவதற்கான வாய்ப்பாகவும் உலக முட்டை தினம் கொண்டாடப்படுகிறது.
உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் இன்றியமையாத பங்களிப்பை தரும் முட்டை, உலகளாவிய உணவுகளில் ஒன்றாக இருந்து வரும் அதன் பங்களிப்பை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 11ஆம் தேதி உலக முட்டை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் வரலாறு, முக்கியத்துவம், பின்னணி குறித்த சில முக்கிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்
உலக முட்டை தினம் 2024 தேதி
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டில் உலக முட்டை தினம் அக்டோபர் 11ஆம் தேதி நிகழ்கிறது.
உலக முட்டை தினம் வரலாறு
மனித உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு ஆகியவற்றில் முட்டையின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்கான வருடாந்திர வாய்ப்பாக, முட்டைத் தொழிலை முன்னேற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட நாளாக உலக முட்டை தினம் அமைகிறது. உலகளாவிய அமைப்பான சர்வதேச முட்டை ஆணையத்தால் 1996ஆம் ஆண்டு உலக முட்டை தினம் நிறுவப்பட்டது.
முட்டைகளின் மதிப்பைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உயர்தர புரதம், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றின் மூலமாக அவற்றை உட்கொள்வதை ஊக்குவிக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது
உலக முட்டை தினம் முக்கியத்துவம்
முட்டைகள் உயர்தர புரதம், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த ஆதாரமாக மட்டுமல்லாமல், சமச்சீரான உணவாகவும் இருக்கிறது. உணவுப் பாதுகாப்புக்கு பங்களிப்பு அளித்து, எளிதில் கிடைக்கக்கூடிய மற்றும் ஊட்டச்சத்துக்கான ஆதாரமாக இருப்பதால், உலக முட்டை தினம் குறிப்பிடத்தக்க நாளாக திகழ்கிறது.
கூடுதலாக, முட்டைகள் ஒரு நிலையான உணவு ஆதாரமாகும். இது மற்ற புரதங்களுடன் ஒப்பிடுகையில் மூளை வளர்ச்சியை ஆதரிப்பது, சில நோய்களின் அபாயத்தைக் குறைப்பது மற்றும் எடை மேலாண்மைக்கு உதவுவது உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
சர்வதேச முட்டை ஆணையத்தின் தலைவர் கிரெக் ஹிண்டன், “உலக முட்டை தினம் முட்டையை நம்பமுடியாத தனித்துவமான, அணுகக்கூடிய உணவு பொருளாகவும் மாற்றியுள்ளது. மலிவு விலையில் புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் ஆதாரத்தை பெறக்கூடிய உணவாகவும் முட்டை கொண்டாடப்படுகிறது.
முட்டைகள் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகளை எதிர்த்துப் போராடுவதோடு உடலுக்கு உகந்த ஆரோக்கியம் மற்றும் செயல்திறனுக்கு முக்கியமானதாக திகழ்கிறது. அவற்றின் ஊட்டச்சத்து சக்திகளுக்கு அப்பால், முட்டைகள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் நிலையான விலங்கு மூல புரதங்களில் ஒன்றாகும்" என கூறியுள்ளார்.
உலக முட்டை தினம் கொண்டாட்டம்
சர்வதேச முட்டை ஆணையத்தின் கூற்றுப்படி, 1996இல் நடந்த முதல் நிகழ்விலிருந்து, உலக முட்டை தின கொண்டாட்டங்கள் வளர்ந்து பரிணாம வளர்ச்சியடைந்துள்ளன. கடந்த ஆண்டு உலகம் முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட நாடுகள் உலக முட்டை தினத்தை சமூக ஊடகங்களில் கொண்டாடியுள்ளது. பல்வேறு நிகழ்வுகள், போட்டிகள், டிஜிட்டல் பிரச்சாரங்கள் மற்றும் சிறப்பு தினத்தைக் குறிக்கும் திருவிழாக்கள் மூலம் இந்த நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது
உலக முட்டை தினம் 2024 கருபொருள்
2024 உலக முட்டை தினத்தின் கருப்பொருள் ஆக "முட்டைகளால் ஒன்றுபடுவோம்" என்பதாகும். உலகின் பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட நாடுகளில் உள்ள உணவு வகைகளில் முட்டைகள் இன்றையமையாமல் இருப்பதை ை காணலாம் என்பதால் இந்த கருபொருள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது உலகளாவிய அளவில் முட்டையின் ஊட்டச்சத்து நன்மைகளுக்கு சான்றாகவும் உள்ளது.
தினமும் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
13 விதமான வைட்டமின்கள் & தாதுக்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த புரத சக்தி கொண்டிருக்கும் முட்டை, காலை உணவுக்கான சிறந்த தேர்வாக உள்ளது. காலை உணவில் முட்டைகளை சாப்பிடுவது, நீண்ட நேரம் நிறைவாக உணர வைப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான ரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவையும் பராமரிக்க உதவுகிறது என்று சுகாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முட்டை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இயற்கையான உணவு ஆதாரங்களில் ஒன்றாகும். இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துதல், உடல் ஆரோக்கியத்தை ஆதரிப்பது முதல் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவது வரை பல்வேறு நன்மைளை கொண்டிருக்கிறது
முட்டைகளின் அதிக ஊட்டச்சத்து அடர்த்தி உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மேம்பட்ட உடல் வளர்ச்சியை ஆதரிக்க உதவுகிறது. வேகவைத்த முட்டையில் சுமார் 77 கலோரிகள் உள்ளன மற்றும் வைட்டமின் A, B5, B12, B6, D, E, K மற்றும் ஃபோலேட், பாஸ்பரஸ், செலினியம், கால்சியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் மற்றும் 6 கிராம் புரதம் மற்றும் 5 கிராம் இதய ஆரோக்கியமான கொழுப்பு (5 கிராம்) உள்ளது.
கோலின் நிறைந்தது: மூட்டையில் இடம்பிடித்துக்கும் கோலின், நீரில் கரையக்கூடிய வைட்டமின் செல் சவ்வுகளை உருவாக்க பயன்படுகிறது மற்றும் மூளையில் சமிக்ஞை மூலக்கூறுகளை உருவாக்க உதவுகிறது. ஒரு கடின வேகவைத்த முட்டையில் சுமார் 417 மில்லிகிராம் அளவுக்கு இந்த கோலின் உள்ளது.
பார்வைதிறனை மேம்படுத்துகிறது: லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் நிறைந்த முட்டையின் மஞ்சள் கரு, கண்புரை மற்றும் கண்களில் தசை சிதைவு அபாயத்தைக் குறைக்கும் ஒரு பயனுள்ள ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. முட்டையில் வைட்டமின் ஏ ஏராளமாக உள்ளது, இது தெளிவான பார்வை திறனை பெற தேவையான முக்கியமான வைட்டமினாக உள்ளது.
புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்களின் சேமிப்புக் கிடங்கு: ஒரு முட்டையில் சுமார் 6 கிராம் அளவில் தரமான புரதம் உள்ளது, இது எடையைக் கட்டுப்படுத்தவும், தசை நிறையை அதிகரிக்கவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.
அதிக அளவு ஒமேகா 3 அமிலம்: இதயம், மூளை ஆரோக்கியம் மற்றும் கண்களைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒமேகா 3 அத்தியாவசிய கொழுப்புகளின் அளவை மேம்படுத்த முட்டை உதவுகிறது.
மனநிறைவு மற்றும் எடை மேலாண்மை: அவை கலோரிகளில் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், வயிறு நிரம்பிய திருப்திய தருகிறது.
டாபிக்ஸ்