Fava Beans Benefits : புரதம் முதல் நார்ச்சத்து வரை ஒரு கைப்பிடி மொச்சையில் இத்தனை சத்துக்களா? தினம் ஒரு தானியம் அறிவோம்!
Fava Beans Benefits : புரதம் முதல் நார்ச்சத்து வரை ஒரு கைப்பிடி மொச்சையில் இத்தனை சத்துக்களா? தினம் ஒரு தானியம் அறிவோம்!
மொச்சைப் பருப்பு, காய்ந்தும் இருக்கும். பச்சை மொச்சையாகவும் இருக்கும். இதில் ஆரோக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடல் எடை குறைப்பிலும், சில உடல் உபாததைகளை சரிசெய்வதற்கும் உதவுகிறது. உடல் ஆரோக்கியமாக வளர உதவுகிறது.
புரதம்
ஒரு கப் வேக வைத்த மொச்சையில் உங்களுக்கு ஒரு நாளைக்கு தேவையான புரதச்சத்தில் மூன்றில் ஒரு பங்கு உள்ளது. புரதம், உங்கள் உணவின் முக்கிய ஊட்டச்சத்துக்களுள் ஒன்று.
அதிக புரதச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொண்டால் அது உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. புரதச்சத்துக்கள் நீங்கள் வளரவும், உங்கள் தசைகளை பராமரிக்கவும் உதவுகிறது.
சைவ உணவுப்பிரியர்கள் மற்றும் லாக்டோஸ் ஏற்றுக்கொள்ளாதவர்களால் விலங்குகளின் இறைச்சி, சீஸ் மற்றும் முட்டைகளில் இருந்து கிடைக்கும் புரதச்சத்து எடுத்துக்கொள்ள முடியாது. அவர்கள் தங்கள் உணவுகளில் மொச்சையை சேர்த்துக்கொண்டால் அவர்களுக்கு தேவையான புரதச்சத்து கிடைக்கும்.
ஃபோலேட்
ஒரு கப் மொச்சையில் உங்கள் தினசரி ஃபோலேட் தேவையின் பாதியளவு கிடைக்கிறது. ஃபோலேட் என்பது ஒரு வகை வைட்டமின் அது உங்கள் உடலில் டிஎன்ஏக்கள் உருவாக உதவுகிறது. புதிய செல்களை உருவாக்குகிறது.
ஃபோலேட், கர்ப்பிணிகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. போதிய அளவு ஃபோலேட் உணவில் சேர்த்துக்கொள்வது மூளை தொடர்பான பிறக்கும்போது ஏற்படும் கோளாறுகளை தடுக்கிறது.
மாங்கனீஸ்
மொச்சையில் மாங்கனீஸ் சத்து அதிகம் உள்ளது. உங்கள் உடல் எலும்பு கட்டமைப்பை உருவாக்குவதற்கு மாங்கனீசை பயன்படுத்துகிறது. உங்கள் உணவில்ல போதிய அளவு மாங்கனீஸ் சத்துக்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால், அது எலும்பு புரை நோயை தடுக்கும்.
எலும்பு தொடர்பான மற்ற பிரச்னைகளையும் போக்கும். ஒரு கப் மொச்சையில் ஒரு நாளுக்கு தேவையான மாங்கனீஸ் சத்து மூன்றில் ஒரு பங்கு உள்ளது.
மாங்கனீஸ், உங்கள் உடல் குளுக்கோஸை செரிக்க உதவுகிறது. இதுதான் உங்கள் உடலுக்கு சக்தியை அளிப்பதில் முக்கியமான ஊட்டச்சத்து. உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், உங்கள் உடலால் குளுக்கோஸை முழுமையாக செரிக்க முடியாது.
எனவே போதிய அளவு மாங்கனீஸ் எடுத்துக்கொள்வது உங்கள் உடலில் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்புக்களை குறைக்கிறது.
நார்ச்சத்துக்கள்
மொச்சையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நார்ச்சத்து உடலில் உணவை செரிக்க வைக்கும் ஒரு ஊட்டச்சத்து. ஆரோக்கிய குளுக்கோஸ் அளவை பாராமரிக்கிறது. உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.
கொழுப்பு உங்கள் உடலில் இயற்கையாகவே சேரும் ஒரு வேதிப்பொருள். அது உணவிலும் உள்ளது. எண்ணெய் மற்றும் விலங்கு உணவுகளில் இருந்து உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு, உங்கள் தமனியில் சேர்கிறது.
இதனால் இதயத்துக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு, உங்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பிற பிரச்னைகள் ஏற்படுகிறது. போதிய நார்ச்சத்துக்கள் உணவில் எடுத்துக்கொள்வது உங்கள் தமனிகளில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.
இரும்புச்சத்து
மொச்சையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. நீங்கள் சுவாசிக்கும்போது, ஆக்ஸிஜனில் இருந்து உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதில் இரும்புச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உணவில் போதிய அளவு இரும்புச்சத்து எடுத்துக்கொள்ளவில்லையென்றால், அது அனீமியா அதாவது ரத்த சோகை ஏற்பட காரணமாகிறது.
உங்கள் உடலுக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் சத்து கிடைக்காதபோது உங்களுக்கு அனீமியா ஏற்படுகிறது. இதனால் உடலில் அதிகளவில் சோர்வு ஏற்படுகிறது. நோய் எதிர்ப்புத்திறன் குறைகிறது. வயிறு தொடர்பான பிரச்னைகளும் ஏற்படுகிறது. மொச்சை எடுத்துக்கொள்வது உங்களின் தினசரி இரும்பு அளவை எட்ட உதவுகிறது.
என்னதான் மொச்சையில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், இதை சாப்பிடும்போது சில தீமைகளும் ஏற்படுகின்றன. அவை என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்.
செரிமான கோளாறுகளை ஏற்படுத்துகிறது
மொச்சை சாப்பிடும்போது வயிறு உப்புசம் மற்றும் வாயுத்தொல்லை ஏற்படுகிறது. இதனால் உங்களுக்கு அசௌகர்யங்கள் ஏற்படுகிறது. எனவே குறைவான அளவு மொச்சையை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரே நேரத்தில் அதிகம் உண்ணாமல் கொஞ்சம், கொஞ்சமாக எடுத்துக்கொள்வது நல்லது. இது வயிறு உப்புசம் மற்றும் வாயுத்தொல்லையை சரிசெய்யும்.
இது மரபணு கோளாறுகள் உள்ளவர்களுக்கு இதயத்துடிப்பை அதிகரித்து, மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. இது ஃபாவிசம் என்று அழைக்கப்படுகிறது. இது உயிராபத்தை ஏற்படுத்தாது. குழந்தைகளுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தும். எனவே மரபணு கோளாறுகள் உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.