World Day for Safety and Health at Work : பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கான உலக நாளின் முக்கியத்துவம்!
World Day for Safety and Health at Work : பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கான உலக நாளின் முக்கியத்துவம், வரலாறு மற்றும் அந்நாளில் செய்யவேண்டிய செயல்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
பணியாளர் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கான உலக நாள் ஏப்ரல் 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் பணி தொடர்பான விபத்துக்கள் மற்றும் வியாதிகளை தடுப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பணியாளர்களுக்கும் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலை உலகளவில் உறுதியளிப்பது இந்நாளின் நோக்கமாகும்.
பணியாளர்கள், தொழிலாளிகள் மற்றும் அரசுகளுக்கு இந்த நாள், ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறது. அவர்கள் ஒன்றிணைந்து, பாதுகாப்பான பணியிடத்தை உருவாக்குவதற்கு தேவையான முயற்சிகளை எடுக்கவேண்டும். இந்த நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்து மேலும் தெரிந்துகொள்வோம்.
முக்கியத்துவம்
தற்போது ஏற்பட்ட தொற்று கால சூழலில் பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கான உலக நாளின் முக்கியத்துவம் உணரப்படுகிறது. பணியிடத்தில் விபத்துக்கள் மற்றும் தொற்றுகள் பொது சுகாதாரத்தில் முக்கியத்துவம் பெருகின்றன.
இதனால் ஆண்டுக்கு 2.3 மில்லியன் உயிரிழப்பு ஏற்படுகிறது. இது பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கான தேவை அதிகம் உள்ளதை நினைவூட்டுகிறது. மேலும் இழப்புகள் மற்றும் துன்பங்கள் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.
வரலாறு
ஐநா சர்வதேச தொழிலாளர் சட்டங்களை வலியுறுத்துகிறது. பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கான உலக நாளின் முன்னோடி பங்காற்றுகிறது.
இந்த நாள் 2003ம் ஆண்டு, பணித்தொடர்பான விபத்துக்களில் ஏற்படும் மரணங்கள் மற்றும் நோய்களுக்கு பலியாகும் உயிர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்பட்டது. இந்த நாள், பணியின்போது பாதிக்கப்பட்ட மற்றும் மரணித்தவர்களை நினைவுகூறும் நாளில் வருவது தற்செயலானது.
இந்த நாளில் நாம் கடைபிடிக்க வேண்டியது
இந்த நாளில் பணியாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு நிகழ்வுகளை நடத்தவேண்டும். இதுகுறித்த உரையாடல், ஊடகம் வாயிலாக விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு தொடர்பான குறிப்பிட்ட நிகழ்வுகளை ஒருங்கிணைக்க வேண்டும்.
பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இதற்கு உள்ளூர் அளவில் அரசுகள், பணியிடங்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும்.
பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்கக் கூடிய கொள்கைகளை அரசுகள் வகுக்க வேண்டும் மற்றும் நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும். இது பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
பணியாளர்கள், அரசுகள், தொழிலாளர்களளை ஒன்று கூட்டவேண்டும். இது பாதுகாப்பு பிரச்னைகள் மற்றும் பாதுகாப்பான பணியிடங்களை முன்னெடுக்க வேண்டும்.
எனவே இந்த நாளில் நாம் பணியாளர்களுக்கு தேவையான போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முன்வரவேண்டும்.
இந்த நாளில் பணியாளர்கள், அரசுகள் மற்றும் முதலாளிகள் என அனைவரும் ஒன்றிணைந்து பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதிசெய்வோம் என சூளுரைப்போம்.
இந்த நாளில் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் மேம்பட உழைப்போம்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்