Chennai : திடீர்னு ஒரு சத்தம் .. தூக்கி வீசப்பட்ட பெண் தூய்மை பணியாளர்.. கதறி அழுத சக பணியாளர்கள்.. என்ன ஆச்சு?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai : திடீர்னு ஒரு சத்தம் .. தூக்கி வீசப்பட்ட பெண் தூய்மை பணியாளர்.. கதறி அழுத சக பணியாளர்கள்.. என்ன ஆச்சு?

Chennai : திடீர்னு ஒரு சத்தம் .. தூக்கி வீசப்பட்ட பெண் தூய்மை பணியாளர்.. கதறி அழுத சக பணியாளர்கள்.. என்ன ஆச்சு?

Divya Sekar HT Tamil
Nov 09, 2023 02:23 PM IST

சென்னை திருவான்மியூரில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண் பணியாளர் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கதறி அழுத சக பணியாளர்- விபத்தில் உயிரிழந்த  தூய்மை பணியாளர் சிவகாமி
கதறி அழுத சக பணியாளர்- விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் சிவகாமி

அப்போது திருவான்மியூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை நோக்கி சென்ற கார் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலை ஓரமாக நின்றிருந்த சிவகாமி மீது மோதி அவர் சாலை நடுவே விழுந்தார். அப்போது நீலாங்கரை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று சிவகாமி மேலே ஏறி இறங்கி நிற்காமல் சென்றது. இதில் சிவகாமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீஸார் சிவகாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் முகலிவாக்கத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் அஸ்வந்த் (25) என்பவரை கைது செய்தனர்.மேலும் தப்பிச்சென்ற லாரி ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து சகபணியாளர்கள் கூறும் போது"இங்க தான் குப்ப வாரிட்டு இருந்தோம். திடீர்னு ஒரு சத்தம் ஓடிவந்து பாத்தா ரோட்ல விழுந்து கிடக்குறா. சாலையில் யாருமே பொறுமையாக செல்வதில்லை என குற்றம்சாட்டினர். தூய்மை பணியாளர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.