தினமுமே ஏன் நீங்கள் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிடவேண்டும்? அதற்கு 9 காரணங்கள் உள்ளதா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தினமுமே ஏன் நீங்கள் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிடவேண்டும்? அதற்கு 9 காரணங்கள் உள்ளதா?

தினமுமே ஏன் நீங்கள் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிடவேண்டும்? அதற்கு 9 காரணங்கள் உள்ளதா?

Priyadarshini R HT Tamil
Dec 16, 2024 07:00 AM IST

தினமும் ஒரு கொய்யா கட்டாயம் ஏன் தெரியுமா?

தினமுமே ஏன் நீங்கள் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிடவேண்டும்? அதற்கு 9 காரணங்கள் உள்ளதா?
தினமுமே ஏன் நீங்கள் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிடவேண்டும்? அதற்கு 9 காரணங்கள் உள்ளதா?

வைட்டமின் சி நிறைந்தது மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் கொண்டது

கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. (கிட்டத்தட்ட 228 மில்லி கிராம்) இது ஆரஞ்சை மிஞ்சும் அளவுதான். இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க உதவுகிறது. இது பொதுவான தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பைக் கொடுக்கிறது. இது சளி மற்றும் காய்ச்சல் காலங்களில் உங்களுக்கு உதவுகிறது.

கொழுப்பை குறைக்க உதவுகிறது

கொய்யாப்பழத்தில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. குறிப்பாக இதில் உள்ள லைக்கோபெனே என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. இதனால் உங்கள் உடலில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் தடுக்கப்படுகிறது. இது உங்கள் இதயத்து இதமான பழமாகும். எனவே இதய ஆரோக்கியத்தைக் காக்க இந்த பழத்தை தினமும் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது

கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற பழமாகும். இது லோ கிளைசமிக் இண்டக்ஸ் உணவுகள் பட்டியலில் உள்ளது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள், உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால், அது உங்களுக்கு சிறந்த தேர்வாகும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள ஏற்றது கொய்யாப்பழம்

தைராய்ட் ஆரோக்கியம்

தைராய்ட் ஆரோக்கியம் குறித்து நாம் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை. இதை நீங்கள் உங்கள் உணவில் தினமும் சேர்த்துக்கொள்ளும்போது, அது இந்த முக்கிய சிறப்புக்கும் முற்றிலும் உதவுகிறது. கொய்யா உங்கள் உடலில் ஹார்மோன்களை அதிகரிக்க உதவுகிறது. இது உங்கள் உடல் தேவையான ஹார்மோன்களை உறிஞ்சவும் உதவுகிறது. இது உங்கள் தைராய்ட் இயங்க குறிப்பிட்ட அளவு உதவுகிறது.

செரிமானத்தை அதிகரிக்கிறது, வயிற்றுப்போக்கில் இருந்து நிவாரணம் அளிக்கிறது

கொய்யாப்பழம் உங்கள் செரிமான ஆரோக்கியத்துக்கு சிறந்தது. இதில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள், உங்கள் வழக்கமான குடல் இயக்கத்துக்கு உதவுகிறது. இது உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. கொய்யா இலைகள் வயிற்றுப்போக்கை குணப்படுத்த உதவுகிறது.

மனஅழுத்தத்தைப் போக்கி உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கிறது

கொய்யாப்பழத்தில் மெக்னீசியச் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் நரம்புகள் மற்றும் தசைகளை அமைதிப்படுத்துகிறது. இது உங்களுக்கு மனஅழுத்தம் ஏற்படாமல் காக்கிறது. இது உங்கள் உறக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. இது உங்கள் உடலுக்கு இயற்கையான அமைதி மற்றும் நிம்மதியைக் கொடுக்கிறது. உங்கள் மனதை மகிழ்ச்சியாக்குகிறது.

மூளையின் இயக்கத்தை மேம்படுத்துகிறது

கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது. இது உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது உங்களின் நினைவாற்றலை மேம்படுத்துகிறது. உங்களின் கவனிக்கும் திறனை அதிகரிக்கச் செய்கிறது. இது உங்களின் ஒட்டுமொத்த மூளையையும் கூராக்குகிறது. ஒரு கொய்யாப்பழத்தில் கிட்டத்தட்ட பைடிராக்சின் 0.11 மில்லி கிராமும், நியாசின், வைட்டமின் பி 3, 1.1 மில்லி கிராமும் உள்ளது.

கண்பார்வைத்திறனை கூராக்குகிறது

இதில் உள்ள வைட்டமின் ஏ உங்கள் கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் பார்வையை மேம்படுத்துகிறது. இது உங்களுக்கு கண் புரை நோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. உங்களுக்கு கண் கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

உடல் எடை மேலாண்மைக்கு உதவுகிறது

கொய்யாப்பழம் ஒரு கலோரிகள் குறைந்த ஸ்னாக்ஸ் ஆகும். இது ஆரோக்கியமாக உடல் எடை பராமரிப்புக்கு உதவுகிறது. இதில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்களுக்கு நாள் முழுவதும் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. இது உங்கள் உடல் எடை அதிகரிக்காமல் உங்களின் பசியைக் கட்டுப்படுத்துகிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.