தினம் ஒரு நெல்லி சாப்பிடுவது நல்லது என்று ஏன் நிபுணர்கள் அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தினம் ஒரு நெல்லி சாப்பிடுவது நல்லது என்று ஏன் நிபுணர்கள் அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்?

தினம் ஒரு நெல்லி சாப்பிடுவது நல்லது என்று ஏன் நிபுணர்கள் அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்?

Priyadarshini R HT Tamil
Oct 05, 2024 11:57 AM IST

தினம் ஒரு நெல்லி சாப்பிடுவது நல்லது என்று ஏன் நிபுணர்கள் அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள் தெரியுமா?

தினம் ஒரு நெல்லி சாப்பிடுவது நல்லது என்று ஏன் நிபுணர்கள் அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்?
தினம் ஒரு நெல்லி சாப்பிடுவது நல்லது என்று ஏன் நிபுணர்கள் அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்?

கண்களுக்கு நல்லது

நெல்லிக்காயில் உங்கள் கண் பார்வையை மேம்படுத்தும் திறன் உள்ளது. இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி சத்துக்கள், உங்கள் ரெட்டினாவில் உள்ள செல்களை வலுப்படுத்துகிறது. இது உங்களுக்கு கண்புரை நோய் எற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. உங்களின் கண்பார்வைத்திறனை அதிகரிக்கிறது. வயோதிகம் தொடர்பான் பார்வையிழப்பு பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

நோய் எதிர்ப்புத்திறன்

நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் குணங்கள் உங்கள் உடலில் உள்ள ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடி ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கிறது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

தொற்றுக்களை எதிர்த்து போராட்டம்

நெல்லிக்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டீர்கள் என்றால் அது உங்கள் உடலில் இயற்கை எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும். அது உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை மேம்படுத்துகிறது. உங்கள் உடல் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. சளி, இரும்ல், காய்ச்சல், சுவாச தொற்றுகளை எதிர்த்து போராடி, அவை வந்தால் உடனடியாக அடித்து விரட்டுகிறது.

செரிமானத்துக்கு உதவும் நார்ச்சத்துக்கள்

நெல்லிக்காயில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அது செரிமானத்தை எளிதாக்கி, குடல் இயங்குவதை அதிகரிக்கிறது. எனவே நெல்லிக்காயை தொடர்ந்து எடுக்கும்போது, அது உங்களுக்கு மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசம் போன்றவை ஏற்படாமல் காக்கிறது. இது குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. செரிமான எண்சைம்களை தூண்டுகிறது.

வயோதிகம்

நெல்லிக்காய் சரும செல்கள் மீண்டும் உருவாக உதவுகிறது. இதனால், இளம் வயதிலேயே வயோதிக தோற்றம் ஏற்படாமல் தடுக்கிறது. இது முகச்சுருக்கங்கள் மற்றும் சருமத்தில் வரும் சுருக்கங்கள் ஏற்படாமல் குறைக்கிறது. இதில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இது கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. சருமத்தை பளபளப்பாக்குகிறது. முகப்பருக்களையும் குணப்படுத்துகிறது.

முடிஉதிர்தலுக்கு இயற்கை தீர்வு

நெல்லிக்காள் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டமளித்து, தலைமுடியை வலுப்படுத்துகிறது. தலைமுடி உதிர்வைக் குறைக்கிறது. தலைமுடி நன்றாக அடர்ந்து வளர உதவுகிறது. இது இளநரை ஏற்படாமல் தடுக்கிறது. இது பொடுகை நீக்கி, தலையின் ஆரோக்கியத்தை காக்கிறது.

உடல் எடை

நெல்லிக்காய் உங்கள் உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. இது உங்கள் உடலின் வளர்சிதைக்கு ஊக்கமளித்து, உங்களின் கொழுப்பைக் கரைக்கும் தன்மையை அதிகரிக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள், உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்து உணர்வைத் தருகிறது. இது உங்களின் பசியைப்போக்குகிறது. நீங்கள் அதிகம் சாப்பிடுவதை தடுக்கிறது. எனவே உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்க நீங்கள் நெல்லிக்காயை கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது

நெல்லிக்காய் லோ கிளைசமின் இண்டக்ஸ் உணவுப்பட்டியலில் உள்ளது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயர்வதை தடுக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தருகிறது.

ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தி இதய ஆரோக்கியம் காக்கிறது

நெல்லிக்காய், உடலில் சேரும் கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, அது தமனிகளில் ப்ளேக்காக உருவாகாமல் தடுத்து, இதய ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது. இது உங்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை தடுக்கிறது. ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது.

இயற்கை கழிவு நீக்கி

நெல்லிக்காய் இயற்கை கழிவு நீக்கியாக செயல்படுகிறது. இது உங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் இரண்டும் அதில் படிந்துள்ள அழுக்குகளைப் போக்க உதவுகிறது. இது சிறுநீரகத்தில் உள்ள அதிகப்படியான உப்பை வெளியேற்றி முறையான கழிவுநீக்கத்துக்கு வித்திடுகிறது.

ஆரோக்கிய நெல்லிக்காய் பானம்

விதைகளை நீக்கிவிட்டு, நன்றாக மிக்ஸியில் அடித்து வடிகட்டி, தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம் அல்லது ஏற்கனவே கூறியதுபோல் மோரில் கலந்து பருகலாம். நீரில் ஊறுவைத்து பருகலாம். சாதம் செய்து சாப்பிடலாம். ஏபிசி(ஆம்லா, பீட்ரூட், கோக்கனட்) பானமாக பருகலாம். இப்படி நெல்லிக்காயை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள எண்ணற்ற வழிகள் உள்ளன. ஜாம், ஜெல்லி என தயாரித்து குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.