Food Adulteration: இந்த பொருட்களில் கலப்படம் உள்ளது! வாங்கும் போது கவனம் தேவை!
Food Adulteration: நாம் அன்றாடம் வாங்கி உபயோகிக்கும் பொருட்கள் முதல் அந்தந்த சீசனில் அதிகம் விற்பனையாகும் பொருட்கள் வரை பல உணவுகளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது. இது சிறு பிரச்சனைகளில் தொடங்கி பெரும் ஆபத்தாக முடிகிறது.
ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி கோயிலில் வழங்கப்படும் லட்டு செய்யப்பட்ட பொருட்களில் கலப்படம் இருப்பதாக ஒரு செய்தி வெளியானது. அதனை தொடர்ந்து பல சர்ச்சைகள் கிளம்பிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் நாம் அன்றாடம் வாங்கி உபயோகிக்கும் பொருட்கள் முதல் அந்தந்த சீசனில் அதிகம் விற்பனையாகும் பொருட்கள் வரை பல உணவுகளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது. இது சிறு பிரச்சனைகளில் தொடங்கி பெரும் ஆபத்தாக முடிகிறது. இத்தகைய கலப்படம் செய்யபட்ட உணவுகள் குறித்த தெளிவான லிஸ்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
உணவுக் கலப்படம்
கலப்படம் என்பது உணவில் தேவையற்ற பொருட்களைச் சேர்ப்பது ஆகும். லாபம் ஈட்டுவதற்காக ஒரே மாதிரியான தோற்றம்/நிறம் கொண்ட வேறு பொருள்களை உணவுப் பொருட்களுடன் கக்கப்படுகிறது. கலப்படம் உணவின் தரத்தை குறைக்கிறது மற்றும் சில நேரங்களில் நச்சு இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன, அவை ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை.
தேன்: சர்க்கரைக்கு பதிலாகவும், பல ஆயுர்வேத மருந்தை சாப்பிடவும் தேனை உபயோகப்படுத்துகிறோம். இதில் பொதுவாக சர்க்கரை, குளுக்கோஸ் மற்றும் சர்க்கரை பாகு ஆகிய பொருட்கள் கலக்கப்படுகின்றன. தேனின் தூய்மையை சரி செய்ய பருத்தி உருண்டையை தேனில் தோய்த்து எரிக்கவும். அது உடனடியாக எரிந்தால், அது சுத்தமான தேன், இல்லையெனில் அது இல்லை. மேலும் ஒரு கிளாஸ் தண்ணீரில், ஒரு டேபிள்ஸ்பூன் தேனைப் போட்டு அடியில் படிந்தால், அது தூய்மையானது. சீக்கிரம் கரைந்தால் கலப்பட தேன் ஆகும்.
மஞ்சள் தூள்: குழம்புகளிலும், முகத்தில் பூசவும் மஞ்சள் தூள் பயன்படுத்தப்படுகிறது. இதில் சுண்ணாம்பு தூள், ஈய குரோமேட் மற்றும் மெட்டானில் மஞ்சள் போன்ற பொருட்கள் கலப்படம் செய்யபடுகின்றன. தூய்மையான மஞ்சள் என சரிபார்ப்பதற்கு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்கவும். அசைக்கவோ கிளறவோ வேண்டாம். தூள் 20 நிமிடங்களுக்குப் பிறகு கீழே படிந்தால் அது தூய்மையானது. அது கரைந்தால் கலப்படம் செய்யப்பட்டது.
நெய்: பெரும்பாலான இனிப்பு பொருட்கள் செய்வதற்கு நெய் பயன்படுகிறது. இதில் விலங்குகளின் கொழுப்பு, தாவர எண்ணெய், ஸ்டார்ச் மற்றும் வனஸ்பதி ஆகியவை கலக்கப்படுகின்றன. நெய்யின் தூய்மையை சரிபார்க்க ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை உருக்கி ஒரு கண்ணாடி ஜாடியில் ஊற்றி கெட்டியாகும் வரை குளிர வைக்கவும். அடுக்குகளாக பிரிந்தால், நெய் தூய்மையற்றது.
மிளகாய் தூள்:அனைத்து உணவிலும் கார சுவையை தருவதற்கு மிளகாய் தூள் பயன்படுகிறது. இதில் பொதுவாக செங்கல் தூள், செயற்கை நிறங்கள் சேர்க்கப்படுகின்றன. சுத்தமான மிளகாய் துளை சரிபார்க்க ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும். நன்றாக கிளறவும். துகள்கள் படிந்திருந்தால், அது செங்கல் தூளாகவும், நீரின் நிறம் பிரகாசமான சிவப்பு நிறமாக மாறினால், அது செயற்கை நிறமாகவும் இருக்கலாம்.
அரிசி: பிரதான உணவாக பயன்படும் அரிசியிலும் கலப்படம் உண்டு. இதில் கூழாங்கல், சேதமடைந்த தானியங்கள் மற்றும் பாலிஷ் போன்றவை சேர்க்கப்படுகின்றன. அரிசி பாலீஷ் செய்யப்பட்டிருந்தால், அதன் பளபளப்பைப் பார்த்தாலே தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். மற்ற கலப்படங்களை பார்வைக்கு ஆய்வு செய்யலாம். அரிசியை தண்ணீரில் ஊறவைத்து, தண்ணீர் வெண்மையாக மாறினால், அது பாலிஷ் செய்யப்பட்டுள்ளது என பொருள்.
டாபிக்ஸ்