Yellow Teeth : பற்களில் ஏற்படும் மஞ்சள் கறையை அடித்து விரட்டவேண்டுமா? இதோ வீட்டிலே கிடைக்கும் தீர்வுகள்!-yellow teeth do you want to get rid of the yellow stains on the teeth here are the home remedies - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Yellow Teeth : பற்களில் ஏற்படும் மஞ்சள் கறையை அடித்து விரட்டவேண்டுமா? இதோ வீட்டிலே கிடைக்கும் தீர்வுகள்!

Yellow Teeth : பற்களில் ஏற்படும் மஞ்சள் கறையை அடித்து விரட்டவேண்டுமா? இதோ வீட்டிலே கிடைக்கும் தீர்வுகள்!

Priyadarshini R HT Tamil
Sep 16, 2024 10:56 AM IST

Yellow Teeth : பற்களில் ஏற்படும் மஞ்சள் கறையை அடித்து விரட்டவேண்டுமா? இதோ வீட்டிலேயே கிடைக்கும் தீர்வுகளைப் பாருங்கள். உங்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும்.

Yellow Teeth : பற்களில் ஏற்படும் மஞ்சள் கறையை அடித்து விரட்டவேண்டுமா? இதோ வீட்டிலே கிடைக்கும் தீர்வுகள்!
Yellow Teeth : பற்களில் ஏற்படும் மஞ்சள் கறையை அடித்து விரட்டவேண்டுமா? இதோ வீட்டிலே கிடைக்கும் தீர்வுகள்!

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சைசாறு பேஸ்ட்

பேக்கிங் சோடா உங்கள் பற்களை வெண்மையாக்கும் இயற்கை நிவாரணி, இதை நீங்கள் எலுமிச்சையுடன் கலந்து உங்கள் பற்களில் தேய்க்கும்போது, அது வினைபுரிந்து உங்கள் பற்களின் அடியில் படிந்திருக்கும் விடாப்பிடியாக கறைகளையு போக்க உதவுகிறது. இதை கலந்து நீங்கள் உங்கள் பற்களில் மெதுவாக தேய்க்கவேண்டும். ஆனால் இதை அதிகம் பயன்படுத்தக்கூடாது. எலுமிச்சையில் உள்ள அமிலங்கள் உங்கள் பற்களின் எனாமலை சேதப்படுத்தும்.

தேங்காய் எண்ணெயில் ஆயில் புல்லிங்

ஆயில் புல்லிங் என்றால் எண்ணெயை ஊற்றி கொப்பளிப்பது, இது வாய் முதல் வயிறு வரை உள்ள கழிவுகளை அகற்ற உதவும் பாரம்பரிய ஆயுர்வேத முறை. இதுவும் பற்களின் அடியில் படிந்திருக்கும் கறைறை போக்க உதவும். ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி 10 முதல் 15 நிமிடங்கள் கொப்பளிக்கவேண்டும். இது உங்கள் வாயில் உள்ள அனைத்து பகுதிகளையும் தொடவேண்டும் என்பதை உறுதிசெய்யுங்கள். இதை முடித்துவிட்டு, இளஞ்சூடான தண்ணீரில் மீண்டும் வாயை கொப்பளிக்க வேண்டும்.

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகர் என்று கடைகளில் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள். அது உங்கள் வாயில் உள்ள ப்ளேக்குகள் மற்றும் கறைகளை போக்க உதவுகிறது. அதற்கு இதில் உள்ள மிதமான அமிலம்தான் காரணம். ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்துகொள்ளவேண்டும். உங்கள் வாயில் ஊற்றி மெதுவாக கொப்பளிக்கவேண்டும். பின்னர் இதை துப்பிவிட்டு, பச்சை தண்ணீரில் உங்கள் வாயை கொப்பளிக்கவேண்டும்.

ஆக்டிவேடட் சார்கோல் ஸ்கிரப்

பற்களை வெண்மையாக்குவதில் சார்கோல் ஸ்கிரப் முக்கியமான ஒரு இயற்கை நிவாரணியாகும். ஆக்டிவேடட் சார்கோல் மிகவும் சிறந்தது. ஈரமான பிரஷை ஆக்டிவேடட் சார்கோல் ஸ்கிரபில் தோய்த்துக்கொள்ளுங்கள். உங்கள் பற்களை அதைவைத்து இரண்டு நிமிடங்கள் பிரஷ் செய்யுங்கள். பின்னர் வாயை தண்ணீர் ஊற்றி நன்றாக கொப்பளித்துவிடுங்கள். இதை வாரத்தில் இருமுறை செய்து வந்தால் பற்கள் பளபளக்கும்.

பேக்கிங் சோடா மற்றும் ஸ்ட்ராபெரிகள்

ஸ்ட்ராபெரிகளில் மாலிக் அமிலம் உள்ளது. இது உங்கள் பற்களில் உள்ள கறைகளைப் போக்கும் இயற்கை எண்சைம்கள் ஆகும். இதை பேக்கிங் சோடாவுடன் கலந்தால் உங்கள் பற்களுக்கு இயற்கை வெண்மை தரும் சக்தி கிடைக்கும். பழுத்த ஸ்ட்ராபெரி மற்றும் பேக்கிங் சோடா இரண்டையும் நன்றாக மேஷ் செய்துகொள்ளவேண்டும். பேஸ்ட் போல் செய்துகொண்டால், இந்தக்கலவையை உங்கள் பற்களில் பூசுங்கள். இதை 5 நிமிடங்கள் ஊறவிட்டு வாயை கொப்பளித்துவிடவேண்டும்.

ஹைட்ரோஜென் பெராக்ஸைட் மற்றும் பேக்கிங் சோடா பேஸ்ட்

ஹைட்ரோஜென் பெராக்ஸைட் பற்களை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களுள் ஒன்று. இதை பேக்கிங் சோடாவுடன் கலந்துகொண்டால், உங்கள் பற்கிளில் உள்ள மஞ்சள் கறையைப் போக்க எளிதாக உதவும். இரண்டையும் சிறிதளவு எடுத்து கரைத்துக்கொள்ளவேண்டும். உங்கள் பற்களில் இவற்றை வைத்து இரண்டு நிமிடங்கள் தேய்த்துவிட்டு, வாயை நன்றாக கொப்பளித்து விடவேண்டும்.

கடித்து உண்பது

பச்சையாக பழங்கள் மற்றும் காய்கறிகளை கடித்து சாப்பிடுவது, கேரட்கள், ஆப்பிள்கள் ஆகியவற்றை கடித்து சாப்பிட்டால் அவை உங்கள் பற்களை இயற்கையாக சுத்தம் செய்யும். அதிலும் குறிப்பாக கரும்பு. கருப்பு கரும்பை கிடைக்கும்போதெல்லாம் கடித்து சாப்பிடுங்கள். ஏனெனில் அவை பிரஷ் போலவே இருப்பதால் உக்ஙள் பற்களை சுத்தம் செய்யும். மேலும் உங்கள் பற்களின் அடியில், பல் இடுக்குகளில் சிக்கியுள்ள உணவுத்துகள்களையும் விரட்டியடிக்கும். மேலும் உங்கள் வாயில் எச்சில் உற்பத்தியை அதிகரிக்கும். உங்கள் வாயின் எச்சில் உற்பத்தியும் உங்கள் பற்களை சுத்தம் செய்யும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.