தாம்பத்ய வாழ்க்கையில் தெவிட்டாத இன்பம் பெற என்ன செய்யவேண்டும்? தம்பதிகளுக்கு ஒரு அறிவுரை!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தாம்பத்ய வாழ்க்கையில் தெவிட்டாத இன்பம் பெற என்ன செய்யவேண்டும்? தம்பதிகளுக்கு ஒரு அறிவுரை!

தாம்பத்ய வாழ்க்கையில் தெவிட்டாத இன்பம் பெற என்ன செய்யவேண்டும்? தம்பதிகளுக்கு ஒரு அறிவுரை!

Priyadarshini R HT Tamil
Oct 22, 2024 07:00 AM IST

தாம்பத்திய வாழ்க்கையில் தெவிட்டாத இன்பம் பெற என்ன செய்யவேண்டும் என்று இங்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றி தம்பதிகள் மகிழ்ச்சி கடலில் திளைத்திருங்கள்.

தாம்பத்ய வாழ்க்கையில் தெவிட்டாத இன்பம் பெற என்ன செய்யவேண்டும்? தம்பதிகளுக்கு ஒரு அறிவுரை!
தாம்பத்ய வாழ்க்கையில் தெவிட்டாத இன்பம் பெற என்ன செய்யவேண்டும்? தம்பதிகளுக்கு ஒரு அறிவுரை!

உண்மையில்லாத எதிர்பார்ப்புகளை விடவேண்டும்

உண்மையில்லாத எதிர்பார்ப்புக்களை முதலில் விட்டுவிடவேண்டும். சரியான இணையராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை முதலில் கைவிடவேண்டும். கணவன் என்றால் மனைவி சமைக்க வேண்டும், வீட்டை பெருக்க வேண்டும், குடும்பத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளை வைத்துக்கொள்ளக்கூடாது. அனைத்தும் இருவரும் சேர்ந்து செய்ய வேண்டிய வேலை என்பதை உணரவேண்டும். இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, இருவரின் பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்துகொண்டால் நல்லது.

யாருடனும் ஒப்பிட்டு பேசக்கூடாது

நமது மண வாழ்க்கையை மற்றவர்கள் குறிப்பாக நண்பர்கள், உறவினர்கள் மறறும் திரைப்படத்தில் வருவதுபோல் ஒட்பிட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. இது தேவையில்லாத ஒன்று. இது பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தும். மாறாக உங்கள் உறவில் உள்ள தனித்தன்மைகளை பட்டியலிடுங்கள். ஏனெனில் ஒவ்வொரு திருமணமும் வேறானது மற்றும் அவர்களுக்கு உரிய சவால்களும், ஆசிர்வாதங்களும் அவரவருக்கு கிடைக்கும்.

பரஸ்பரம் அக்கறை கொள்ளவேண்டும்

வேலை மற்றும் பொறுப்பு என்று ஏதேனும் ஒன்றை செய்துகொண்டே இருப்பதால் நம் மீதும் நமது இணையர் மீதும் அக்கறை எடுத்துக்கொள்வது இல்லை. உங்கள் மீது எடுத்துக்கொள் வேண்டிய அக்கறை, உங்களுக்கான நேரம், உங்கள் இருவருக்குமான நேரம் என ஒதுக்க வேண்டும். ஒன்றாக சேர்ந்து சமைப்பது மற்றும் படிப்பது, ஓய்வெடுப்பது என்று சேர்ந்திருக்க முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி, ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, உங்கள் உறவும் பலமாக வளரும்.

திறந்த மனநிலையுடன் பேசுவதை தவிர்க்கக் கூடாது

உங்களின் பிரச்னைகளோ அல்லது மகிழ்ச்சியோ திறந்த மனநிலையுடன் அதை பேசவேண்டும். அப்படி திறந்து பேசினால் சண்டை வரும் என்ற அச்சம் ஏற்படுவது இயல்பு. ஆனால் அதற்காக உங்கள் பிரச்னைகளை வெளிப்படையாக பேசாமல் போனால் அதுவும் பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே வெளிப்படையாக உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திவிடுவது நல்லது. இந்த நேர்மையான அணுகுமுறை, புரிதலின்மையைப்போக்கி, நம்பிக்கையை ஏற்படுத்தி, இருவருக்குள்ளும் ஆழ்ந்த உறவை ஏற்படுத்தும்.

மனகசப்புகளை களைந்துவிடவேண்டும்

முந்தைய மனகசப்புகளை மனதிலே வைத்துக்கொண்டிருந்தால் அது பிரச்னைகளை மேலும் ஆழப்படுத்தும். இந்த எதிர்மறையான எண்ணம் நம் உறவை கட்டாயம் பாதிக்கும். அது ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியையும் பாதிக்கும். எனவே அனைத்து தவறுகளையும் மன்னித்து மறந்துவிடுவதே நல்ல உறவு தொடர நல்லது. எனவே பிரச்னை என்று வந்துவிட்டால் உடனே அதை பேசி தீர்த்துக்கொள்வது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் அது பெரிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். பேசி முடித்துவிட்டால் மனதில் உள்ள பாரங்கள் இறங்கிவிடும்.

வேலையும், குடும்பமும் ஒன்றாகச் செல்லவேண்டும்

வேலைக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்துட்டு, குடும்பத்தை இரண்டாதாக வைத்திருந்தால் அது கட்டாயம் பிரச்னைதான். குடும்பத்தினருடன் தரமான நேரம் செலவிடாவிட்டால், அது தூரத்தையும், அதிருப்தியையும் அதிகரிக்கும். எனவே வாழ்க்கையையும் வேலையையும் சமமாக எடுத்துச்செல்ல கற்றுக்கொள்ள வேண்டும். எனவே குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எனவே வேலைக்கு போதிய நேரத்தை கொடுத்துவிட்டு, எஞ்சிய நேரத்தில் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். குறிப்பாக அந்த நேரத்தில் மனைவியுடன் அர்த்தமுள்ள நேரத்தை செலவிடவேண்டும்.

அன்பை வெளிப்படுத்துவதே சிறந்தது

உங்கள் திருமண வாழ்வின் ஒவ்வொரு சிறு நிகழ்வுகளையும், தினமும் நடக்கக்கூடிய மகிழ்ச்சியான தருணங்களையும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சிறு சிறு அன்பின் வெளிப்பாடுகள் மற்றும் பாராட்டுகள் தான் உங்கள் உறவை ஒன்றாக எடுத்துச்செல்வதாகும்.

ஒரே ஒரு நன்றி அல்லது மனைவிக்கு அவ்வப்போது கொடுக்கும் முத்தங்கள், அணைப்புகள் அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அது உங்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.