Relationship : உங்கள் இணையர் இந்த காரியங்களையெல்லாம் செய்பவரா? உறவை தொடர்வது குறித்து சிந்திக்கவேண்டிய தருணம்!
Relationship : உங்கள் இணையர் இந்த காரியங்களையெல்லாம் தொடர்ந்து செய்கிறாரா? அவர்களுடன் சேர்ந்து வாழ்வது கடினம்தான். இந்த பிரச்னைகளை தொடர்ந்து ஏற்படுத்தி வரும் இணையருடன் சேர்ந்து வாழ்வது குறித்து யோசிக்கத்தான் வேண்டும். அவை என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்.
இரு தனித்தனி மனிதர்கள் ஒரு உறவில் சேர்ந்து இருப்பது சவாலான ஒன்றுதான். சில நடத்தைகள் ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்குகின்றன. எனவே உங்கள் இணையர் இந்த விஷயங்களையெல்லாம் செய்தார் என்றால், நீங்கள் பிரிய வேண்டிய தருணம் என்று புரிந்துகொள்ளுங்கள்.
உங்களை தவிர்த்தல்
உங்கள் இணையர், உங்களுடன் பேசுவது, பழகுவது என அனைத்தையும் தவிர்த்தால், முக்கிய தகவல்களை கூட உங்களுடன் பகிராமல் இருப்பது ஆகியவற்றை செய்தார் என்றால், அவர் உங்களிடம் இருந்து விலகுகிறார். உங்களை தவிர்க்கிறார் என்று பொருள். உரையாடல் குறைதல், புரிதலின்மைக்கும், உணர்வு ரீதியிலான விலகலுக்கும் வழிவகுக்கும்.
தொடர் குற்றச்சாட்டு
தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் ஃபீட் பேக்குகளை கொடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அது தொடர் விமர்சனமாகவோ, குற்றச்சாட்டாகவோ இருந்தால் நன்றாக இருக்காது. அதை யாரும் வரவேற்கமாட்டார்கள். உங்கள் இணையர் உங்களை குறைத்து எடைபோட்டாலோ, அது உங்கள் சுய மரியாதையை குறைக்கும். அது ஒரு நச்சு சூழலை உருவாக்கும். ஆரோக்கியமான உறவு, இருவருக்குமான மரியாதை மற்றும் ஆதரவை அடக்கியது.
கட்டுப்பபாடு மற்றும் திரித்தல்
ஆரோக்கியமான உறவுக்கு உண்மை மற்றும் தனித்தன்மையும் வேண்டும். உங்கள் இணையர் உங்கள் செயல்கள், முடிவுகள், மற்றவர்களுடன் பேசுவது போன்றவற்றை கட்டுப்படுத்தினால், இது உங்களுக்கான சிவப்புக்கொடி, திரிக்கும் நடவடிக்கைகள், உங்கள் சுதந்திரத்தை பறிக்கும் செயல். எனவே இதுபோன்ற நேரத்தில் உங்கள் நலன்கருதி அந்த நபரிடம் இருந்து பிரிவது நல்லது.
துரோகம்
ஒரு பலமான உறவுக்கு நம்பிக்கை மிகவும் அவசியம். துரோகம் அந்த நம்பிக்கையை அடியோடு உடைக்கிறது. அது உணர்வு ரீதியான வலியையும் ஏற்படுத்துகிறது. உங்கள் இணையருக்கு திருமணம் கடந்த உறவில் இருந்தாலோ அல்லது எல்லைகளை கடந்தாலோ அவருடன் உங்கள் உறவு தொடரவேண்டுமா என்பதை பரிசோதிக்க வேண்டியது அவசியம்.
சமரசம் செய்ய மறுத்தல்
ஆரோக்கியமான உறவுகளுக்கு சமரசம் மற்றும் சேர்ந்து வாழ்வது அவசியம். உங்கள் இணையர் தொடர்ந்து உங்களை சந்திப்பதை மறுத்தாலோ அல்லது அவர்களின் வழியில் செல்ல முயன்றாலோ அல்லது உங்கள் தேவைகளை புறக்கணித்தாலோ அது உங்கள் வாழ்க்கையில் அதிகார சமமின்மையை உருவாக்கும். எனவே சமாதானம் செய்வது, சமரசம் ஆவது அவசியம். இருவரின் திருப்தி மற்றும் வளர்ச்சிக்கு சமரசம் முக்கியம்.
எந்த வகையிலும் தவறாக பயன்படுத்துவது
உணர்வு ரீதியாகவோ, வார்த்தையாகவோ அல்லது உடல் ரீதியாகவோ எவ்விதமாக முறையில் தவறாக பயன்படுத்தினாலும், அது தவறானது. உங்கள் இணையர் தொடர்ந்து உங்களை துன்புறுத்தி வற்தால், உங்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். எனவே உங்களுக்கான ஆதரவை கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் உடல் மற்றும் மன நல ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, துன்புறுத்தல் நிறைந்த நச்சு உறவில் சேர்ந்திருக்காதீர்கள்.
டாபிக்ஸ்