புற்றுநோய், சர்க்கரைநோய் போன்ற நோய்களின் உயிரிழப்புகளுக்கு எது முக்கிய காரணம்- ஜீன்களா? வாழும் நெறிமுறைகளா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  புற்றுநோய், சர்க்கரைநோய் போன்ற நோய்களின் உயிரிழப்புகளுக்கு எது முக்கிய காரணம்- ஜீன்களா? வாழும் நெறிமுறைகளா?

புற்றுநோய், சர்க்கரைநோய் போன்ற நோய்களின் உயிரிழப்புகளுக்கு எது முக்கிய காரணம்- ஜீன்களா? வாழும் நெறிமுறைகளா?

Divya Sekar HT Tamil
May 17, 2024 11:53 AM IST

புற்றுநோய், இரத்தக்கொதிப்பு, சர்க்கரைநோய் போன்ற தொற்றாநோய்களின் உயிரிழப்புகளுக்கு எது முக்கிய காரணம்- ஜீன்களா?வாழும் நெறிமுறைகளா? என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

புற்றுநோய், சர்க்கரைநோய் போன்ற நோய்களின் உயிரிழப்புகளுக்கு எது முக்கிய காரணம்- ஜீன்களா? வாழும் நெறிமுறைகளா?
புற்றுநோய், சர்க்கரைநோய் போன்ற நோய்களின் உயிரிழப்புகளுக்கு எது முக்கிய காரணம்- ஜீன்களா? வாழும் நெறிமுறைகளா?

இவற்றால் ஏற்படும் முன்கூட்டிய உயிரிழப்புகளுக்கு ஜீன்கள் முக்கிய காரணமா? அல்லது வாழும் நெறிமுறைகள் முக்கிய காரணமா?என்பது குறித்தான ஆய்வுகள் உலக அளவில் நடைபெற்று வருகின்றன. 

தொற்றாநோய்களால் அதிகஉயிரிழப்புகள் ஏற்பட முக்கிய காரணம்

ஜீன்களின் பாதிப்பு காரணமாகவும் நோய்களின் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்றாலும்,அவற்றை மாற்றுவது கடினமான(எளிதில் முடியாத)காரியம். ஆனால் வாழும் நெறிமுறைகளில் மாற்றத்தைக் கொண்டு வந்தால்,முன்கூட்டிய இறப்புகளை தடுக்க/குறைக்க முடியும் என்பது தெரிய வந்தால்,அவற்றை மாற்றியமைத்து உயிரிழப்புகளை குறைக்கும் வழிகளை மக்களும்/அரசும் பின்பற்றுவது நல்லது.

20ம் நூற்றாண்டில் தான் தொற்றாநோய்களின் தாக்கம் மக்களிடையே அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த நூற்றாண்டில்,தொற்றாநோய்களின் பாதிப்பு (புற்றுநோய்,இரத்தக்கொதிப்பு,சர்க்கரைநோய்....)உலகின் பல்வேறு பகுதிகளில், பெருமளவு ஜீன்கள் மத்தியில் மாற்றங்கள் நிகழாத சூழலிலும்,அதிகரித்திருப்பது ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில்,வாழும் நெறிமுறைகளில்(Life-style factors)ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே,தொற்றாநோய்களால் அதிகஉயிரிழப்புகள் ஏற்பட முக்கிய காரணம் என அறிந்து கொள்ள முடியும்.

குறிப்பாக சுகாதாரமற்ற உணவு,(Unhealthy diet),உடலுழைப்பு குறைவு(Physical inactivity),புகை பிடித்தல்,கள்/சாராயம் அதிகம் எடுத்துக்கொள்வது,மன அழுத்தம்,சூழல் மாசுபாடு... போன்றவை  தொற்றாநோய்களின் காரணமாக நிகழும் முன்கூட்டிய உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணங்கள் எனத் தெரியவந்துள்ளது.

கிராம,நகர்புற,வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து செல்லும் இந்தியர்கள்-இவர்கள் மத்தியில்  வாழும் நெறிமுறைகளில் உள்ள மாற்றம் காரணமாக, தொற்றாநோய்களின் இறப்பு விகிதத்திலும் காணப்படும் பெரும் மாற்றங்கள்-வாழும் நெறிமுறைகளில் உள்ள மாற்றங்களே இந்த வேறுபாட்டிற்கு முக்கிய காரணமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

ஜீன் தொடர்பு உள்ளது என்பதை உறுதிபடுத்த முடியவில்லை

21ம் நூற்றாண்டில் ஜீன் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக,குறிப்பிட்ட ஜீன்கள் குறிப்பிட்ட நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளது என்பதை தெளிவாக அறியும் பட்சத்தில்,அவற்றை முன்கூட்டியே கண்டறிந்து,தகந்த ஜீன் சிகிச்சை மூலம் அதை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் ஒரு சில புற்றுநோய்களில் மட்டுமே,அத்தகைய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. 

ஆனால்,இருதய பிரச்சனைகள்,சர்க்கரைநோய் பாதிப்பு போன்ற நோய்களுக்கு,குறிப்பிட்ட ஜீன் தொடர்பு உள்ளது என்பதை உறுதிபடுத்த முடியவில்லை.குறிப்பிட்ட ஜீன்களுக்குப் பதில் பல்வேறு கூட்டு ஜீன்களைக் கொண்டு நோய்பாதிப்பு ஏற்படுத்தும் தன்மையை உறுதிபடுத்த முடியுமா என ஆராய்ந்தால்,அதிலும் குறைந்தபட்ச தொடர்பு மட்டுமே உள்ளது. 

ஜீன்கள் நோய்பாதிப்பு ஏற்பட ஒரு சிறு காரணமாக இருந்தாலும்,வாழும் நெறிமுறைகளில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள்,நோய்பாதிப்பிலிருந்து மீள உதவியாக உள்ளது.

ஏப்ரல்,2024, British Medical Journalல்,3,53,742 ஐரோப்பிய இன மக்களிடத்து,சராசரியாக 12.9 வருடங்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,சில முக்கிய செய்திகள் தெரியவந்துள்ளன.

ஆய்வில் Polygenic Risk Score-PRS கணக்கில் கொள்ளப்பட்டது.

வாழும் நெறிமுறைகளில்-1)தூங்கும் நேரம்2)உடம்பின் வடிவம்(Body shape)3)உடற்பயிற்சி(Physical Activity)4)எத்தகைய உணவு எடுத்துக் கொள்ளப்பட்டது5)புகை பிடித்தல்/சாராயம் குடிப்பது .. போன்றவற்றை கணக்கில் கொண்டு, "சாதகமானது","பாதகமானது","நடுத்தரமானது"என்ற பிரிவில் ஆய்வில் கலந்து கொண்டவர்கள் வகைப்படுத்தப்பட்டனர்.

தனிமனிதர் ஒருவரின் வாழும் நெறிமுறைகள், தனிநபரின் PRS அளவுடன் பொருத்திப் பார்க்கப்பட்டது.

முக்கிய முடிவுகள்

1)அதிக ஜீன் பாதிப்பு குறியீடு உள்ளவர்கள்(High Genetic Risk)குறைந்த ஜீன்பாதிப்பு குறியீடு(Low Genetic Risk)உள்ளவர்களைக் காட்டிலும்,21% அதிக இறப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.(தேவையான வாழும் நெறிமுறை மாற்றங்களை செய்தபின்னரும்,அதிக இறப்பு வாய்ப்பு குறையவில்லை.)

2)ஜீன்பாதிப்பு மாற்றங்கள் ஒரே அளவில் இருந்தும்,சுகாதாரமற்ற வாழும் நெறிமுறைகளை கடைபிடித்தவர்கள்(Unhealthy Life-style),சுகாதாரமான வாழும் நெறிமுறைகளை கடைபிடித்தவர்களைக் காட்டிலும்,78% அதிக இறப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

3)குறைந்த ஜீன் பாதிப்பு+சுகாதாரமான வாழும் நெறிமுறைகளை கடைபிடித்தவர்களைக் காட்டிலும்,அதிக ஜீன் பாதிப்பு+சுகாதாரமற்ற வாழும் நெறிமுறைகளை கடைபிடித்தவர்கள் 104% அதிக இறப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

4)அதிக ஜீன்பாதிப்பு+சுகாதாரமற்ற வாழும் நெறிமுறைகளை கடைபிடித்தவர்களைக் காட்டிலும்,அதிக ஜீன்பாதிப்பு+சுகாதாரமான வாழும் நெறிமுறைகளை கடைபிடித்தவர்கள் மத்தியில் 54% இறப்பு குறைந்துள்ளது.

5)அதிக ஜீன்பாதிப்பு+சுகாதாரமற்ற வாழும் நெறிமுறைகளை கடைபிடித்தவர்களைக் காட்டிலும்,குறைந்த ஜீன்பாதிப்பு+சுகாதாரமான வாழும் நெறிமுறைகளை கடைபிடித்தவர்கள்,6.7 வருடங்கள் கூடுதலாக உயிர் வாழ்ந்துள்ளனர். 

மேற்கண்ட ஆய்வு முடிவுகளில் இருந்து, ஜீன்கள் தொற்றாநோய்கள் ஏற்பட சிறு காரணமாக இருந்தாலும்,சுகாதாரமான வாழும் நெறிமுறைகளை வாழ்க்கையில் கடைபிடித்தால்,நோய் பாதிப்பு/இறப்பிலிருந்து மீள முடியும் என்பதை மக்களும்/அரசும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

நன்றி : மருத்துவர்.வீ.புகழேந்தி

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.