Air Pollution : காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் இழப்புகள் என்வென்று தெரியுமா? – அச்சுறுத்தும் ஆய்வுகள்!
எனவே மக்களின் அடிப்படை உரிமையான சுத்தமான காற்றை சுவாசிக்கும் உரிமையை மனதில் கொள்ளாமல், மோசமான காற்று மாசை எற்படுத்தும் நிலக்கரி மூலம் மின் தேவையை பூர்த்தி செய்ய நினைப்பதும் முரணாக உள்ளது.
சென்னையில் 2020ல் காற்று மாசுபாடு (PM-25 micron) காரணமாக 11,000 பேர் முன்கூட்டியே இறந்துள்ளனர். அந்தாண்டில் மட்டும் காற்று மாசுபாட்டால் சென்னைக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு, ரூ. 10,910 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
வெப்ப அலையின் போது நுரையீரல் பிரச்னை காராணமாக இறப்பு ஏற்படும் வாய்ப்பு 1.8 சதவீதம் முதல் 8.2 சதவீதம் அதிகம். மேலும், வெப்ப அலையின்போது, 29°Cக்கு மேல், ஒவ்வொரு 1°C உயர்விற்கும், நுரையீரல் பிரச்னைக்காக மருத்துவமனை சேர்க்கை 8 சதவீதம் உயர்கிறது.
இந்தியாவில் காற்று மாசு காரணமாக, ஆண்டுக்கு 16.7 லட்சம் பேர் இறக்கின்றனர். ரூ.2.60 லட்சம் கோடி இழப்பீடு எற்படுகிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
நுரையீரல் புற்றுநோயால் ஏற்படும் 29 சதவீத மரணத்திற்கு காற்று மாசுபாடே காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
இதய நோய் இறப்புகள் - 2.5 சதவீதம்,
சுவாசத் தொற்று இறப்பு – 17 சதவீதம்,
பக்கவாத இறப்புகள் – 24 சதவீதம் நிகழ காற்று மாசுபாடே காரணம்.
தலைநகர் டெல்லியில் மட்டும் 22 லட்சம் குழந்தைகள் நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் ஏற்படும் பக்கவாதம் (Stroke), இரதயப் பிரச்சனைகள், நுரையீரல் புற்றுநோய் பாதிப்பில் மூன்றில் ஒரு பங்கிற்கு காற்று மாசுபாடே காரணம். டெல்லியில் மட்டும் காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 10,000 முதல் 30,000 பேர் முன்கூட்டியே இறக்கின்றனர்.
சுத்தமான காற்றை சுவாசிப்பது அரசியல் சாசனப்படி அடிப்படை உரிமை என இருந்தும்,15 வயதிற்கு உட்பட்ட 93 சதவீதம் குழந்தைகளுக்கு இந்தியாவில் அது முற்றிலும் மறுக்கப்படுகிறது.
குழந்தைகளின் மன அமைதிக்கும், மூளை வளர்ச்சிக்கும் பெரும் பாதிப்பை காற்று மாசுபாடு ஏற்படுத்துகிறது. பெரியவர்களுக்கு ஞாபக மறதி, மன அழுத்தம், பக்கவாதம் போன்ற நோய்களையும் காற்று மாசுபாடு ஏற்படுத்துகிறது.
சமீபத்திய உலக ஆய்வின்படி, உலகில் மோசமான காற்று மாசுபாடு உள்ள 50 நகரங்களில் 39 நகரங்கள் இந்தியாவில் இருப்பது தெரியவந்துள்ளது. உலகிலேயே 2வது மிக மோசமான மாசுபட்ட நாடாக இந்தியா உள்ளது. இதனால், சராசரி இந்தியர் ஒருவரின் ஆயுட்காலம் 5.3 ஆண்டுகள் குறைகிறது. வட இந்தியர் ஒருவரின் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் குறைகிறது. டெல்லியில் உள்ள 1.8 கோடி பேரின் ஆயுட்காலம் 11.9 ஆண்டுகள் குறைகிறது.
இந்தியிவில் 103 கோடி பேர், உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த காற்றின் தரத்தை சுவாசிக்க முடிவதில்லை. 1998 மாசை ஒப்பிட்டால், தலைநகர் டெல்லியில் தற்போது காற்று மாசுபாடு 67.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிக மாசடைந்த நகரங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.
காற்று மாசுபாடு அதிகம் இருக்கும்போது நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வதும் நல்லதல்ல. டெல்லியில் காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அவலம் நடைபெறுகிறது.
தமிழகம், 2024ம் ஆண்டு கோடைக்கால மின்தேவையை பூர்த்தி செய்ய (18,000 MW) 5 லட்சம் டன் நிலக்கரியை இந்தோனேசிய அரசிடமிருந்து இறக்குமதி செய்ய உள்ளது.
நிலக்கரி மின்சாரம் மிக மோசமான காற்று மாசை ஏற்படுத்தும். மேலும் சல்பர் டைஆக்ஸைட் வாயுவை நீக்கும் தொழில்நுட்பம் அரசு நிலக்கரி மின் நிலையங்கள் ஒன்றில் கூட இல்லாமல் இருப்பது இன்னமும் மோசமான காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும்.
எனவே மக்களின் அடிப்படை உரிமையான சுத்தமான காற்றை சுவாசிக்கும் உரிமையை மனதில் கொள்ளாமல், மோசமான காற்று மாசை எற்படுத்தும் நிலக்கரி மூலம் மின் தேவையை பூர்த்தி செய்ய நினைப்பதும் முரணாக உள்ளது.
தமிழகத்தில் 7,000 மெகாவாட் வரை சூரிய சக்தி மூலம் மின்சாரம் பெறப்படும் வேளையில், மோசமான காற்று மாசை ஏற்படுத்தும் நிலக்கரிக்குப் பதில் சுற்றுசூழலுக்கு அதிகம் கேடு விளைவிக்காத புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்துவது சிறப்பாக இருப்பதுடன், மக்கள் நலன் மற்றும் சுகாதாரம் பேணிகாக்கப்படும் என்பதில் ஐயமில்லை என்பதால் உரிய நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு முன்வருமா என்று மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
டாபிக்ஸ்