உங்களுக்கு சிசேரியன் டெலிவரியா? விரைவில் மீண்டு வர கண்டிப்பா இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்
சிசேரியன் பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் உணவில் சில பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கர்ப்ப காலத்தில் ஒன்பது மாதங்களுக்கு, குழந்தைக்கு தாயின் உடலில் இருந்து மட்டுமே ஊட்டச்சத்து கிடைக்கும். பிரசவத்திற்குப் பிறகும், குழந்தையின் ஊட்டச்சத்து தேவை ஆறு மாதங்களுக்கு தாயின் பால் மூலமாக மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த காரணத்திற்காகவே, கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு ஆறு மாதங்களுக்கு பெண்கள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். அதுவும் சி - பிரிவு பிரசவம் என்றால் இன்னும் சற்று கூடுதல் கவனம் நம் உணவில் தேவைப்படுகிறது.
சிசேரியன் முறை
சி -பிரிவு பிரசவம் ஒரு அறுவை சிகிச்சை முறை கொண்டது. தாயின் வயிறு மற்றும் கருப்பையில் செய்யப்பட்ட கீறல் மூலம் பிரசவம் நடைபெறுகிறது. பிரசவத்தின் போது குழந்தைக்கும் தாய்க்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலையில் சாதாரண பிரசவத்திற்கு பதிலாக சிசேரியன் செய்யப்படுகிறது. சி -பிரிவு காயம் குணமாக பிரசவித்த பெண் குறைந்தது 40 நாட்கள் ஒய்வு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் சிசேரியன் பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் உணவில் சில பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.