உங்கள் கழிவறையில் இதை மட்டும் செய்து விடாதீர்கள்! செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உங்கள் கழிவறையில் இதை மட்டும் செய்து விடாதீர்கள்! செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன?

உங்கள் கழிவறையில் இதை மட்டும் செய்து விடாதீர்கள்! செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன?

Suguna Devi P HT Tamil
Nov 25, 2024 03:00 PM IST

நாம் அன்றாடம் பயன்படுத்தும் கழிவறையில் ஆயிரக்கணக்கான நோய்க் கிருமிகள் இருக்கின்றன. நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் நமது உடலுக்குள் இவை எளிமையாக செல்கின்றன.

உங்கள் கழிவறையில் இதை மட்டும் செய்து விடாதீர்கள்! செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன?
உங்கள் கழிவறையில் இதை மட்டும் செய்து விடாதீர்கள்! செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன?

சுத்தமான கழிவறை 

பலர் ஆரோக்கியமாக இருக்க தங்கள் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், பின்வரும் பழக்கத்திலிருந்து விடுபடாவிட்டால், இந்தச் சுத்தமெல்லாம் வீணாகி விடும் என்றும், உங்களுக்கும் குளியலறையில் உள்ள மற்ற பொருட்களுக்கும் கிருமிகள் பரவக்கூடும் என்றும் தொற்றுநோயியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ப்ளஷ்: ஒவ்வொரு முறையும் மலம் கழித்த பிறகு , கழிப்பறை இருக்கையைத் திறந்து வைத்து ப்ளஷ் தண்ணீர் பாய்ச்சுவதைத் தவிர்க்க வேண்டும். டாய்லெட் இருக்கையை திறந்து வைத்து கழிப்பறை இருக்கையை ஃப்ளஷ் செய்வதால், மலதிதில் உள்ள பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகள் மேலே எழும்பும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒரு கழிப்பறை ஃப்ளஷ் காற்றில் கிருமிகளின் நீரோட்டத்தை வெளியிடலாம். இருக்கை மூடப்படாவிட்டால், இந்தக் கிருமிகள் குளியலறை டவல் ரேக்குகள், சிங்க் கைப்பிடிகள் மற்றும் பல் துலக்கும் ப்ரஷ்களில் கூட ஒட்டிக்கொள்ளலாம். அவை அனைத்தையும் தொட்டுப் பயன்படுத்துவதன் மூலம், கிருமிகள் உங்கள் உடலில் நுழையலாம்.

நோய்க் கிருமிகள் 

இ-கோலி , சால்மோனெல்லா, நோரோவைரஸ் மற்றும் வயிறு மற்றும் குடலில் வளரும் பிற கிருமிகளை நிராகரிக்க முடியாது. ஃப்ளஷ் செய்யும் போது மூடியிருக்கும் இந்த கழிவறை மூடியை கழுவி கிருமி நீக்கம் செய்ய மறக்க வேண்டாம் என்று சுகாதார நிபுணர்கள் நமக்கு நினைவூட்டுகிறார்கள். தினமும் சுத்தம் செய்ய முடியாதவர்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது கழிவறை இருக்கையை கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

அடிக்கடி தொடும் குளியலறையின் மேற்பரப்புகளான டாய்லெட் ஃப்ளஷ் கைப்பிடிகள், சிங்க் குழாய்கள், கதவு கைப்பிடிகள் மற்றும் ஷவர் கைப்பிடிகள் போன்றவற்றை வாரம் ஒருமுறை கிருமி நீக்கம் செய்ய மறக்காதீர்கள். கழிவறையின் உள்ளே போதுமான காற்றோட்டம் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் . கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும், கழிப்பறைப் பொருட்களைத் தொட்ட பிறகும் குறைந்தது 20 வினாடிகளுக்கு உங்கள் கைகளைக் கழுவவும். குளியலறை துண்டுகளை அடிக்கடி மாற்றுவதையும் சோப்பு, பல் துலக்குதல், ரேசர்கள் மற்றும் துண்டுகள் போன்ற தனிப்பட்ட பொருட்களைப் பகிர்வதைத் தவிர்ப்பதும் பல நன்மைகளை வழங்கும். நோய்க் கிருமிகளில் இருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கை முறைகளை பின்பற்றவும். 

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.