அடம்பிடிக்கும் தொப்பையை அடித்து உள்ளே விரட்டும் வழிகள்! இந்த பயிற்சிகளை விடாமல்செய்யுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அடம்பிடிக்கும் தொப்பையை அடித்து உள்ளே விரட்டும் வழிகள்! இந்த பயிற்சிகளை விடாமல்செய்யுங்கள்!

அடம்பிடிக்கும் தொப்பையை அடித்து உள்ளே விரட்டும் வழிகள்! இந்த பயிற்சிகளை விடாமல்செய்யுங்கள்!

Priyadarshini R HT Tamil
Nov 24, 2024 07:00 AM IST

தொங்கும் தொப்பையை அடித்துவிரட்டும் வழிகள் என்னவென்று பாருங்கள்.

அடம்பிடிக்கும் தொப்பையை அடித்து உள்ளே விரட்டும் வழிகள்! இந்த பயிற்சிகளை விடாமல்செய்யுங்கள்!
அடம்பிடிக்கும் தொப்பையை அடித்து உள்ளே விரட்டும் வழிகள்! இந்த பயிற்சிகளை விடாமல்செய்யுங்கள்!

கால்களை மேலே உயர்த்துவது

தரையில் நேராகப் படுத்துக்கொண்டு, கால்களை மட்டும் தூக்க வேண்டும். அடிவயிற்றுப்பகுதி உள்ளே செல்லவேண்டும். இதை செய்வது கடினம், ஆனால் இப்படி செய்யும்போது, உங்களின் அடிவயிற்றுப்பகுதிக்கு நல்ல மசாஜ் கிடைக்கும். இந்தப்பயிற்சி உங்களுக்கு வலுவைக்கொடுத்து, உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்கும்.

ப்ளாங்க் ஹோல்ட்

உங்கள் கைகள் மற்றும் கால்கள் மட்டும் தரையில் இருக்கவேண்டும். முழு உடலையும் வளைத்து நீங்கள் உடற்பயிற்சி செய்யவேண்டும். இது உங்கள் உடலில் உள்ள மொத்த தசைகளுக்கும் வலுவைக்கொடுக்கும். இது உங்கள் வயிற்றுக்கு மட்டும் பயிற்சியல்ல, உங்கள் ஒட்டுமொத்த உடலும் நல்ல நிலையில் நிலைத்திருக்க உதவும்.

ரஷ்யன் டிவிஸ்ட்

ரஷ்யன் டிவிஸ்ட் என்பது உங்கள் வயிற்றில் உள்ள தசைகளை அடித்து விரட்டும். அமர்ந்துகொண்டு கால்களை உயர்த்திக்கொண்டு கைகளை இருபுறங்களிலும் ஆட்டவேண்டும். இது உங்களுக்கு வலு கொடுக்கும். 10ல் துவங்கி மெல்லமெல்ல அதிகரித்துக்கொள்ளுங்கள்.

பைசைக்கிள் கிரஞ்சஸ்

இந்த உடற்பயிற்சியை நீங்கள் படுத்துக்கொண்டே கால்களை உயர்த்தி சைக்கிள் ஓட்டுவதுபோல் செய்யவேண்டும். இவ்வாறு செய்யும்போது, உங்கள் அடிவயிறு மற்றும் மேல் வயிறு இரண்டும் வலுப்பெறும். இதை நீங்கள் இருபுறமும் 15 முதல் 20 வரை செய்யவேண்டும். அப்போதுதான் உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

மூட்டிகளை மடக்குவது

படுத்துக்கொண்டு முட்டிகளை மடக்கி மடக்கி எடுக்கவேண்டும். அப்போது உங்கள் வயிற்றில் உள்ள தசைகள் நன்றாக வற்றிவிடும். இதை நீங்கள் தினமும் 12 முதல் 15 முறை செய்யும்போது உங்கள் உடல் வலுப்பெறும். இது உங்கள் வயிற்றில் உள்ள தொப்பை நன்றாக எரித்துவிடும்.

சைட் பிளாங்க் டிப்ஸ்

நீங்கள் கைகள் மற்றும் கால்களை மற்றும் ஊன்றி தரையில் படுத்துக்கொண்டு இருபுறங்களிலும் மாற்றி மாற்றி ஒருபுறத்தை அட்ஜெஸ்ட் செய்து நிற்க முயற்சிக்கவேண்டும். மிகவும் கடுமையான பயிற்சி என்பதால் மிகுந்த கவனத்துடன் செய்யவேண்டும். இது உங்கள் இடுப்புப்பகுதிகளை நன்றாக இறுக்கமாக்கும். உங்கள் உடலுக்கு நல்ல வலுத்தரும்.

உட்கார்ந்துகொண்டு முன்புறம் நோக்கி குனிவது

இரு கால்களையும் நன்றாக நீட்டி உட்கார்ந்துகொள்ளவேண்டும். இரு கைகளையும், முட்டியை மடக்காமல் கைலின் கட்டை விரலை பிடிக்கவைக்கவேண்டும். வயிற்றுப்பகுதி நன்றாக உள்ளிறங்கும். அப்போது உங்களுக்கு அங்குள்ள கொழுப்புக்கள் கரைக்கப்படும். இதுபோல் நீங்கள் செய்யும்போது, உங்கள் உடலுக்கு நல்ல நெகிழ்தன்மை கிடைக்கும். இந்த உடற்பயிற்சியை உங்கள் இரவு நேர வழக்கமாக்கிக்கொண்டீர்கள் என்றால், அது உங்கள் மனதுக்கு மகிழ்ச்சியையும் தரும். உங்களுக்கு நல்ல உறக்கத்தையும் தரும். உங்கள் உடல் இலகுவாகும். மேலும் தொங்கும் தொப்பையும் தெறித்து ஓடும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.