ஹீமோகுளோபினை அதிகரிக்க வேண்டுமா? இரும்புச்சத்துக்கள் நிறைந்த இந்த 10 பழங்கள் உணவில் கட்டாயம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஹீமோகுளோபினை அதிகரிக்க வேண்டுமா? இரும்புச்சத்துக்கள் நிறைந்த இந்த 10 பழங்கள் உணவில் கட்டாயம்!

ஹீமோகுளோபினை அதிகரிக்க வேண்டுமா? இரும்புச்சத்துக்கள் நிறைந்த இந்த 10 பழங்கள் உணவில் கட்டாயம்!

Priyadarshini R HT Tamil
Dec 16, 2024 10:05 AM IST

இரும்புச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பழங்கள் எவை?

ஹீமோகுளோபினை அதிகரிக்க வேண்டுமா? இரும்புச்சத்துக்கள் நிறைந்த இந்த 10 பழங்கள் உணவில் கட்டாயம்!
ஹீமோகுளோபினை அதிகரிக்க வேண்டுமா? இரும்புச்சத்துக்கள் நிறைந்த இந்த 10 பழங்கள் உணவில் கட்டாயம்!

தர்ப்பூசணி

100 கிராம் தர்ப்பூசணியில் 0.4 மில்லி கிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இது அதிக அளவு இல்லையென்றாலும், உங்களக்கு புத்துணர்வு தரும் சுவையுடன் உங்களின் அன்றாட இரும்புச் சத்துக்கள் தேவையை பூர்த்தி செய்யும்.

மாதுளை

100 கிராம் மாதுளையில் 0.3 மில்லிகிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடல் இரும்புச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

மல்பெரிகள்

100 கிராம் மல்பெரிகளில் 2.6 மில்லி கிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இதில் இரும்புச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இது இரும்புச்சத்துக்கள் உறிஞ்சும் திறனை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

பேரிட்சை பழம்

100 கிராம் பேரிட்சை பழத்தில் 0.9 மில்லி கிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இதில் இரும்புச்சத்துக்கள் மற்றும் இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளது. இவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்றாகும். இது உங்களுக்கு ஆற்றலை அதிகரிக்கும் ஸ்னாக்ஸ் ஆகும்.

உலர் திராட்சை

100 கிராம் உலர்ந்த திராட்சையில் 1.9 மில்லி கிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இதில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனே வழங்கக்கூடிய எளிய ஸ்னாக்ஸ்கள் ஆகும்.

அத்திப்பழம்

100 கிராம் அத்திப்பழத்தில் 0.2 மில்லி கிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம். அது உங்களின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மேலும் இரும்புச்சத்துக்கள் உட்கொள்ளும் அளவையும் அதிகரிக்கிறது.

ஆப்ரிகாட்

100 கிராம் உலர்ந்த ஆப்ரிகாட்களில், 2.7 மில்லி கிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம். இது உங்கள் உடல் இரும்புச்சத்தைப் பெறவும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

கிவி

100 கிராம் கிவியில் 0.3 மில்லி கிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இதில் அதிகளவில் இரும்புச்சத்துக்கள் இல்லையென்றாலும், அதிகளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடல் இரும்புச்சத்துக்களை உறிஞ்சும் திறனை அதிகரிக்கிறது.

ஆப்பிள்

100 கிராம் ஆப்பிளில் 0.5 மில்லி கிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இதுவும் அதிக அளவு இல்லையென்றாலும், இவை ஒட்டுமொத்த இரும்பு உட்கொள்ளும் அளவை அதிகரித்து, உங்களின் முழு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ப்ரூன்

100 கிராம் ப்ரூன்களில் 0.93 மில்லிகிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளது. உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்க இது ஒரு சிறந்த ஸ்னாக்ஸ் ஆகும். இது உங்கள் உடலில் இரும்புச்சத்துக்களை அதிகரிக்கிறது. மேலும் உங்கள் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வழிவகை செய்கிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.