தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vazhaipoo Vadai : வாழைப்பூவில் வடை, மாலை தேநீருக்கு செம்ம மேட்ச்! – இப்படி செஞ்சு பாருங்க

Vazhaipoo Vadai : வாழைப்பூவில் வடை, மாலை தேநீருக்கு செம்ம மேட்ச்! – இப்படி செஞ்சு பாருங்க

Priyadarshini R HT Tamil
Jul 24, 2023 12:31 PM IST

Vazhaipoo Vadai : வாழைப்பூவை சிறிது இட்லி தட்டில் வேக வைத்து அரைத்தும் எடுத்துக்கொள்ளலாம். வடை பதத்துக்கு நன்றாக கலந்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். எனவே ஒவ்வொரு முறை தண்ணீர் சேர்த்து அரைக்கும்போதும் மிக கவனமாக இருக்க வேண்டும்.

வாழைப்பூ வடை
வாழைப்பூ வடை

ட்ரெண்டிங் செய்திகள்

வாழைப்பூ வடை செய்வதற்கு வாழைப்பூவை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். அது சிறிது சிரமமான வேலைதான். வாழைப்பூவை அதன் இதழ்களில் இருந்து பிரித்து எடுத்து அந்த பூவில் இடையில் இருக்கும் நார்களை அகற்றிவிடவேண்டும்.

வாழைப்பூ வடை

தயாரிக்கும் நேரம் – 45 நிமிடம்

சமையல் நேரம் – 30 நிமிடம்

தேவையான பொருட்கள்

வாழைப்பூ – 1

கடலை பருப்பு – 1 கப்

வெங்காயம் – 1 (நன்றாக நறுக்கியது)

மிளகாய் வற்றல் – 2 (ஒரு ஸ்பூன்)

பூண்டு – 4 பல்

இஞ்சி – ஒரு இன்ச்

கறிவேப்பிலை கொத்து – 2

சீரகம் – அரை ஸ்பூன்

சோம்பு – அரை ஸ்பூன்

மஞ்சள் பொடி – கால் ஸ்பூன்

பெருங்காயத்தூள் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

வாழைப்பூவை சுத்தம் செய்து நன்றாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

கடலை பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இஞ்சி, பூண்டு, வர மிளகாய், சீரகம், சோம்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், கடலைபருப்பு ஆகியவற்றை கொரகொரவென அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு, பெருங்காயம் சேர்த்து வடை மாவு பதத்தில் கலந்துகொள்ள வேண்டும்.

அதனுடன் நறுக்கிய வாழைப்பூ, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொண்டு, இரண்டையும் சேர்த்து நன்றாக பிசையவேண்டும்.

வாழைப்பூவை சிறிது இட்லி தட்டில் வேக வைத்து அரைத்தும் எடுத்துக்கொள்ளலாம். வடை பதத்துக்கு நன்றாக கலந்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். எனவே ஒவ்வொரு முறை தண்ணீர் சேர்த்து அரைக்கும்போதும் மிக கவனமாக இருக்க வேண்டும்.

எண்ணெயை சூடாக்கி, வடையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வறுத்து எடுக்க வேண்டும்.

பொன்னிறமாக வறுத்து எடுக்கவும், அவற்றை எண்ணெய் வடித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கொர, கொர வென்று அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து பொருட்களையும் கையால் பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

வடையை சரியான அளவில் உருட்டிக்கொள்ள வேண்டும். வாழை இலை அல்லது பால் கவரில் வைத்து வடைகளை தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

மாலை நேர சிற்றுண்டிக்காக இதை தேநீருடன் பரிமாறலாம்.

மேலும் இதை எந்த சாதத்துடனும் பரிமாறலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்