தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Vaginal Infection Are You Suffering From Genital Infections Here's What You Can Do To Prevent It

Vaginal Infection : பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுகளால் அவதியா? இதோ இவற்றை பின்பற்றி தடுக்கலாம்!

Priyadarshini R HT Tamil
Mar 12, 2024 05:18 PM IST

Vaginal Infection : வீட்டிலே செய்யக்கூடிய எளிய மருத்துவமுறைகளை பின்பற்றி உங்களுக்கு பலன் கிடைக்காவிட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

Vaginal Infection : பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுகளால் அவதியா? இதோ இவற்றை பின்பற்றி தடுக்கலாம்!
Vaginal Infection : பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுகளால் அவதியா? இதோ இவற்றை பின்பற்றி தடுக்கலாம்!

ட்ரெண்டிங் செய்திகள்

 ஆனால் அது உங்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே நீங்கள் உங்கள் மருத்துவரை அணுகுவது சிறந்தது. ஆனால் அதற்கு முன்னர் நீங்கள் வீட்டிலிருந்தே சில நிவாரணங்களைப்பெறலாம். அவை என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உடலுறவை தவிர்த்துவிடுங்கள்

அனைத்து வகை உடலுறவையும் தவிர்த்துவிடுங்கள். தொற்று சரியானவுடன் அறிகுறிகள் மறைந்தவுடன், உடலுறவு வைத்துக்கொள்ளலாம். தொற்று இருக்கும்போது உடலுறவு வைத்துக்கொண்டால் அது உங்கள் பிறப்புறுப்பில் எரிச்சலை ஏற்படுத்தும். உங்களின் பார்ட்னருக்கும் தொற்றை பரவச்செய்யும்.

மணம் வீசும் பொருட்களால் கழுவக்கூடாது

மணம் வீசும் திரங்களைப் பயன்படுத்தி பிறப்புறுப்பை கழுவக்கூடாது அல்லது கடும் கிருமி நாசினிகள் கொண்டும் கழுவக்கூடாது. அது இயற்கையில் பிறப்புறுப்பில் உள்ள பாக்டீரியா சமநிலையை குறைக்கும். பிறப்புறுப்பு தொற்றுகள் மற்றும் எரிச்சல், அரிப்பை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும்

பிறப்புறுப்பில் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. இயற்கை நார்களால் ஆன பருத்தி போன்ற ஆடைகளை மட்டும் அந்தரங்க பகுதிகளில் அணியவேண்டும். இறுக்கமான ஆடைகள், செயற்கை இழை ஆடைகள், ஈரத்தை உறிஞ்சக்கூடிய ஆடைகளை தவிர்க்க வேண்டும். இவை பாக்டீரியா அல்லது ஈஸ்ட் தொற்றுகளை ஏற்படுத்தும்.

ஈரத்தை குறைக்க வேண்டும்

ஈரப்பதம் நிறைந்த பிறப்புறுப்பு, தொற்றுக்கள் தோன்றுவதற்கான வாசலாக அமைந்துவிடும். எனவே உங்கள் பிறப்புக்களை துடைத்து சுத்தமாகவும், காயவிட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக குளித்தவுடன் மற்றும் நீச்சல் முடித்தவுடன் அந்த இடத்தை சுத்தம் செய்வது மிகவும் அவசியம். ஈரமான ஆடைகளை அணியக்கூடாது. ஈரமான இடத்தில் அமரக்கூடாது. இதனால் பூஜ்ஜைகள் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களை தவிர்க்க வேண்டும்

வாசனை நிறைந்த சோப்கள், மணம் நிறைந்த பர்ஃப்யூம்கள் மற்றும் மற்றவற்றை தவிர்க்க வேண்டும். அதில் எரிச்சல் மற்றும் அழற்சியை ஏற்படுத்தும் பொருட்கள் கலந்திருக்கலாம். மணம் எரிச்சலை ஏற்படுத்தலாம். மேலும் அந்த பிரச்னையை அதிகமாக்கலாம். எனவே மணமில்லாத பொருட்களை பயன்படுத்துங்கள். அதுவே சருமத்துக்கும் நல்லது.

சொரியக்கூடாது

எரிச்சல் மற்றும் அரிப்பு உள்ள பகுதிகளில் சொரிவது நன்றாக இருக்கும். ஆனால், சொரியக்கூடாது. அது கூடுதல் எரிச்சல் மற்றும் அரிப்பு அல்லது வீக்கத்தை ஏற்படுத்தும். தொற்று கூட ஏற்படலாம். அந்த பகுதியை சுத்தமான துணி அல்லது பேப்பர் வைத்து மெதுவாக அழுத்திக்கொடுத்து, எரிச்சலை போக்கலாம்.

சர்க்கரை அளவை குறைக்க வேண்டும்

உங்களுக்கு ஈஸ்ட் தொற்று ஏற்பட்டிருந்தால், சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்களை தவிர்க்க வேண்டும். ஈஸ்ட் தொற்று சர்க்கரையை அதிகரிக்கும். எனவே சர்க்கரை சாப்பிடுவதை குறைப்பது நல்லது. அது ஈஸ்ட் அதிகரிப்பதை குறைத்து, குணமாக வழிவகுக்கும்.

தனிப்பட்ட பொருட்களை பகிர்ந்துகொள்வதை தவிர்க்க வேண்டும்

ஆடைகள், துண்டுகள், ஜட்டிகள் உள்ளிட்ட மற்ற தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும். அதுவும் தொற்றை ஏற்படுத்தும்.

சிசிக்சை முறைகள்

பிறப்புறுப்பு தொற்றுக்காக உங்களுக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டால், அவற்றை தொடர்ந்து எடுக்க வேண்டும். அது பூஞ்ஜையை குறைக்கும் கிரீம் அல்லது கிருமிக்கொல்லிகள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எனவே உங்கள் மருத்துவரின் பரிந்துரையை கட்டாயம் பின்பற்றுங்கள். கொஞ்சம் சரியானவுடனே நாம் சிகிச்சையை பாதியில் விடுவோம். ஆனால் அதுபோல் செய்யாதீர்கள். பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சையை முற்றிலும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மருத்துவரை அணுகவேண்டும்

உங்களுக்கு நீண்ட கால தொற்று ஏற்பட்டால், நீங்கள் கட்டாயம் மருத்துவரை அணுகவேண்டும். அவர் கூறும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். அவர் உங்களின் குறிப்பிட்ட அறிகுறிகளுக்கு சிகிச்சை வழங்கலாம். உங்களின் மருத்துவ வரலாறு மற்றும் தனிப்பட்ட தேவைக்கு ஏற்ப சிகிச்சையளிக்கலாம்.

வீட்டிலே செய்யக்கூடிய எளிய மருத்துவமுறைகளை பின்பற்றி உங்களுக்கு பலன் கிடைக்காவிட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்