வழக்கமான முறையில் அன்றி கேரட் அல்வாவை இப்படி செய்து பாருங்கள்! தித்திக்கும் தீபாவளியைக் கொண்டாடுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வழக்கமான முறையில் அன்றி கேரட் அல்வாவை இப்படி செய்து பாருங்கள்! தித்திக்கும் தீபாவளியைக் கொண்டாடுங்கள்!

வழக்கமான முறையில் அன்றி கேரட் அல்வாவை இப்படி செய்து பாருங்கள்! தித்திக்கும் தீபாவளியைக் கொண்டாடுங்கள்!

Priyadarshini R HT Tamil
Oct 20, 2024 04:00 PM IST

வழக்கமான முறையில் அன்றி கேரட் அல்வாவை இப்படி செய்து பாருங்கள். தித்திக்கும் தீபாவளியைக் கொண்டாடி மகிழலாம். கேரட் அல்வா செய்ய இரண்டு முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வழக்கமான முறையில் அன்றி கேரட் அல்வாவை இப்படி செய்து பாருங்கள்! தித்திக்கும் தீபாவளியைக் கொண்டாடுங்கள்!
வழக்கமான முறையில் அன்றி கேரட் அல்வாவை இப்படி செய்து பாருங்கள்! தித்திக்கும் தீபாவளியைக் கொண்டாடுங்கள்!

தேவையான பொருட்கள்

கேரட் – 2 கப் துருவியது

பால் – ஒன்றரை கப் (காய்ச்சி ஆறவைத்தது)

சர்க்கரை – அரை கப்

நெய் – டேபிள் ஸ்பூன்

கோவா – 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்ப்பொடி – கால் ஸ்பூன்

நட்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை சூடாக்கி, ஒரு டேபிள் ஸ்பூன் முந்திரியை வறுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு தேவையெனில் கூடுதல் நட்ஸ்களை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். கேரட்டை நன்றாக கழுவி, ஓரங்களை வெட்டிவிட்டு, தோலை சீவிவிட்டு, துருவி 2 கப் அளந்து எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

அதையும் நெய்யில் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். 5 நிமிடம் வரை வதக்க வேண்டும் அல்லது நன்றாக சுருங்கும் வரை வதக்க வேண்டும். அப்போது அதன் நிறம் சிறிது மாறும். அதனுடன் காய்ச்சிய கொழுப்பு நிறைந்த பாலை சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

அடுப்பை குறைவான தீயில் வைத்து, நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். அது நன்றாக வெந்து, மெதுவாக குறையத்துவங்கும். அவ்வப்போது இடையிடையே கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். 10 நிமிடங்கள் பால் முற்றிலும் வற்றுமளவு வந்துவிடும்.

அடுப்பில் பிடித்துவிடாமல் இருக்க இடையிடையே கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். ஓரங்களில் படிந்துள்ள பாலாடைகளையெல்லாம் சேர்த்து விட்டு நன்றாக கிளறவேண்டும். அவைதான் அல்வாவுக்கு சுவை கொடுப்பவை.

பால் நன்றாவே வற்றிய நிலையில் 2 டேபிள் ஸ்பூன் இனிப்பில்லாத கோவாவை சேர்க்கவேண்டும். இனிப்புள்ள கோவாவை சேர்த்தால், சர்க்கரையை அதற்கு ஏற்றாற்போல் சேர்க்கவேண்டும். வீட்டில் கோவா இல்லையென்றால், சேர்க்கத்தேவையில்லை.

பின்னர் சர்க்கரையை சேர்க்க வேண்டும். சர்க்கரை உருகி கரைந்து வரும். தொடர்ந்து நன்றாக கிளறவேண்டும். தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் கடாயின் அடியில் அல்வா ஒட்டாது. அல்வா கெட்டியாக துவங்கும். தண்ணீர் முழுவதும் வற்றி, ஒருவித பிசுபிசுப்பு பதம் வரும். அதுவே சரியான பதம்.

இப்போது நெய், ஏலக்காய்ப்பொடி சேர்த்து ஒரே ஒருமுறை நன்றாக கிளறவேண்டும். இப்போது வறுத்த முந்திரியை சேர்த்து இறக்கிவிடவேண்டும். உங்களுக்கு பிடித்த நட்ஸ்களை சேர்த்துக்கொள்ளலாம். சுவையான, இனிமையான கேரட் அல்வா சாப்பிட தயார்.

குறிப்புகள்

கேரட் பச்சை வாசம் போய், வேகும் முன்னர் சர்க்கரையை சேர்க்காதீர்கள்.

சர்க்கரை உங்களுக்கு தேவையான அளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.

கேரட்டை எப்போதும் நெய்யில் நன்றாக வதக்கிவிட்டு, பச்சை வாசம் போன பின்னர்தான் பால் சேர்க்க வேண்டும்.

அடிக்கனமான பாத்திரத்தை பயன்படுத்த வேண்டும்.

கேரட் அல்வா செய்யும்போது முழுவதுமே அடுப்பு குறைவானது முதல் மிதமான தீயிலே இருக்கவேண்டும்.

நீங்கள் விரும்பினால் கூடுதலாக உலர் திராட்சைகள் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த அல்வாவை நீங்கள் 2 அல்லது 3 நாட்கள் வரை ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம். வெளியில் வைத்தால் ஒரே ஒரு நாள் மட்டும்தான் வைக்க முடியும்.

கேரட் அல்வா செய்யும் மற்றொரு முறை

கேரட்டின் சாறு பிழிந்து அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் கார்ன் ஃப்ளோர் மாவு சேர்த்து கிளறவேண்டும். தேவையான அளவு சர்க்கரை, சிட்டிகை ஏலக்காய்ப் பொடி சேர்த்து ஒரு ட்ரேயில் நெய் தடவி ஊற்றிவிடவேண்டும். ஆறிய பின் துண்டுகளாக வெட்டி எடுத்தால், கேரட் அல்வா தயார். இரண்டு சுவையிலும் சாப்பிட்டு மகிழுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.