Top 9 Benefits of Rice Water : சாதம் வடித்த கஞ்சியில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொண்டால் அதை கீழே ஊற்றமாட்டீர்கள்!
Top 9 Benefits of Rice Water : சாதம் வடித்த கஞ்சியில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொண்டால் அதை கீழே ஊற்றமாட்டீர்கள். தினமும் உணவுடன் சேர்த்துக்கொள்வீர்கள்.
அரிசி கஞ்சி ஆரோக்கிய நன்மைகள் நிறைந்ததா? அதில் உள்ள ஆரோக்கிய நன்மைகளுக்காக நாம் அதை சேர்த்துக்கொள்ள வேண்டுமா என்றால், ஆம் என்பதுதான் பதில், அதில் உள்ள நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்வது அவசியம். அரிசியை வேகவைத்து வடிக்கும்போது உங்களுக்கு அதில் இருந்து கஞ்சி கிடைக்கிறது. இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும், ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இது பாரம்பரிய இயற்கை நிவாரணியாக பலவற்றை குணப்படுத்துகிறது. இங்கு இந்த சாதம் வடித்த கஞ்சி உங்கள் உடலுக்கு என்ன நன்மைகளைத் தரும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதை அறிந்துகொண்டு சாதம் வடித்த கஞ்சியை இனி கீழே ஊற்றாமல் பயன்படுத்தி உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
செரிமானத்தை அதிகரிக்கிறது
அரிசி வடித்த கஞ்சி உங்கள் உடலில் ஏற்படும் செரிமான கோளாறுகளைப் போக்கும் இயற்கை வழிமுறையாகும். இது வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானக் கோளாறுகளை சரிசெய்கிறது. இதன் இனிமையான குணங்கள் குடல் இயக்கத்தை அதிகரிக்கிறது. குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கிறது
சாதம் வடித்த கஞ்சியில் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதை பருகும்போது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கிறது. உடலில் எலக்ட்ரோலைட்களை சமப்படுத்துகிறது. குறிப்பாக நோய் வாய்ப்பட்ட காலங்கள் மற்றும் வெயில் காலங்களில் உடல் இழக்கும் நீர்ச்சத்தை வழங்குகிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
சாதம் வடித்த கஞ்சியில் வைட்டமின் பி1, பி2, பி6 ஆகியவை உள்ளன. இது மூளையில் இயக்கம் மற்றும் உடல் வளர்சிதைக்கும் சிறந்தது. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் உடலுக்கு தேவையான மெக்னீசியம் மற்றும் பொட்டாசியச் சத்துக்களை அதிகரிக்கச் செய்கிறது.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
சாதம் வடித்த கஞ்சி உடலை குளுமைப்படுத்துகிறது. வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது. சாதம் வடித்த கஞ்சியை பருகுவது அல்லது உடலில் பூசுவது உங்கள் சருமத்தில் உள்ள எரிச்சலைப் போக்குகிறது. சரும நிறத்தை அதிகரிக்கிறது. முகப்பருக்களை குறைக்கிறது.
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது
சாதம் வடித்த கஞ்சியில் உள்ள பொட்டாசியச் சத்துக்கள் உங்கள் உடலில் சோடியம் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தை குறைப்பதன் மூலம் இதைச் செய்கிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது
சாதம் வடித்த கஞ்சியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க உதவுகிறது. இது உடல் தொற்றுக்களைப்போக்கிக்கொள்ளவும், நோய்களில் இருந்து விடுபடவும் உதவுகிறது.
உடல் எடை குறைப்பு
சாதம் வடித்த கஞ்சியில் கலோரிகள் குறைவாக உள்ளது. இது உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத்தரும். எனவே பசியைக் கட்டுப்படுத்தி, அதிகம் சாப்பிடுவதை தடுக்கிறது. இதனால் உங்கள் உடல் எடை முறையாகப் பயன்படுத்தப்படுகிறது.
மலச்சிக்கலைப்போக்குகிறது
சாதம் வடித்த கஞ்சியில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது குடல் இயக்கத்தை சீராக்குகிறது. மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளைத் தடுக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்