Stomach Bloating : மலச்சிக்கலையும், வயிறு உப்புசத்தையும் ஒரே நேரத்தில் விரட்டவேண்டுமா? இந்த பானம் போதும்!-stomach bloating want to get rid of constipation and flatulence at the same time enough of this drink - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Stomach Bloating : மலச்சிக்கலையும், வயிறு உப்புசத்தையும் ஒரே நேரத்தில் விரட்டவேண்டுமா? இந்த பானம் போதும்!

Stomach Bloating : மலச்சிக்கலையும், வயிறு உப்புசத்தையும் ஒரே நேரத்தில் விரட்டவேண்டுமா? இந்த பானம் போதும்!

Priyadarshini R HT Tamil
Sep 08, 2024 10:55 AM IST

Stomach Bloating : மலச்சிக்கலையும், வயிறு உப்புசத்தையும் ஒரே நேரத்தில் விரட்டவேண்டுமா? இந்த பானம் போதும். அது உங்களுக்கு எப்படி உதவுகிறது என்று பாருங்கள்.

Stomach Bloating : மலச்சிக்கலையும், வயிறு உப்புசத்தையும் ஒரே நேரத்தில் விரட்டவேண்டுமா? இந்த பானம் போதும்!
Stomach Bloating : மலச்சிக்கலையும், வயிறு உப்புசத்தையும் ஒரே நேரத்தில் விரட்டவேண்டுமா? இந்த பானம் போதும்!

பெருங்குடல், சிறுகுடல் மற்றும் மலக்குடல் என அனைத்தையும் ஒரே நேரத்தில் சுத்தம் செய்யும் இந்த பானத்தை தினமும் வெறும் வயிற்றில் எடுத்து பலன்பெறுங்கள். இதை செய்வதும் எளிது. இதை ஒரு டம்ளர் பருகினால் உங்களின் வயிறு உப்புச பிரச்னைகளும் சரிசெய்யப்படும். நீங்கள் உடலின் ஆற்றல் குறைந்ததுபோல் உணர்ந்தால் அதுவும் சரிசெய்யப்படும்.

தேவையான பொருட்கள்

வெள்ளரி – 1

இதில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்கள் குடல் இயக்கத்தை முறைப்படுத்துகிறது. இது கலோரிகள் குறைவானதும் ஆகும். இதில் 95 சதவீதம் தண்ணீர் உள்ளது. இது இயற்கையில் சிறுநீரை வெளியேற்றுகிறது.

செலரி – 4 துண்டுகள்

இதில் உள்ள உயர் பைஃட்டோகெமிக்கல்கள், உடலில் உள்ள நச்சுக்களை நீக்க கல்லீரல் உற்பத்தி செய்யும் எண்சைம்களுக்கு காரணமாகிறது. செலரியை அப்படியே சாப்பிடுவது கல்லீரலில் உள்ள வீக்கத்தைக் குறைக்கிறது. உடலில் ஆல்கலைன் பிஹெச் அளவைக் முறைப்படுத்துகிறது. இந்த செலரி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

எலுமிச்சை பழம் – 1

எலுமிச்சை சாறை பிழிந்து எடுத்துக்கொள்ளவேண்டும். இது இந்த பானத்தின் சுவையை மட்டும் அதிகரிக்கவில்லை. இந்த பானத்தின் கழிவுநீக்க திறனை அதிகரிக்கிறது.

செய்முறை

இவையனைத்தையும், நறுக்கிக்கொள்ளவேண்டும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளவேண்டும். எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து இதில் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீருடன் சேர்த்து அடித்துக்கொள்ளவேண்டும்.

வடிகட்டி இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 250 மில்லி லிட்டர் தண்ணீரை பருகவேண்டும். மூன்று நாட்கள் இந்த பானத்தை பருகினால் அது உங்கள் மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசம் பிரச்னைகளை விரட்டியடிக்கும்.

ஒரே நேரத்தில் மலக்குடல், சிறு மற்றும் பெருங்குடல்களை சுத்தம் செய்யும். எனவே இந்த பானத்தை எப்போதெல்லாம் உங்களுக்கு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் பிரச்னைகள் எழுகிறதோ அப்போதெல்லாம், அவ்வப்போது எடுத்துக்கொண்டு பலன்பெறுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.