Liver Detox : கல்லீரலை சுத்தம் செய்ய இதை மட்டும் ஒருமுறை செய்தால் போதும்! அது என்ன தெரியுமா?-liver detox just do this once to cleanse the liver do you know what it is - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Liver Detox : கல்லீரலை சுத்தம் செய்ய இதை மட்டும் ஒருமுறை செய்தால் போதும்! அது என்ன தெரியுமா?

Liver Detox : கல்லீரலை சுத்தம் செய்ய இதை மட்டும் ஒருமுறை செய்தால் போதும்! அது என்ன தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Sep 08, 2024 09:53 AM IST

Liver Detox : கல்லீரலை சுத்தம் செய்ய இதை மட்டும் ஒருமுறை காலையில் வெறும் வயிற்றில் செய்யவேண்டும். அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Liver Detox : கல்லீரலை சுத்தம் செய்ய இதை மட்டும் ஒருமுறை செய்தால் போதும்! அது என்ன தெரியுமா?
Liver Detox : கல்லீரலை சுத்தம் செய்ய இதை மட்டும் ஒருமுறை செய்தால் போதும்! அது என்ன தெரியுமா?

தேவையான பொருட்கள்

கற்றாழைத்தண்டு – சிறிதளவு

(கிழங்கு போன்ற வேர் பகுதி, வழக்கமான சதை அல்லது ஜெல் பகுதி அல்ல)

இந்துப்பு – சிட்டிகை

சீரகத்தூள் – ஒரு ஸ்பூன்

செய்முறை

கற்றாழை வேர்த்தண்டை எடுத்து அலசி சிறு துண்டுகளாக வெட்டி, உரலில் போட்டு நைத்து அதை இரண்டு டம்ளர் தண்ணீரில் சேர்த்து, சீரகத்தூள், உப்பு போட்டு கொதிக்கவிடவேண்டும். இரண்டு டம்ளர் தண்ணீர் முக்கால் டம்ளர் தண்ணீராக வற்றவேண்டும். கொதித்தவுடன் அடுப்பை குறைத்து முக்கால் மணி நேரம் கொதிக்கவிடவேண்டும்.

இதை வடிகட்டி, ஆறவைத்து காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும். இதை ஒரே ஒரு நாள் மட்டும் பருகினால்போதும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகலாம். கல்லீரல் சுத்தம் செய்யப்படும். கல்லீரல் சுத்தமானாலே பல நோய்கள் குணமாகும். எனவே இதை கட்டாயம் செய்யவேண்டும்.

கல்லீரல்

நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். இது உடலுக்கு கிடைக்கும் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ஆரோக்கியமான ரத்த சர்க்கரை அளவை பராமரித்து, ரத்தம் உறைதலை முறைப்படுத்தி, உடலுக்கு தேவையான பல்வேறு முக்கிய பணிகளை செய்கிறது. இது உடலின் வலது புறத்தில் வயிற்றுப்பகுதியில் உள்ளது.

நமது உடலில் கல்லீரல் 500க்கும் மேற்பட்ட வேலைகளை செய்கிறது. ரத்த ஓட்டத்தில் உள்ள நச்சுக்களை அகற்றுகிறது. ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. ரத்தச்சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

அல்பியூமின் உற்பத்தி, பித்த உற்பத்திக்கு உதவுகிறது. ரத்தத்தை வடிகட்டுகிறது. அமினோ அமிலங்களை பராமரிக்கிறது. ரத்த உறைதல் ஏற்படாமல் தடுக்கிறது. தொற்றுகளை தடுக்கிறது. ரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை நீக்குகிறது.

வைட்டமின் மற்றும் மினரல்களை சேமிக்கிறது. வைட்டமின் ஏ, டி, இ, கே, பி12, இரும்பு மற்றும் காப்பர் சத்துக்களை போதிய அளவு சேமித்து வைக்கிறது. ரத்தத்தில் உள்ள அதிகளவு குளுக்கோஸை நீக்குகிறது.

கல்லீரலை ஆரோக்கியமாக பராமரிப்பது எப்படி?

போதை பொருட்களையும் கல்லீரல் கட்டாயம் வடிக்க வேண்டும். அதனால் நீண்ட காலம் போதை பழக்கத்தில் இருந்தால், அது கல்லீரலை சேதப்படுத்தும்.

மதுவையும் கல்லீரல்தான் வடிகட்டவேண்டும். எனவே குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது. அதிகம் எடுத்துக்கொண்டால் கல்லீரல் சேதமடையும்.

உடலின் ஒவ்வொரு உறுப்பின் ஆரோக்கியத்துக்கும், வழக்கமான உடற்பயிற்சி கட்டாயம் வேண்டும்.

பாலியல் நோய்களில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள பாதுகாப்பாக செக்ஸ் வைத்துக்கொள்வது நல்லது.

பயணங்களின்போது போதிய தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மலேரியா, மஞ்சள் காய்ச்சல் உள்ளிட்டவை கல்லீரல் தொற்றுகளால் ஏற்படக்கூடியவை.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.