காலையில் எழுந்திருக்க எது சரியான நேரம் தெரியுமா!

By Pandeeswari Gurusamy
Sep 13, 2024

Hindustan Times
Tamil

இரவில் சரியான நேரத்தில் தூங்க வேண்டும். அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என்று பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அறிவியலும் அதையே கூறுகிறது.

தினமும் அதிகாலையில் எழுவது உடல் நலத்திற்கு நல்லது. இதனால் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

இன்றைய பிஸியான வாழ்வில் சரியான தூக்கம் கிடைப்பது மக்களுக்கு கடினமாக உள்ளது. ஆனால் அதிகாலையில் எழுந்தால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஆரோக்கியமான வயது வந்தோர் ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். அது உங்களை மிகவும் ஆரோக்கியமாக்கும்.

அதற்கும் குறைவாக தூங்கினால், பல உடல்நலப் பிரச்சனைகள் வருவது உறுதி என்பதில் சந்தேகமில்லை.

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, தூக்கம் இரவு 10 முதல் 11 மணிக்குள் தூங்க வேண்டும். காலை 6 மணி முதல் 7 மணிக்குள் எழுந்தால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

அதிகாலையில் எழுந்தால் அனைத்து வேலைகளும் சரியான நேரத்தில் செய்யப்படுவதை உறுதி செய்கிறது. உடற்பயிற்சி, நடைபயிற்சி, வாசிப்பு, காலை உணவு போன்றவை.. குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.

மேலும், இது எப்போதும் நேர்மறையாக இருக்க உதவுகிறது. இது உங்கள் நாளை சிறப்பாக மாற்றும்.

வீட்டில் ருசியான தேங்காய் சாதம் செய்வது எப்படி என அறிந்து கொள்வோமா?