Exclusive : உடல் பருமனைக் குறைக்க இந்த வழிதான் சிறந்தது - சீன ஆராய்ச்சியாளர்கள் கூறுவது? - வளரும் நாடுகளுக்கு வழிகாட்டி!
அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்னைகளை சமாளிக்க என்ன செய்யலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவதை பார்க்கலாம்.
மண்டல ரீதியிலான உணவுப்பழக்கம் நாட்டில் சாப்பிடும் பழக்கத்தை தூண்டுவதற்கு மிகவும் முக்கியம் என்று சீன அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். அங்கு உடல் பருமன் பிரச்னைகள் அதிகரித்துள்ள நிலையில் அவர்கள் இதை கூறுகிறார்கள். அங்கு வாழ்வியல் வியாதிகளும் அதிகரித்துள்ளது. எனவே இயற்கை மற்றும் பூகோளம் சார்ந்த உணவுகளை சாப்பிட அறிவுறுத்துகிறார்கள். அதற்கு இந்தியாவில் 100 கிலோ மீட்டர் டயட் என்று பொருள். நாம் வசிக்கும் பகுதியைச் சுற்றி 100 கிலோ மீட்டருக்குள் விளையும் உணவுப்பொருட்களை மட்டும் நாம் சாப்பிடவேண்டும் என்பதாகும்.
உடல் பருமன்
சீனாவில் அண்மையில் அதிகரித்து வரும் உடல் பருமனுக்கு சிகிச்சையளிக்கவும், நோய் கண்டுபிடிக்கவும் சில வழிகாட்டுதல்களை வழங்கியது. சீனாவில் பாதிக்கும் மேற்பட்ட வயது வந்தோர் ஏற்கனவே அதிக எடை மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த விகிதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களே உடல் பருமனைத்தடுக்க உதவும் என்று அரசு அறிவித்துள்ளது.
சீனாவின் காங்டாங்க் மாகாணத்தின் சன்யாட் சென் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரத்துறையின் அறிவியல் நிபுணர்கள் குழு, கிரகம் சார்ந்த ஆரோக்கிய உணவு என்று இந்த ஆய்வை குறிப்பிடுகிறார்கள். அவர்கள் பால் பொருட்கள் மற்றும் சிவப்பு இறைச்சி உட்கொள்வதை குறைக்க அறிவுறுத்துகிறார்கள்.
நேச்சர் என்ற ஆராய்ச்சி புத்தகத்தில், ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரையில், வட சீனாவில் மக்கள் அதிகம் பால் பொருட்களை உட்கொள்கிறார்கள் மற்றும் குறைந்தளவு காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்களை உட்கொள்கிறார்கள் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. எனவே அவர்கள் அதிகம் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு சீனாவில், சுற்றுச்சூழல் கடுமையாக உள்ளது மற்றும் தண்ணீர் பற்றாக்குறை அதிகம் உள்ளது. இந்தப்பகுதியில் அதிக பருப்புகள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இங்ஙகு அதிகம் இறைச்சி எடுத்துக்கொள்ளப்படுகிறது என்று ஆய்வு கூறுகிறது.
கிழக்கு சீனாவுக்கு, வேளாண் மற்றும் நீர்நிலை தாவரங்கள் அதிகம் வளரக்கூடிய பகுதியாக உள்ளது. இங்கு முழு தானியங்கள், கடல் உணவுகள் மற்றும் காய்கறிகளை வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ‘
சீனாவின் சுகாதாரத்துறை இந்த பரிந்துரைகளை உடனடியாக ஏற்கவில்லை. இந்த உணவுப்பழக்கம் உடல் பருமனைத் தடுக்கவும், உடல் பருமன் மற்றும் இதய வளர்சிதை நோய்களை கட்டுப்படுத்தவும் உதவுகிறது என்று லியூ யான் கூறுகிறார். இந்த ஆய்வின் கட்டுரையாளர் இவர். அந்தந்த பகுதிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள உணவை அவர்கள் உட்கொள்ளும்போது அவர்களுக்கு இளம் வயது இறப்பு மற்றும் மாற்றுதிதிறன் ஆகிய பிரச்னைகளைப் போக்க உதவுகிறது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து தேவைகளை அது வழங்குகிறது என்று கூறுகிறார்கள்.
வளரும் நாடுகள்
சீனா மட்டுமல்ல, இதேபோன்ற உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ளும் பிற வளரும் நாடுகளும் உணவிற்கான இந்த வரைபடத்திலிருந்து பயனடையலாம் என்று விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிவித்தனர்.
பிரண்ட் லோகென், உலக வனத்துறை நிதியின் அறிவியலாளர் மற்றும் உலகின் தலைசிறந்த உணவு நிபுணர் கூறுகையில், இந்த ஆய்வு வளரும் நாடுகளுக்கு நல் வழியைக் காட்டுகின்றன. இந்தியாவும், கென்யாவும் இந்த வழியைப் பின்பற்றலாம் என்று கூறுகின்றன.
இந்த உணவுப்பழக்கங்கள் சீனாவில் மனிதர்களின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை இலக்குகளை அடைய உதவுகிறது. இதை உலகின் மற்ற நாடுகளும் பின்பற்றலாம் என்று அவர் மேலும் கூறுகிறார்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்