World Milk Day : குழந்தையின் உயிர்காப்பான்.. பாலின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்கள்.. இன்று உலக பால் தினம்!
World Milk Day : பாலின் முக்கியத்துவத்தை உணர்த்த ஐநா சபையால் ’உலக உணவு’ என அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
பால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை கண்டிப்பாக தினமும் குறைந்தது 2 கிளாஸ் பால் குடிக்க வேண்டும். பாலை குழந்தைகளின் உணவில் சேர்க்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
உலக பால் தினம்
பாலின் முக்கியத்துவத்தை உணர்த்த ஐநா சபையால் ’உலக உணவு ’ என அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் பாலின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்கள் பற்றி இங்கு பார்ப்போம்.
நம் வாழ்வின் முக்கிய அங்கமாக விளங்குவது பால். நாம் உண்ணும் உணவுப்பொருட்களுள் மிகவும் இன்றியமையாததும் பால் தான். தினசரி காலையில் டீ, காபியில் தொடங்குவது, மதிய உணவில் தயிர், வெப்பத்தைத் தணிக்க மோர், உணவின் சுவையைக் கூட்ட நெய் என பல வகைகளில் நமக்கு பால் பயன்படுகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பில் உலக உணவாக அது அங்கீகரிக்கப்பட்டது. இதை உலகுக்கு உணர்த்த ஐநா சபை ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி உலக பால் தினமாகக் கொண்டாடப்பட வேண்டுமென அறிவுறுத்தியது. இதன்படி 2001-ஆம் ஆண்டிலிருந்து ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
கொழுப்பு நீக்கப்பட்ட பாலையும் குடிப்பது நல்லது
பால் என்ற ஒற்றை வரியில் இதை சுருக்கிவிட முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஒட்டுமொத்த ஊட்டச்சத்தும் கிடைக்கும் உணவாக பால் உள்ளது. பிறந்த குழந்தை தாய்ப்பால் கிடைக்காமல் இருக்கும் போது அதற்கு இணையாக தருவது பசும்பால் தான். குழந்தையின் உயிர்காப்பானாக தாய்ப்பாலுக்கு மாற்றாக இருக்கும். பாலில் புரதம், லாக்டோஸ், தாது உப்புக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளது.
பசும்பாலில் அனைத்துவித அமினோ அமிலங்களும் உள்ளன. ஐந்து முதல் நாற்பது வயதுடையோர், தினமும் 400 மி.லி பால் சாப்பிடுவது நல்லது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பால் உட்கொள்வது சிறந்தது. இளம் வயதினர் மிதமான கொழுப்புள்ள பாலையும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்த கொழுப்புள்ள பாலையும், வயதானவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலையும் குடிப்பது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பச்சைப் பால் அருந்துவது நல்லதல்ல
ஆனால், பச்சைப் பால் அருந்துவது நல்லதல்ல என்கின்றனர் மருத்துவர்கள். ஆகவே அவசியம் பாலை பச்சையாக குடிப்பதை தவிர்க்க வேண்டும். நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும்.
பதப்படுத்தப்படாத பாலை, அதாவது பசுக்களிடமிருந்து நேரடியாக எடுக்கப்படும் பாலை அருந்துபவர்கள் ஏராளம். ஆனால் பாலை நீங்கள் குடிக்க வேண்டும் என்றால், அதை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதை பச்சை பால் குடிக்கக்கூடாது. இதன் காரணமாக, பல பாக்டீரியாக்கள் உடலில் நுழைய நாமே ஒரு வழியை உருவாக்கித் தருகிறோம்.
உண்மையில் பச்சை பால் இயற்கையானது. நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நிறைந்தவை. அவற்றில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களும் அதிக அளவில் உள்ளன. இது உடலில் கடுமையான தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.
சர்க்கரை நோயாளிகள் பால் குடிக்கலாமா?
சர்க்கரை நோயாளிகள் குறைந்த கொழுப்புள்ள உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.பெரும்பாலான நீரிழிவு நோயாளிகள் பால் பொருட்களை சாப்பிடலாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். பாலில் அதிக கொழுப்பு உள்ளது. இருப்பினும், பால் நீரிழிவு நோயை ஏற்படுத்தும் அல்லது மோசமாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இருப்பினும், அதிகப்படியான கொழுப்பு தீங்கு விளைவிக்கும் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, உயர் இரத்த சர்க்கரை அளவு உள்ளவர்கள் ஒரு டம்பளர் மேல் பால் குடிக்கக்கூடாது.
நோய் எதிர்ப்பு சக்தியை கழுதைப்பால் அதிகாரிக்கும்
பசும்பால் மட்டும் அல்லாமல் ஆட்டுப்பால், எருமைபால், கழுதைபால், குதிரைபால் ஏன் ஒட்டகப்பால் வரை விலங்குகளின் பாலை பயன்படுத்தி வருகிறோம். தாய் பாலுக்கு மாற்றாகவும், புற்றுநோய் கட்டி, இருமல், சளித்தொல்லை நீங்கி ஜீரணம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை கழுதைப்பால் அதிகாரிக்கும் என கூறப்படுகிறது. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு பதிலாக எளிதில் செரிமானமாக கூடிய அருமருந்தாக மருத்துவ உலகம் சொல்வதும் பசும்பாலை தான்.
100 கிராம் அளவுள்ள ஒரு கப் அளவு பாலில் 120.மி.கிராம் அளவு கால்சியம், 4.1 கிராம் அளவு கொழுப்பு, 4.4 கிராம் அளவு கார்போஹைட்ரேட், 3.2 கிராம் அளவு புரதம், 67 கலோரி அளவு இருக்கிறது. இத்தகைய சிறப்புகளை கொண்ட பாலின் முக்கியத்துவத்தை உணர்த்த ஐநா சபையால் ’உலக உணவு’ என அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
டாபிக்ஸ்