சிரி.. சிரி.. சிரி.. கவலைகள் மறக்க சிரி! நீங்கள் சிரித்து மகிழவும்! உங்களை கடுப்பேற்றவும் கடி ஜோக்குகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சிரி.. சிரி.. சிரி.. கவலைகள் மறக்க சிரி! நீங்கள் சிரித்து மகிழவும்! உங்களை கடுப்பேற்றவும் கடி ஜோக்குகள்!

சிரி.. சிரி.. சிரி.. கவலைகள் மறக்க சிரி! நீங்கள் சிரித்து மகிழவும்! உங்களை கடுப்பேற்றவும் கடி ஜோக்குகள்!

Suguna Devi P HT Tamil
Dec 08, 2024 05:37 PM IST

பல டிவி நிகழ்ச்சிகளிலும் சின்னத்திரை பிரபலங்கள் கடி ஜோக்குகள் சொல்வதை வழக்கமான ஒன்றாக வைத்திருக்கின்றன. இந்த வரிசையில் உங்களை கவலை மறைந்து சிரிக்க வைக்கவும், சற்று கடுப்பேற்றி பார்க்கவும் சில கடி ஜோக்குகளை இங்கு காண்போம்.

சிரி.. சிரி.. சிரி.. கவலைகள் மறக்க சிரி! நீங்கள் சிரித்து மகிழவும்! உங்களை கடுப்பேற்றவும் கடி ஜோக்குகள்!
சிரி.. சிரி.. சிரி.. கவலைகள் மறக்க சிரி! நீங்கள் சிரித்து மகிழவும்! உங்களை கடுப்பேற்றவும் கடி ஜோக்குகள்! (Shutterstock)

மனதிற்கு ஏதும் கவலை இருந்தால் நமக்கு பிடித்த நகைச்சுவை கலைஞர்களின் ஏதேனும் நகைச்சுவை காட்சிகளை பார்த்தால் கவலைகள் தீருமோ ஆனால் மனம் சற்று தளர்வடையும். இந்த வரிசையில் தான் கடி ஜோக்குகள் இருக்கின்றன. பல டிவி நிகழ்ச்சிகளிலும் சின்னத்திரை பிரபலங்கள் கடி ஜோக்குகள் சொல்வதை வழக்கமான ஒன்றாக வைத்திருக்கின்றன. இந்த வரிசையில் உங்களை கவலை மறைந்து சிரிக்க வைக்கவும், சற்று கடுப்பேற்றி பார்க்கவும் சில கடி ஜோக்குகளை இங்கு காண்போம்.

நீங்கள் புத்திசாலியாக இருந்தால் இங்கே நாங்கள் கொடுத்துள்ள மொக்கை கேள்விகளுக்கு மொக்கையான பதிலை கண்டுபிடிக்க முடிகிறதா என பாருங்கள். 

1.எந்தவில்லை நம்மால் கட்ட முடியாது? 

விடை: வானவில்  

2. கால்களே இல்லாத ஆட்டின் பெயர் என்னத் தெரியுமா?

விடை: வேற என்ன குழம்பில் இருகும் ஆடுதான்

3. ஒரு பச்சை நிறமுள்ள கற்களை கடலில் வீசி இருந்தால் அது என்னவாகும்?

விடை: ஈரமாகிடும்

4.பல் வலிப்பதற்கு முக்கியமான காரணம் என்ன?

விடை: பற்கள் தான்

5.நாம ஏன் படுத்துகிட்டே தூங்குறோம்?

விடை: நின்னுக்கிட்டே தூங்கினால் கீழே விழுந்து விடுவோம்.

6.பசுமாடு ஏன் பால் தருகிறது?

விடை: அதனால் காப்பி டீ தர முடியாதுல. அதான்.

7.கோழி ஏன் முட்டை போடுது?

விடை: ஏன்னா அதுக்கு ஒன்னு ரெண்டு மூணு போட தெரியாது சார்.

8. தம்பி தீக்குச்சியை பத்த வச்சு ஏன் இட்லி மேல வைத்து பார்க்கிற?

விடை: நீங்கதானே இட்லி பஞ்சு மாதிரி வேணும்னு சொன்னீங்க அதான் தீப்பிடிக்குதானு பார்த்தேன்.

9. ஏண்டா உனக்கு வரலாறு பிடிக்காதுன்னு சொல்ற?

விடை: சார் நான் விஜய் ரசிகன்

10. லெட்டர்க்கும் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?

விடை: லெட்டர் கிழிச்சிட்டு படிப்போம் புத்தகத்தை படிச்சிட்டு கிழிப்போம்.

11.கொசு நம்ம வீட்டுக்கு வராமல் இருக்க என்ன பண்ணனும்?

விடை: அது கிட்ட நம்ம வீட்டு அட்ரஸ் கொடுக்காம இருக்கணும்.

12. அதிக வெயிட் தூக்குற பூச்சி எது?

விடை: மூட்டை பூச்சி

உங்கள் கவலைகளை மறந்து சிரித்தீர்களா? இல்லை இதனை படித்து கடுப்பாக இருந்ததா? ஏதோ ஒரு விதத்தில் இந்த ஜோக்குகள் உங்களை டைம்பாஸ் செய்யும். 

பிரச்னைகளை கொண்டு வந்த அதே மனநிலையுடன் பிரச்னைகளை தீர்க்க முடியாது. பிரச்னைகளை தீர்ப்பதற்கு மாற்றி யோசிக்கவேண்டும் – ஆல்பர்ட் ஐன்ஸ்டின்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.