“சாப்ட்டு சாப்ட்டு தூங்கி.. ரொம்ப வெயிட் போட்டுட்டேன்.. சேலை உடுத்தினா கூட கிளாமரா.. செக்ஸி வேற.. கிளாமர் வேற” -மந்த்ரா
நடிகை மந்த்ரா தன்னுடைய வெயிட் லாஸ் குறித்தும், கிளாமருக்கும், ஆபாசத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் குறித்தும் பேசி இருக்கிறார்.

90 களில், பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை மந்த்ரா. தமிழில் ‘பிரியம்’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளிச்சத்திற்கு வந்த இவர் லவ் டுடே, ரெட்டை ஜடை வயசு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.
தெலுங்கில் ராசி என்ற பெயரில் அறிமுகிமாகி அங்கும் பல திரைப்படங்களில் நடித்தவர், மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் அவர் தற்போது கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியில், தன்னுடைய எடை இழப்பு பற்றி பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “கல்யாணத்திற்கு பிறகு நான் வெயிட் போட்டது உண்மைதான். கல்யாணத்திற்கு முன்னதாக, நான் திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்துக்கொண்டிருந்தேன். அதனால், அதற்கு ஏற்றவாறு உடம்பையும் கனகச்சிதமாக பேணி பாதுக்காக்க வேண்டி இருந்தது.