Kadi Joke: ‘இது கடி ஜோக்கா.. மொக்க ஜோக்கா?’ படிச்சுப் பார்த்து நீங்களே சொல்லுங்க பார்ப்போம்!-tamil kadi joke mokka joke comedy august 06 2024 kadi joke - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kadi Joke: ‘இது கடி ஜோக்கா.. மொக்க ஜோக்கா?’ படிச்சுப் பார்த்து நீங்களே சொல்லுங்க பார்ப்போம்!

Kadi Joke: ‘இது கடி ஜோக்கா.. மொக்க ஜோக்கா?’ படிச்சுப் பார்த்து நீங்களே சொல்லுங்க பார்ப்போம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Aug 07, 2024 09:22 AM IST

Kadi Joke: சிரிக்காத நாளிலிருந்தால், அந்த நாள் நரகத்திற்கு இணையானது என்பார்கள். நம்மை சிரிக்க வைக்க ஏதாவது ஒரு வழி வேண்டும். அப்படி ஒரு வழி தான் இது. அது கடி ஜோக்காக இருக்கலாம், மொக்கை ஜோக்காக இருக்கலாம். அதற்கான முயற்சி தான். நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க.

Kadi Joke: ‘இது கடி ஜோக்கா.. மொக்க ஜோக்கா?’ படிச்சுப் பார்த்து நீங்களே சொல்லுங்க பார்ப்போம்!
Kadi Joke: ‘இது கடி ஜோக்கா.. மொக்க ஜோக்கா?’ படிச்சுப் பார்த்து நீங்களே சொல்லுங்க பார்ப்போம்!

இட்லி ‘கடி’

நோயாளி: என்னால இரண்டு இட்லியை கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..

டாக்டர்: என்னால கூட இரண்டு இட்லியை முழுசா சாப்பிட முடியாதுங்க.. புட்டு புட்டு தான் சாப்பிட முடியம்!

சுத்தமா ‘காலி’

நண்பன் 1: டேய்.. அவசரமா 100 ரூபாய் வேணும், ப்ளீஸ் கொடுடா..

நண்பன் 2: டேய் தப்பா நினைக்காத.. என்னிடம் சுத்தமா இல்லடா..

நண்பன் 1: பரவாயில்லடா.. நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!

என்னடா இது ABக்கு வந்த சோதனை

மகன்: அப்பா.. ABக்கு ஃபோர் அடுச்சா என்ன செய்யும் சொல்லுங்க?

அப்பா: ABக்கு போர் அடிச்சா என்ன செய்யும்.. தெரியலையப்பா..

மகன்: CD போட்டு பாக்கும்ப்பா.. அது கூட தெரியாதா! சரி இதை சொல்லுங்க.. EFக்கு உடம்பு சரியில்லைனா எங்கே போகும்?

அப்பா: நீயே சொல்லிடுப்பா..

மகன்: GHக்கு போகும்ப்பா..!

மரம் எங்கே போகிறது

போலீஸ்: உங்க கார் எப்படி ஆக்சிடண்ட் ஆச்சு?

டிரைவர்: சார்.. அதோ அங்கே ஒரு மரம் தெரியுதா?

போலீஸ்: ஆமா தெரியுது!

டிரைவர்: நேற்று நைட், இனக்கு அந்த மரம் தெரியல சார்!

சூப்பர் அப்பா!

சிறுவன் 1: டேய்.. நான் வாழைப்பழம் திருடுனத எங்கப்பா பார்த்துட்டாரு..

சிறுவன் 2: அப்புறம் என்னடா ஆச்சு?

சிறுவன் 1: அப்புறம் என்ன.. வீட்டுல வந்து தோல உறிச்சிட்டாரு!

மகளும்.. மகனும்

அப்பா: ஏன் இவ்வளவு லேட்டா வர்ற? எங்கே போன?

மகள்: என் தோழி வீட்டுக்கு போனேன்.

(10 தோழி வீட்டுக்கும் போன் செய்கிறார் அப்பா.. அனைவரும் சொன்ன ஒரே பதில், ‘அவள் இங்கு வரவில்லை’ என்பது தான். அந்த நேரத்தின் மகனும் தாமதமாக வருகிறான்)

அப்பா: நீ ஏன்டா லேட்டு?

மகன்: ப்ரெண்ட் வீட்டுக்கு போனேன்ப்பா..

( மகனின் 10 ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கும் போன் செய்கிறார் தந்தை. 10ல் 8 பேர் எங்க வீட்டில் தான் இருந்தான் என்கிறார்கள்)

எவ்வளவு சேட்டை பிடிச்சவர்!

மனைவி: ஏங்க.. சமையல்காரியை இந்த மாசத்தோடு நிறுத்திடுறேன். நானே சமைக்கிறேன், எனக்கு எவ்வளவு கொடுப்பீங்க?

கணவன்: 10 லட்சம் ரூபாய்..

மனைவி: என்னது 10 லட்சம் தருவீங்களா?

கணவன்: ஆமாம்.. நான் இல்லைனா உனக்கு கிடைக்குற இன்சூரன்ஸ் பணம் தான் அது!

அவனா நீ!

நண்பர் 1: நல்லா செருப்புய்யா.. ரூ.500 இருக்கும். உள்ளே போகும் போது இருந்தது. வெளியே வந்து பார்த்தா காணாம்

நண்பர் 2: அய்யய்யோ.. அப்புறம் என்ன பண்ண?

நண்பர் 1: என்ன பண்றது, என் செருப்பையே போட்டுட்டு வந்துட்டேன்!

இது போல இன்னும் பல மெக்கை கடி காமெடிகள், உங்களை மகிழ்விக்க தினந்தோறும் இந்துஸ்தான் டைம்ஸ் பகுதியில் வெளியாகும். படிங்க, கடிங்க!

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.