Friendship Rasis: இந்த ராசிகள் பெஸ்ட்.. வாழ்க்கை முழுவதும் பயணம் செய்யும் நண்பர்கள்.. உங்க நண்பர் இதில் உண்டா?-life will be better if you keep these zodiac signs as your friends - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Friendship Rasis: இந்த ராசிகள் பெஸ்ட்.. வாழ்க்கை முழுவதும் பயணம் செய்யும் நண்பர்கள்.. உங்க நண்பர் இதில் உண்டா?

Friendship Rasis: இந்த ராசிகள் பெஸ்ட்.. வாழ்க்கை முழுவதும் பயணம் செய்யும் நண்பர்கள்.. உங்க நண்பர் இதில் உண்டா?

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 04, 2024 01:53 PM IST

Happy Friendship Day: ஒரு சில ராசிக்காரர்களை நீங்கள் நண்பர்களாக தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும் என கூறப்படுகிறது. அந்த வகையில் சிறந்த நண்பர்களாக விளங்கக்கூடிய ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

இந்த ராசிகள் பெஸ்ட்.. வாழ்க்கை முழுவதும் பயணம் செய்யும் நண்பர்கள்.. உங்க நண்பர் இதில் உண்டா?
இந்த ராசிகள் பெஸ்ட்.. வாழ்க்கை முழுவதும் பயணம் செய்யும் நண்பர்கள்.. உங்க நண்பர் இதில் உண்டா?

இந்த காலகட்டத்தில் எவர் பிறந்தாலும் நம்மை கைவிடாமல் நம்முடன் பயணம் செய்பவர்கள் தான் நண்பர்களாக கருதப்படுகிறார்கள். அந்த வகையில் சிறந்த நண்பர்களை தேர்ந்தெடுப்பது எப்படி, அவர்களுடன் எவ்வாறு உறவு கொள்வது அந்த உறவை வலிமையாக மாற்றுவது என்பது குறித்து பலருக்கும் இங்கு தெரிவது கிடையாது.

ஒருவருடைய வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் அமைந்துவிட்டால் அவர்களுக்கான வாழ்க்கை சுமை மிகவும் குறைந்துவிடும் நண்பர்களின் முக்கியத்துவத்தை பெரும்பாலானோர் கட்டாயம் அறிந்து வைத்திருப்பார். ஆனால் உண்மையான நண்பர்கள் அனைவருக்கும் கிடைப்பது கிடையாது. இருப்பினும் ஒரு சில ராசிக்காரர்களை நீங்கள் நண்பர்களாக தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும் என கூறப்படுகிறது. அந்த வகையில் சிறந்த நண்பர்களாக விளங்கக்கூடிய ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

மகர ராசி

இந்த ராசிக்காரர்கள் தங்களது நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு நண்பர்களாக இருந்தாலும் மிகவும் நேர்த்தியாக இருப்பார்கள். பல நண்பர்கள் இவருக்கு இருந்தாலும் ஒரு சிலர்களை மட்டும் தங்களோடு தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்வார்கள். இவர்கள் எப்போதும் நம்பிக்கை மற்றும் ஆதரவுகளை அதிகம் கொடுக்கக் கூடியவர்கள். 

தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் முழுமூச்சாக நிற்பார்கள். தன் நண்பர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் செய்து கொடுத்து ஆதரவு கொடுப்பார்கள். ஒரு சமயம் கூட தங்களது நட்பை விட்டு எப்போதும் விலகாமல் இருக்கக்கூடிய ராசிகளில் இவர்களும் ஒருவர்.

சிம்ம ராசி

எப்போதும் அருமையான நட்பு வட்டாரத்தை தங்களுடன் வைத்துக் கொள்ளக் கூடியவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். இவர்களுடன் நண்பர்களாக இருக்க அனைவரும் எப்போதும் விருப்பப்படுவார்கள். எப்போதும் இவர்கள் நண்பர்கள் சூழ மகிழ்ச்சியோடு இருப்பார்கள். ஒரு சிலர் மட்டுமே இவருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். இவர்களும் நெருங்கி பழகுவதில் மிகவும் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். தங்களது முழு அன்பை எப்போதும் வழங்குவதில் முழுமூச்சாக செயல்படுவார்கள். 

பல எல்லைகளை கடந்து வாழும் நட்புக்கு இவர்கள் எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள். ஒருபோதும் நண்பர்களுக்காக விட்டுக் கொடுக்க இவர்கள் தயங்க மாட்டார்கள். மனதளவில் காயப்படுத்த விரும்பாத ராசிக்காரர்களில் இவர்களும் ஒருவர். அதனால் இவர்களுக்கு நட்பு வட்டாரம் வலிமையாக இருக்கும்.

மிதுன ராசி

தங்களது வாழ்க்கை பயணம் முழுவதும் நட்பை பராமரிப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்கள் மட்டுமே இவர்கள் குறித்து ஆச்சரியப்படுவதற்கு எந்த தேவையும் கிடையாது. ஏனென்றால் நட்புக்காகவே வாழக்கூடிய ராசிகளில் இவர்களும் ஒருவர் இவர்கள் உங்களுக்கு நண்பர்களாக கிடைத்தால் உங்களை ஒருபோதும் விட்டுச் செல்ல மாட்டார்கள். மற்றவர்களிடம் விட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள். அவ்வளவு எளிதில் சிக்கல்களை உங்கள் பக்கம் வரவிட மாட்டார்கள் சிறந்த தீர்வுகளை கொடுக்கும். 

மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் உங்களுடன் நண்பர்களாக இருக்கும் பொழுது உங்களுக்கு வரக்கூடிய பாதிப்புகள் மிகவும் குறைவாக இருக்கும். எப்போதும் நண்பர்களின் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க வேண்டும். என்று எண்ணும் இவர்களுக்கு இயற்கையிலேயே உண்டு நட்பு வட்டாரங்களை அரவணைத்து சொல்வதில் இவர்கள் மிகவும் வல்லவர்கள். நண்பர்களுக்கு நல்லது செய்து கொடுப்பதில் இவர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அதனால் சிறந்த நண்பர்களாக விளங்குவதில் மிதுன ராசிக்காரர்கள் உச்ச யோகம் கொண்டவர்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

தொடர்புடையை செய்திகள்