தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Sugar Free Food: சர்க்கரை இல்லாமல் சுவை மிகுந்த நட்ஸ் பிஸ்கட்

Sugar Free Food: சர்க்கரை இல்லாமல் சுவை மிகுந்த நட்ஸ் பிஸ்கட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 22, 2023 11:58 AM IST

சர்க்கரை சேர்க்காமல் அதே தித்திக்கும் இனிப்பு சுவையுடன் உடல் ஆரோக்கியத்தையும் பேனி காக்க உதவும் நட்ஸ் மற்றும் விதைகளை வைத்து பிஸ்கட் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்

சர்க்கரை இல்லாமல் சுவை மிகுந்த நட்ஸ் பிஸ்கட்
சர்க்கரை இல்லாமல் சுவை மிகுந்த நட்ஸ் பிஸ்கட்

ட்ரெண்டிங் செய்திகள்

சர்க்கரை நோய் பாதிப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருந்து வரும் இந்த சூழ்நிலையில், சர்க்கரை சேர்க்காமல் அதே இனிப்பு சுவையுடனான இருக்கும் உணவுகளை சாப்பிடுவது பலரது சாய்ஸாக உள்ளது.

அந்த வகையில் சர்க்கரை சேர்க்காத உணவு வகையாக திகழும் நட்ஸ் மற்றும் விதைகளை வைத்து சாலட் செய்யும் முறையை பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

தினை மாவு - 100 கி

புரோடீன் பவுடர் - 40 கி

பால் - 30 மில்லி

ஓட்ஸ் - 20 கி

பேரிட்சை - 10 கி

நெய் - 10 கி

பாதாம் - 5 கி

வால்நட் - 5 கி

பிளாக்ஸ் விதைகள் - 2.5 கி

பூசணி விதைகள் - 2.5 கி

தர்ப்பூசணி விதைகள் - 2.5 கி

பேக்கிங் பவுடர் - 2.5 கி

செய்முறை

நெய்யுடன், தினை மாவு, ஓட்ஸ், விதைகள், பால் ஆகிய அனைத்தையும் கலந்து மாவு பதத்துக்கு ஆக்கி கொள்ள வேண்டும். இதனை சிறிய பந்துகளாக உருட்டி பிஸ்கட் போல் தட்டையாக்கி கொள்ளவும்.

பின்னர் இந்த உருண்டைகளை 10 நிமிடங்கள், 190 டிகிரி வெப்பநிலையில் சுடவைக்கவும். 1900 டிகிரி வெப்பநிலையில் 14 நிமிடங்கள் இந்த பிஸ்கட்களை சுட வைத்து சாப்பிடலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்