Street Smart Vs Home Smart: நீங்க Street Smart-ஆ! இல்ல; Home Smart-ஆ! வாழ்கையில் வெற்றிகளை குவிக்கும் அபூர்வ திறன்!-street smart vs home smart how street smarts and home smarts differ and why you need both - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Street Smart Vs Home Smart: நீங்க Street Smart-ஆ! இல்ல; Home Smart-ஆ! வாழ்கையில் வெற்றிகளை குவிக்கும் அபூர்வ திறன்!

Street Smart Vs Home Smart: நீங்க Street Smart-ஆ! இல்ல; Home Smart-ஆ! வாழ்கையில் வெற்றிகளை குவிக்கும் அபூர்வ திறன்!

Kathiravan V HT Tamil
Aug 08, 2024 02:15 PM IST

Street Smart vs Home Smart: ஸ்ட்ரீட் ஸ்மார்ட் மற்றும் ஹோம் ஸ்மார்ட் ஆகிய இரண்டும் வாழ்வில் ஒருவர் வெற்றிகரமான முறையில் பயணிக்க காரணமாக அமைகின்றது. வாழ்க்கைச் சூழ்நிலைகளையும் சவால்களையும் நம்பிக்கையுடனும் எளிதாகவும் எதிர்கொள்ள தனிநபர்களைத் தயார்படுத்துவதால் இந்த சமநிலை முக்கியமானது.

Street Smart Vs Home Smart: நீங்க Street Smart-ஆ! இல்ல; Home Smart-ஆ! வாழ்கையில் வெற்றிகளை குவிக்கும் அபூர்வ திறன்!
Street Smart Vs Home Smart: நீங்க Street Smart-ஆ! இல்ல; Home Smart-ஆ! வாழ்கையில் வெற்றிகளை குவிக்கும் அபூர்வ திறன்!

வீதி மிடுக்குத்தன்மை (Street Smartness)

நல்லா படிக்கும் பசங்க நிறைய மார்க் வாங்கினால் மட்டும் வாழ்கையில் ஜெயித்துவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. படிப்பில் ஜெயிப்பது வேறு, பார்க்கும் பணியில் ஜெயிப்பது வேறு. சில மாணவர்கள் நிறைய மெடல்களை வாங்கி புத்திசாலிகளாக இருப்பார்கள். ஆனால் தங்களின் பணி இடங்களில் சரியாக திறன்களை வெளிப்படுத்தாமல் போய்விடுவார்கள்.

தேர்வுகளில் எல்லாம் ஒருவன் வெற்றி பெற்றால் கூட, தனது பணியில் அவன் விற்பனராக இருப்பானா என்பது சந்தேகம்தான் என்று திருக்குறள் ஒன்றில் திருவள்ளுவர் கூறுகின்றார். 

இதற்கு காரணம் அவர்களுக்கு ஸ்ட்ரீட் ஸ்மார்ட் எனப்படும் வீதி மிடுக்குத்தன்மை உடன் இருப்பதில்லை என்பதே ஆகும். 

இந்த வகையான நபர்கள் ஒரு புதிய இடத்திற்கு சென்றால், செல்ல வேண்டிய முகவரியை விசாரித்து செல்வதற்கு கூட அதற்கான துணிச்சல் இருக்காது. அவர்களுக்கு ஒரு தயக்கமும், அச்சமும், கூச்சமும் கூடவே இருக்கும். 

ஒரு புதிய இடத்திற்கு சென்று முகவரியை கேட்டு அந்த இடத்திற்கு செல்வது என்பது ஒரு வகையான வீதி மிடுக்குத்தனம் ஆகும். இந்த வீதி மிடுக்குத்தனத்தை நான் கிராமங்களில் இருந்து வருபவர்களிடம் நிறைய பார்த்து உள்ளேன். 

வெறும் புத்தக அறிவை மட்டும் பெற்று இருப்பவர்கள் வீதி மிடுக்குத்தனத்துடன் இருப்பது இல்லை. ஒரு புதிய இடங்களுக்கு சென்று புதிய மனிதர்களை சந்தித்து, சகஜமாக பழகுவதும் நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டு விவரங்களை பெறுவதும் ஒரு கலை ஆகும். 

சமூகத்தில் எப்படி பழகுகிறோம். மனிதர்களை எப்படி நேசிக்கிறோம். அவர்களோடு எப்படி உரையாடுகிறோம் என்ற பண்பு வாழ்கையில் ஜெயிப்பதற்கு தேவை. 

ஒரு சூழலை புரிந்து கொண்டு நம்மை நாம் அதற்கு ஏற்றார் போல் அனுசரித்துக் கொள்ள வேண்டும். என்னவிதமான அசௌகரியங்கள் இருந்தாலும் அந்த அசௌகரியங்களை அனுசரித்துக் கொண்டு நாம் வாழ்வது அவசியம். 

எல்லாமே வீட்டுக்கு பக்கத்திலேயே கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் வீதி மிடுக்குத் தன்மை இல்லாதவர்கள் என்று பொருள். 

வீதி மிடுக்கத் தன்மை கொண்டவர்கள்தான் உலகில் புதிய கண்டங்களை கண்டுபிடித்தார்கள். புதிய கண்டுபிடிப்புகளையும், புதிய பாதைகளையும் அவர்கள் நிர்மாணித்தார்கள். அப்படிப்பட்ட மனிதர்களை நாம் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  

யாருடனும் உரையாடல் செய்யாமல் கைப்பேசி மற்றும் மடிக்கணினியை மட்டுமே பாத்துக் கொண்டு இருந்தால் இழப்பு நமக்குதான். 

அதனால் மனிதர்களிடம் பழகுவதும், புதிய இடங்களில் அனுசரித்துக் கொள்வதும், புதிய மனிதர்களை சந்திக்கும் போது சகஜமாக பழகி நட்பை ஏற்படுத்தி கொள்வதும், புதிய பணியிட சூழலில் நுணுக்கங்களை அறிந்து கொண்டு பணியாற்றுவதும் மிகவும் முக்கியம். 

வீட்டு மிடுக்குத்தனம் (Home Smartness)

வரும் காலத்தில் ஒருவர் வெற்றி பெற வீதி மிடுக்கு தன்மை மட்டும் போதாது. ஹோம் ஸ்மார்ட்னஸ் எனப்படும் வீட்டு மிடுக்குத்தன்மையும் தேவைப்படுகின்றது. 

நம்முடைய இல்லத்தில் நமக்கான பணிகளை யாரையும் சாராமல் நம்மை நாமே நிர்வகித்து கொள்வது ஆகும். 

காலையில் எழுந்து போர்வையை மடித்து வைப்பது தொடங்கி, படுக்கை அறையை சரி செய்து வைப்பது, தேனீர் தயாரிப்பது, குறைந்தபட்ச சமையல் திறன் உள்ளிட்டவை  இதற்கு மிக அவசியம் ஆகும். 

இந்த வகை நுண்ணறிவில் நிறுவன திறன்கள், உணர்ச்சி நுண்ணறிவு, நடைமுறை வீட்டு திறன்கள், நிதி மேலாண்மை ஆகியவை அடங்கும். உதாரணமாக, ஒரு வீட்டில் புத்திசாலி நபர் வீட்டை நேர்த்தியாக வைத்திருப்பதிலும், அட்டவணைகளை நிர்வகிப்பதிலும், அன்றாடச் செயல்பாடுகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதிலும் சிறந்து விளங்குகிறார். அவர்கள் குடும்பத்தில் உள்ள உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு நிர்வகிக்கிறார்கள், இணக்கமான மற்றும் ஆதரவான இல்லற வாழ்க்கையை வளர்க்கிறார்கள். சமைத்தல், சுத்தம் செய்தல் மற்றும் சிறிய பழுதுபார்ப்பு போன்ற நடைமுறை திறன்கள் அவர்களின் பலம். 

கூடுதலாக, அவர்கள் வரவு செலவுத் திட்டம், சேமிப்பு மற்றும் எதிர்கால செலவுகளைத் திட்டமிடுவதில் திறமையானவர்கள், இது குடும்பத்தின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்கிறது.

வீதி புத்திசாலித்தனம், வெளியுலகின் கணிக்க முடியாத தன்மையைக் கையாள தனி நபர்களைச் சித்தப்படுத்துகிறது. நுண்ணறிவின் இரண்டு வடிவங்களும் வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களைப் பூர்த்தி செய்கின்றன. 

சமநிலை முக்கியம் 

ஸ்ட்ரீட் ஸ்மார்ட் மற்றும் ஹோம் ஸ்மார்ட் ஆகிய இரண்டும் வாழ்வில் ஒருவர் வெற்றிகரமான முறையில் பயணிக்க காரணமாக அமைகின்றது. வாழ்க்கைச் சூழ்நிலைகளையும் சவால்களையும் நம்பிக்கையுடனும் எளிதாகவும் எதிர்கொள்ள தனிநபர்களைத் தயார்படுத்துவதால் இந்த சமநிலை முக்கியமானது.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.