Stair Climbing For Weight Loss: படி ஏறினால் எடை குறையுமா? புதிய ஆய்வில் தகவல்!-stair climbing is a positive effect on weight loss - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Stair Climbing For Weight Loss: படி ஏறினால் எடை குறையுமா? புதிய ஆய்வில் தகவல்!

Stair Climbing For Weight Loss: படி ஏறினால் எடை குறையுமா? புதிய ஆய்வில் தகவல்!

Suguna Devi P HT Tamil
Oct 02, 2024 05:15 PM IST

Stair Climbing For Weight Loss: உடல் எடையைக் குறைக்க பல வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக உடல் ரீதியான செயல்பாடுகள் உடல் எடை குறிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

Stair Climbing For Weight Loss: படி ஏறினால் எடை குறையுமா? புதிய ஆய்வில் தகவல்!
Stair Climbing For Weight Loss: படி ஏறினால் எடை குறையுமா? புதிய ஆய்வில் தகவல்!

நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், வழக்கமான உடற்பயிற்சியாக படிக்கட்டுகளில் ஏறுவது உங்களுக்கு ஏற்றதாக இருக்கலாம். பல இடங்களில் படிக்கட்டுகள் உள்ளன. மேலும் சமதளத்தில் நடப்பதை விட படிக்கட்டுகளில் ஏறுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது குறித்த சர்வதேச ஸ்கைரன்னிங் கூட்டமைப்பின் துணைத் தலைவர் லாரி வான் ஹூட்டன் கூறுகையில், 'ஒட்டுமொத்தமாக படிக்கட்டுகளில் ஏறுவது அதிக கலோரிகளை குறைக்க உதவுகிறது. 

கரைக்கப்பட வேண்டிய கலோரி 

உடல் எடையைக் குறைக்க விரும்பும் அனைவரும் ஒரு நாளைக்கு உடலில் கரைக்கப்பட்ட கலோரிகளின் அளவை தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். உடற்பயிற்சியின் ஒட்டுமொத்த ஆற்றல் செலவு உங்கள் எடையைப் பொறுத்தது. சமதள தரையில் நடப்பதை விட, படிக்கட்டுகளில் ஏறும் போது உடலின் கலோரிகள் 20 மடங்கு அதிகமாக எரிக்கப்படுவது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. படிக்கட்டுகளில் இறங்கினாலும், உங்கள் தசைகள் உடலை மெதுவாக்க வேலை செய்ய வேண்டியிருப்பதால், ஐந்து மடங்கு அதிகமாக எரியும்.

ஆய்வு 

இத்தாலியின் மிலன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆல்பர்டோ மினெட்டி படிக்கட்டு ஏறுதல் உட்பட உடற்பயிற்சிகள் தொடர்பாக பெரிய அளவில் ஆராய்ச்சி செய்துள்ளார். இது குறித்து கூறுகையில், ‘ படிகளில் ஏறுவது அனைவரும் செய்யக்கூடிய ஒரு பயிற்சியாகும்’ எனத் தெரிவிக்கிறார். அவர் மேலும் கூறுகையில், “ஒரு கிலோ எடையை படிக்கட்டுகளில் செங்குத்தாக நகர்த்தினால் அது 10 கலோரிகள். எனவே இது கிடைமட்டமாக அல்லாமல் செங்குத்தாக நகரும் கலோரிகளை விட 20 மடங்கு அதிகம்." எந்த தெரிவித்தார். 

சமதளத்தில் நடக்கும் போது இயல்பாகவே உடல் உழைப்பு குறைவகாவே இருக்கும். ஆனால் படிகளில் ஏறும் போது உடலில் அதிகமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த ஆய்வு மூலம் படிகளில் ஏறுவதும், இறங்குவதும் உடல் எடை குறைப்பில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. உடல் எடையைக் குறைக்க பல விதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.