உங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஏன் ஒப்பிடக்கூடாது? எச்சரிக்கை! மோசமான பெற்றோராகிவிடாதீர்கள்!
உங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது ஏன்? மோசமான பெற்றோராகிவிடாதீர்கள் என எச்சரிக்கிறோம்.
உங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் நீங்கள் ஒப்பிட்டு, மோசமான பெற்றோராகிவிடாதீர்கள். அது பெற்றோர் செய்யும் மிகப்பெரிய குற்றமாகும். உங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஏன் ஒப்பிடக்கூடாது. உங்கள் குழந்தைகள் கட்டாயம் மற்றவர்களையும் விட சிறந்தவர்களாக இருக்கவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்ப்பது இயற்கையான ஒன்றுதான். ஆனால், அவர்களை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது. அது அவர்களை பாதிக்கும். ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை கொண்டவர். அவரவருக்கு தனியான பலங்கள், பலவீனங்கள் மற்றும் தனிப்பட்ட குணங்கள் உள்ளது. நீங்கள் ஏன் உங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது. அதற்கான 8 காரணங்கள் என்னவென்று பாருங்கள்.
தன்னம்பிக்கையைக் குலைக்கிறது
ஒப்பீடு உங்கள் குழந்தைகளின் தன்னம்பிக்கையைக் குறைக்கும். அவர்களை அவர்களே குறைத்து மதிப்பிட வைக்கும். இதனால் பாதுகாப்பின்மை உணர்வு மற்றும் தன்னம்பிக்கை குலையும். அவர்கள் தொடர்ந்து இந்த ஒப்பீட்டை கேட்கும்போது, அவர்களே தங்களை குறைத்து மதிப்பிட்டுக்கொள்வார்கள். அவர்கள் சரியில்லை என்று அவர்களே நம்புவார்கள். இது அவர்கள் பெரியவர்களாகும்போது அவர்களைத் தொடரும். இதனால் அவர்கள் தங்களை குறைத்து மதிப்பிட்டுக்கொள்வார்கள்.
உடன்பிறந்தவர்களுடன் சண்டையை ஏற்படுத்தும்
நீங்கள் உடன் பிறந்தவர்கள் ஒருவரையொருவர் ஒப்பிட்டால் அது அவர்களிடையே பொறாமையை வளர்த்தெடுக்கும். அவர்களுக்குள் சண்டையை ஏற்படுத்தும். இதனால் உடன்பிறந்தவர்களிடையே பிணைப்பு இல்லாமல் போய்விடும். இது இருவருக்கும் இடையே தொடர் சண்டை ஏற்பட வழிவகுக்கும். இதனால் ஏற்படும் மனக்கசப்பு அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும். இது குடும்பச்சூழலிலும் எப்போதும் பதற்றத்தை ஏற்படுத்தும்.
ஊக்கத்தை குலைத்து, தன்முயற்சியை தடைபடுத்தும்
நீங்கள் உங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, அது அவர்களை ஊக்கப்படுத்தாது. இதனால் அவர்களால் அவர்களின் இலக்குகளை எட்ட முடியாது. இதனால் அவர்கள் சோர்ந்துபோவார்கள். அவர்கள் தங்களுக்கு பிடித்தவற்றின் பின்னால் செல்லாமல் மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள். இதனால் அவர்களின் கனவுகளை கைவிடுத்து, அவர்களால் அவற்றை அடைய முடியாது என்ற அவநம்பிக்கைக்குள் மாட்டிக்கொள்கிறார்கள்.
தனித்தன்மைக்கு ஊக்கமளிக்காது
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்திறமை இருக்கும். தனிப்பட்ட ஆர்வங்கள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி ஆகியவை இருக்கும். அவர்களை நீங்கள் ஒப்பிடும்போது, அது இயற்கையாகவே அவர்களிடம் இருக்கும் தனித்தன்மைகளைப்போக்கும். அவர்களுக்கு பொருந்தாத ஒன்றில் அவர்களை இருக்கவைக்க கட்டாயப்படுத்தும். இதனால் அவர்கள் அவர்களின் தனியான பலங்களை வளர்த்தெடுக்கமாட்டார்கள். அவர்களுக்கு என்ன தேவை என்பதையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியாது.
பயம் மற்றும் மனஅழுத்தத்தை அதிகரிக்கிறது
தொடர்ந்து ஒப்பிடுவது உங்களுக்கு ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும். குழந்தைகளை பதற்றத்திலும், மனஅழுத்தத்திலுமே வைத்திருக்கும். இதனால் அவர்கள் உண்மையல்லாத வழிகளை வகுத்துக்கொள்வார்கள். இந்ம மனஅழுத்தம் அவர்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும். இதனால் அவர்களின் மனம் மற்றும் உடல் நலன் பாதிக்கப்படும். இது பிற்கால வாழ்க்கையில் அவர்களுக்கு பதற்றக்கோளாறுகளை ஏற்படுத்தும். உளவியல் ரீதியாக உங்கள் குழந்தைகள் பாதிக்கப்படுவதற்காக வழிகளை வகுத்துக்கொடுக்கும்.
நம்பிக்கை குறையும், திறந்த உரையாடல் இருக்காது
உங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் நீங்கள் ஒப்பிட்டு பேசும்போது, அவர்களின் நம்பிக்கையை அது குறைத்துவிடும். உங்கள் மீதான அவர்களின் நம்பிக்யையும் போக்கிவிடும். அவர்கள் உங்களை துணையாக எண்ணமாட்டார்கள். அவர்களை நீங்கள் எப்போதும் மதிப்பிட்டுக்கொண்டே இருந்தீர்கள் என்றால், அவர்களை தவறாக புரிந்துகொண்டீர்கள் என்றால், அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அவர்களை குறைத்து மதிப்பிட வைக்கும். அவர்கள் யாருடனும் வெளிப்படையாக உரையாட மாட்டார்கள். குறிப்பாக உங்களிடம் வெளிப்படையான உரையாடல் இருக்காது. அவர்கள் கட்டாயம் கஷ்டப்படுவார்கள்.
தேவையற்ற எதிர்பார்ப்புக்களை உருவாக்கும்
நீங்கள் உங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டால், அது அவர்களிடம் உங்களுக்கு தெரியாமலே சில எதிர்பார்ப்புக்களை உருவாக்குவதைக் காட்டும். இதனால் அவர்களால் அதை நிறைவேற்ற முடியாமல் போகும் நிலை ஏற்படும். இந்த உண்மையில்லாத எதிர்பார்ப்புகள், அவர்களுக்கு தோல்வி மனப்பான்மை மற்றும் விரக்தியை ஏற்படுத்தும். இதனால் அவர்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் வரும். அவர்களின் உற்சாகம் மற்றும் ஒட்டுமொத்த தன்னம்பிக்கையும் குலைந்துபோகும்.
குழந்தை-பெற்றோர் உறவுக்கு சேதத்தை ஏற்படுத்தும்
ஏற்பது மற்றும் நிபந்தனையற்ற அன்பு என்பது மட்டும்தான், பெற்றோர் – குழந்தைகள் உறவின் அடிப்படை ஆதாரமாகும். ஒப்பீடு, உங்கள் குழந்தைக்கு, உங்களின் அன்பு நிபந்தனைகள் நிறைந்தது எனக்கூறும். குறிப்பாக அவர்களின் செயல்களை அது வறளச்செய்யும். இதனால் நாளடைவில் உங்கள் இருவரிடையேயும் விலகல் ஏற்படும். இதனால் பெற்றோர் – குழந்தைகள் உறவில் பெரிய பாதிப்பு ஏற்பட்டு உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சிதையும் வாய்ப்பு ஏற்படும்.
அவர்களின் தனித்தன்மையைக் கொண்டாடுங்கள்
உங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடாமல், ஒவ்வொரு குழந்தையின் தனித்தன்மையைக் கொண்டாடுங்கள். ஒவ்வொரு குழந்தையின் தனிப்பலன் மற்றும் அவர்கள் முன்னேற வேண்டிய விஷயங்களை அவர்களுக்கு ஆதரவு கொடுப்பது மிகவும் அவசியம். குழந்தைகளை நீங்கள் அவர்களாகவே ஏற்றுக்கொள்ளும்போது, அவர்களிடம் இருந்து சிறந்த விஷயங்களை நீங்கள் வெளிக்கொணர முடியும். அவர்களை நீங்கள் வளரவிடும்போதுதான், அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படும். அவர்கள் எதிலிருந்தும் மீண்டு எழுவார்கள். அவர்கள் தன்னம்பிக்கையான நபர்களாக வருவார்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்