அந்த மனசுதான் சார் கடவுள்.. ‘யாருமே சொல்லல.. அந்த மனுஷன் என பேர சொல்லி சொல்லி.. - பேட்டியில் நெகிழ்ந்த சூர்யா
பேட்டி ஒன்றில் தான் வட இந்திய மக்களுக்கு தான் பரீச்சயமானதற்கு காரணமான நபரை பற்றி நடிகர் சூர்யா மனம் திறந்து பேசினார். ‘அந்த மனசுதான் சார் கடவுள்..’
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நவம்பர் 14ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. இந்தப்படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருக்கும் சூர்யா, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, ஊர் ஊராக சென்று படத்தை புரோமோட் செய்து வருகிறார். இந்த நிலையில், பேட்டி ஒன்றில் தான் வட இந்திய மக்களுக்கு தான் பரீச்சயமானதற்கு காரணமான நபரை பற்றி பேசினார்.
அமீர்கான்தான் எல்லாமே?
ஐஎம்டிபி வீடியோவுக்காக நடிகை திஷா பதானியுடன் இணைந்து சூர்யா கொடுத்த நேர்காணலில் இது தொடர்பாக பேசிய அவர் “ நான் நடித்த படங்கள் இங்கே ரீமேக் செய்யப்பட்டு இருப்பது குறித்து, வட இந்திய மக்களுக்கு பெரிதளவில் தெரியாது என்று நினைக்கிறேன். ஆகையால், நான் அதனை மறுபடியும் கூற விரும்புகிறேன்.
‘காக்கா காக்கா’ முதல் ‘சூரரைப்போற்று’ வரை
நான் நடித்த ‘காக்கா காக்கா’ திரைப்படம் இங்கே ‘ஃபோர்ஸ்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. ‘கஜினி’ கஜினி என்ற பெயரில் ரீமேக் ஆனது. சிங்கமும் அதே பெயரில் பல வித திருத்தங்களுடன் ரீமேக் ஆனது. தற்போது ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ‘சர்ஃபிரா’ என்ற பெயரில் ரீமேக் ஆகி இருக்கிறது. இந்த ரீமேக் படங்களில் அமீர்கான் மட்டும்தான், கஜினி படத்தின் போது, என்னையும், ஒரிஜினல் வெர்ஷனில் நடித்த படக்குழுவினரையும் நினைவு கூர்ந்தார்.
பொதுவாக ஒரு படம் ரீமேக் செய்யப்பட்டு விட்டால், ஒரிஜினல் வெர்ஷனில் நடித்த நடிகர்கள், இயக்குநர்கள் குறித்து பெரிதாக விவாதிக்கப்படமாட்டாது. ஆனால், முதன்முறையாக, கஜினி படத்தின் போது, அமீர்கான் அதனைச் செய்தார். ஆம், அவர் கஜினி படத்தின் ஒரிஜனல் வெர்ஷனில் நடித்த நடிகரான என்னையும், அதில் நடித்த பிற நடிகர்கள், மற்றும் குழுவினரைப்பற்றி பேசினார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவர் யாரும் பேசுவதற்கு முன்னதாக அதனை பேசினார்.
வட இந்திய மக்கள்
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், வட இந்திய மக்கள் என்னை தெரிந்துகொள்வதற்கு முக்கியமான காரணமாக இருந்தது அவர்தான் என்று நினைக்கிறேன். நான் நடித்த இதர திரைப்படங்களில் சிலவையும் அவரின் இதயத்திற்கு நெருக்கமானதாக இருந்ததால், அவர் மீண்டும் மீண்டும் என்னுடைய பேரை வட இந்திய மக்களிடம் பேசி என்னை அவர்களுக்கு பரீச்சயமாக்கினார். அதனால்தான் அவர் கஜினி படத்தை ரீமேக் செய்தார். அந்தப்படம் மொழிக்கு இடையேயான தடைகளை உடைத்தது
2005 ஆம் ஆண்டில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினியில் நடித்ததன் மூலம் சூர்யாவின் சினிமா மார்க்கெட் அடுத்தக்கட்டத்தை நோக்கிச் சென்றது. அந்தப்படத்தில் நியாபக மறதி நோயால் பாதிக்கப்பட்ட பெரிய தொழிலதிபராக அவர் நடித்திருந்தார். இந்தப்படத்தைதான் அமீர்கான் இந்தியில் ரீமேக் செய்திருந்தார். 2008 ம் ஆண்டு அந்தப்படம் ரீலிஸ் ஆனது. இரண்டு திரைப்படங்களுமே பெரிய வெற்றியை பெற்றன.
கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா படத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்ரமணியம், யோகி பாபு, கோவை சரளா, ஆனந்தராஜ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் நவம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
3டி யில் அசத்தப்போகும் படம்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொத்தம் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ள இந்தத் திரைப்படம் 3டி தொழில் நுட்பத்திலும் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டடிருக்கும் நிலையில், படம் 2 மணி நேரம் 34 நிமிடங்கள் ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கங்குவா படத்தின் கதை
கங்குவா படத்துக்கு 700 ஆண்டுகளுக்கு முந்தைய உலகத்தை சிறுத்தை சிவா உருவாக்கி உள்ளார். அங்கு 3 தெய்வங்களை வழிபட்டு வந்த மக்களுக்குக்கிடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் யுத்தமாக மாறுகிறது. இதில் யார் வெல்கிறார்கள் என்பது தான் படத்தின் கதையாக உள்ளது.
கங்குவாவின் உலகம் நெருப்பை கடவுளாக கும்பிடுகிறார்கள். அதேபோல் ரத்தத்தை கடவுளாக வணங்கிறார்கள் உதிரனின் உலகம். நீரை கடவுளாக வழிபடும் மக்கள் இருக்கிறார்கள். இந்த மூன்று உலகங்களுக்கு இடையே நடைபெறும் போட்டியை பேண்டஸி, ஆக்ஷன் கலந்து சொல்லப்பட்டிருக்கிறது.
டாபிக்ஸ்