Shavasana Benefits : உடற்பயிற்சிக்கு பின் இந்த ஒரு ஆசனத்தை மட்டும் செய்யுங்கள்.. எத்தனை நன்மைகள் கிடைக்கும் பாருங்க!
Shavasana Benefits : யோகா மட்டுமல்ல, குறிப்பாக எந்த உடற்பயிற்சிக்கு பிறகும், கடுமையான வேலைக்கு பிறகும் சவாசனா செய்வதன் முழு பலனையும் பெறலாம். ஓய்வு இல்லாமல் உடற்பயிற்சி அல்லது யோகாவின் முழுப் பலனையும் பெற முடியாது. நடைப்பயிற்சி, ஜாகிங், ஜிம் உடற்பயிற்சி, யோகா போன்ற எந்த உடற்பயிற்சியையும் செய்யலாம்.

அனைவரும் சவாசனம் செய்கிறார்கள். ஆனால், பலருக்கு தாங்கள் செய்வது சவாசனா என்று கூட தெரியாது. ஆம், சோர்வாக இருக்கும்போது, படுக்கையில் ஓய்வெடுக்கிறோம். கைகளை மடக்காமல் படுத்து ஓய்வெடுப்பது நல்லது. அஞ்சு நிமிஷம் அப்படியே படுத்தால் மறுபடியும் ஆற்றல் வரும். இந்த சவாசனம் யோகாவில் மிக முக்கியமான ஓய்வு போஸ். அதாவது உடலுக்கு இருதயம் போன்ற இயங்கு உறுப்புகள் தவிர்த்து உடலின் மற்ற உறுப்புகள் அனைத்துக்கும் முழுமையான ஓய்வு நிலை. சவாசனா என்பது ஒவ்வொரு ஆசனத்திற்குப் பிறகும் ஒரு யோகா விதி.
யோகா மட்டுமல்ல, குறிப்பாக எந்த உடற்பயிற்சிக்கு பிறகும், கடுமையான வேலைக்கு பிறகும் சவாசனா செய்வதன் முழு பலனையும் பெறலாம். ஓய்வு இல்லாமல் உடற்பயிற்சி அல்லது யோகாவின் முழுப் பலனையும் பெற முடியாது.
நடைப்பயிற்சி, ஜாகிங், ஜிம் உடற்பயிற்சி, யோகா போன்ற எந்த உடற்பயிற்சியையும் செய்யலாம். ஆனால் அதன் முழு பலனையும் பெற நீங்கள் பெற கடைசியாக சவாசனம் செய்ய வேண்டும். சவாசனம் மிகவும் நன்மை பயக்கும்.
