Health Tips: இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்தால் இத்தனை நன்மைகளா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Health Tips: இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்தால் இத்தனை நன்மைகளா?

Health Tips: இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்தால் இத்தனை நன்மைகளா?

Karthikeyan S HT Tamil
Nov 21, 2023 08:29 PM IST

இரவு உணவுக்கு பிறகு நிதானமாக நடைப்பயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

நடைப்பயிற்சி (கோப்புபடம்)
நடைப்பயிற்சி (கோப்புபடம்)

காலை நேர நடைப்பயிற்சியை போல் விறுவிறுப்பாக மேற்கொள்ள வேண்டியதில்லை. நிதானமாக நடந்தாலே போதுமானது. அப்படி இரவு உணவு சாப்பிட்ட பிறகு நிதானமாக நடைப்பயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

  • இரவு உணவு உட்கொண்ட பிறகு நடைப்பயிற்சி செய்தால் கிடைக்கும் உடனடி நன்மைகளில் ஒன்று செரிமானம் மேம்படுவதுதான். செரிமான பாதை வழியாக உணவை சுமூகமாக நகர்த்த உதவும். உணவு உட்கொண்ட பிறகு அடிக்கடி நெஞ்செரிச்சல், அசிடிட்டி பிரச்னையை அனுபவிப்பவர்களுக்கு இரவு நேர நடைப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.
  • இரவு உணவிற்குப் பின்னர் நடைப்பயிற்சி மேற்கொள்வது கூடுதல் கலோரிகளை எரிக்கவும், உடல் எடையை சீராக நிர்வகிக்கவும் உதவும். குறிப்பாக அதிகப்படியான கலோரிகளை கொழுப்பாக சேமித்து வைப்பதை தடுத்து ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவும்.
  • இரவு உணவிற்கு பிந்தைய நடைப்பயிற்சி அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு உதவும். இரவில் மனநிலையை மேம்படுத்துவதோடு, உடலில் எண்டோர்பின் ஹார்மோன்களின் செயல்பாட்டை அதிகரிக்க செய்யும். இந்த ஹார்மோன் மனச்சோர்வை எதிர்த்துப் போராடவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் என்கின்றனர் நிபுணர்கள்.
  • இரவு நேர நடைப்பயிற்சி மனதை ரிலாக்ஸாக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும் வாய்ப்பையும் வழங்கும். இரவு நேரத்தில் நடைப்பயிற்சி செல்லும் போது வெளிப்புற காற்றை ஆசுவாசமாக சுவாசிப்பது மனதை அமைதிப்படுத்தவும், பதற்றத்தைக் குறைக்கவும் உதவும்.
  • இரவு உணவிற்கு பிந்தைய நடைப்பயிற்சி தூக்கத்திற்கு இன்றியமையாதது. ஆழ்ந்த, நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்கவும் உதவும். ஏனேனில் இந்த உடல் செயல்பாடு தூக்கமின்மை பிரச்னையை சரிசெய்ய உதவும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.