ஷார்ப்பான கண் பார்வை; ரத்த நாளங்கள் பாதுகாப்பு என அசத்தும் முள்ளங்கி கீரை! முழு நன்மைகள் என்ன?
ஷார்ப்பான கண் பார்வை, ரத்த நாளங்கள் பாதுகாப்பு என அசத்தும் முள்ளங்கி கீரையின் முழு நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
முள்ளங்கியை சாப்பிடும்போது அதன் கீரைகளை நாம் தூக்கி வீசுகிறோம். ஆனால் அவற்றில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் குவிந்துள்ளன. அந்த கீரைகளை சாப்பிடக்கூடாது அல்லது வீசிவிடவேண்டும் என்றுதான் நாம் எண்ணுகிறோம். ஆனால் முள்ளங்கி கீரையில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் ஒளிந்துள்ளன. இது உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கின்றன. முள்ளங்கிக் கீரையை நாம் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை. ஆனால் அதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை நீங்கள் உங்கள் உணவில் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதை உங்கள் சரிவிகித உணவின் அங்கமாக்கிக்கொண்டால் அது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரும்.
முள்ளங்கி கீரையின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?
நோய் எதிர்ப்பு மண்டலம்
முள்ளங்கி கீரையில் அதிகளவில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் உள்ளன. முள்ளங்கியை விட இது அதிகம். அதனால் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்ய இது மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலில் ரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. உங்கள் உடலின் எதிர்ப்பாற்றலை வலுப்படுத்துகிறது. பொதுவான நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்து போராடுகிறது.
உடல் எடை இழப்பு
இந்த கலோரிகள் குறைவான கீரை, எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது. இதன் சுவை உங்கள் உடல் எடை குறைப்பு பயணத்தின் நண்பனாகிறது. உங்கள் உடலின் வளர்சிதைக்கு தோழனாக வேண்டுமெனில், உங்கள் உணவில் முள்ளங்கி கீரை பாசிபருப்பு கூட்டை அடிக்கடி சேர்த்துக்கொண்டு, உடல் எடையை எளிதாக குறைத்துவிடுங்கள்.
இதய ஆரோக்கியம்
முள்ளங்கி கீரையில் உள்ள ஆந்தோசியானின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட், உங்கள் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் தேவையான ஒன்று. இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள், உங்கள் உடலில் இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தும், ஆபத்தான ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன.
சரும ஆரோக்கியம்
முள்ளங்கியின் இலைகளில் அதிகளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இது சருமத்தில் கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்க மிகவும் முக்கியமானது. இந்த ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் நெகிழ்தன்மையை அதிகரித்து, சருமம் பொலிவுபெற உதவுகின்றன. இது உங்களுக்கு ஆரோக்கிய சருமத்தைக் கொடுக்கிறது. முள்ளங்கி கீரைகள் உட்கொள்வதை வழக்கமாக்கிக்கொண்டால் அது உங்கள் சருமத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கிறது. இது ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
ரத்த நாளங்களின் பாதுகாப்பு
முள்ளங்கி கீரைகளில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் உங்கள் ரத்த நாளங்களின் ஆரோக்கியம் மற்றும் அதன் நெகிழ்தன்மையை அதிகரிக்கின்றன. இதனால் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
நீரிழிவு நோய்
ஒரு கப் முள்ளங்கி கீரையில் உள்ள 1.2 கிராம் கார்போஹைட்ரேட்கள் மற்றும் 0.5 கிராம் நார்ச்சத்துக்கள் நீரிழிவு உணவின் முக்கிய அங்கமாகும். எனவே முள்ளங்கி கீரையை உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் அது உங்களுக்கு ரத்த சர்க்கரை அளவை உயர்த்தும், இதனால் நீங்கள் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க முடியும்.
கண்பார்வை கூராகும்
கண் பார்வையை கூராக்க வைட்டமின் சி சத்துக்கள் தேவை. ஒரு கப் நறுக்கிய முள்ளங்கி கீரையில் கிட்டத்தட்ட ஒரு நாளின் தேவையில் 52 சதவீதம் வைட்டமின் ஏ சத்துக்கள் உள்ளது. இது உங்கள் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், பார்வையை கூராக்கவும் உதவுகிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்